காத்திருத்தல் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்றுத்தருகிறது ;அனுபவங்களை தருகிறது.
காத்திருப்பதை பலரும் வெறுக்கின்றனர் ஏன்?. இதற்கு முக்கியமான காரணம் இது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. சலிப்பைத் தருகிறது. காத்திருத்தல் நேர விரயம் ; இப்படி பல காரணங்களை அடுக்குகிறார்கள் காத்திருந்தவர்கள்.
காத்திருத்தலை காலை எழுந்ததிலிருந்து தினமும் பல சமயங்களில் அனுபவிக்கிறோம்.
பஸ்-சுக்காக, ரயிலுக்காக,விமானத்திற்காக,டாக்டரிடம், ஏன் டாய்லெட்டிற்காகக் கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது. இண்டர்வியுவில் காத்திருத்தலே முக்கிய அவதானிப்பு.
இரண்டு நிமிட காத்திருத்தலை தவிர்த்ததினால் வாழ்க்கையின் பெரும் இழப்புகளை சந்தித்தவர்கள் உண்டு. பல மணிநேர காத்திருத்தலினால் சாதித்தவர்களும் உண்டு.
சில நொடிகள் கூட காத்திருக்காமல் கம்யூட்டர் முன் பல "ஷிட்" போடுபவர்கள் உண்டு.
அதே போல சில நொடிகள் சிக்னலுக்கு காத்திருக்காமல் விபத்து எனும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது சார்ஜென்டிடம் சிக்குபவர்களை தினம் தினம் பார்க்கலாம்.
எங்கேயும் "Q" தான். மொபைல் போனில் " யூ ஆர் இன் க்யூ" என்றாலே தரையை உதைப்பார்கள் ஒரு சிலர்.
ஜப்பானில் சுனாமி வந்தபோது வரிசையில் காத்திருந்து பொட்டலம் வாங்கி சென்றதை செய்தியாக போட்டார்கள் ஏன் நம்மவர்களுக்கு அதிசயமே "அப்படி ஒரு ஒழுங்கு, பொருமை "
எந்த காரியத்திலும் நாம் முதலில் நெகட்டிவாக சிந்திப்பதே காத்திருத்தல் கசக்க காரணம் என்று சொல்லலாம்.
என்ன சொல்றீங்க காத்திருத்தல் இனிக்குமா ? ஏன் இல்லை இதை தனது வருங்கால துணைக்காக காத்திருபவனிடமோ ;ளிடமோ கேளுங்கள் அந்த தவிப்பு அதன் பின் கிடைக்கும் சந்தோசத்தை அடுக்கடுக்காக சொல்லுவார்கள்.
குழந்தையின் பிறப்பிற்காக காத்திருக்கும் தாயின் சந்தோசம் பிரசவித்த பின் எல்லையற்றதாகிறது. அது அவளுக்கு காத்திருத்தல் கற்றுக்கொடுத்த அனுபவம்.
ஓவியன்,இசைஞானி,கலைஞன்,கவிஞன்,விஞ்ஞானி,மாணவன்..நீங்கள், நானும் விரும்பும் மனப்பூர்வமான ரிசல்ட் வரும் வரை தான் உருவாக்கும் நிகழ்விற்காக காத்திருக் கிறான் ( ; காத்திருக்கிறோம்)
அப்படியானால் காத்திருத்தல் சுகமானது பின் ஏன் பல மன அலைக்கழிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது? . அவரவர் மன பக்குவ நிலையை பொருத்ததே. வாழ்க்கையின் எக்ஸ்பீரியன்ஸே அந்த பக்குவத்தை நமக்கு அளிக்கிறது. அந்த கஷ்ட சமயங்களில் இதுவும் கடந்து போம் என்றோ..? இதுவும் நல்லதற்கே என்ற பாசிடிவ் எண்ணங்களை கைக்கொள்ள வேண்டும். எதையும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே...
சமீபத்தில் காத்திருத்தல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அந்த அரை மணி நேரத்தை எப்படி போக்குவது ? என்ற எண்ணம் என் மனதில் சும்மா எதையும் சிந்திக்காமல் வேடிக்கை பார்பது கூட நம் மனதில் பல தாக்கங்களை அனுபவங்களை ஏற்படுத்துகிறதோ ?
இன்னும் நேரம் இருக்கிறதே என்று மிக மெதுவாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் டக் கென்று வண்டியை நிறுத்தத் தோன்றியது.
அது ஒரு பூங்கா நுழைவாயிலின் முன் இருபுறமும் பெரிய மரங்கள் அம்மரங்களில் பல வெளவாள்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன இது கூட காத்திருப்பு தான் இரவில் தானே அவற்றிற்கு வேலை.
பள்ளிக்குழந்தைகள் நுழைவு சீட்டுகளை வாங்கக் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு வெயிலும் காத்திருத்தலும் ஒரு பொருட்டே அல்ல.
ஏனெனில் குதூகலமும் ஆர்வமும் அவர்கள் மனதில். அக்குழந்தைகளின் குதூகலத்தை பார்க்கும் நாமும் அக்குழந்தைகளாக மாறிவிட ஏங்குகிறோம்.
பென்சன் வாங்கும் வயதானவர்கள் அந்த வெயிலிலும் ஓய்வில்லாமல் ஏதேதோ அரசு பாரம்களை எழுதிக்கொண்டும்,விவாதித்து கொண்டும் இருக்கின்றனர். ஏன் அவர்கள் ஓய்வெடுப்பதில்லை...
ரெப் வேலை செய்யும் இளைஞர்கள் போனின் அடுத்த காலுக்காக, உத்தரவுக்காக வெறுமனே அரட்டை அடித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்பு அவர்களுக்கு வேலை கொடுக்கிறது.
கார்ப்ரேசனில் ரோட்டை கூட்டி வேலை செய்யும் பெண்கள் மரநிழலில் ஓய்வெடுத்தபடி அடுத்த வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு மொபைல் ஏடிஎம் வாகனம் கடந்து சென்றது. (டெக்னாலஜியில் எவ்வளவு முன்னேற்றம்)
சும்மா இருப்பதே சுகம் என சோம்பேறிகளும் ப்ளாட்பார ஓரங்களில் தூங்குகிறார்கள்.
ஒரு பைக்கின் முன் டூம் -விண்ட்ஷீல்ட் கண்ணாடியில் ஆங்கில வாசகத்தை செகுவேராவின் படத்தோடு எழுதி வைத்திருந்தான்.
" ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால்
அவருக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமெடுக்காதே
அவருக்கு வாழ்க்கை
அவற்றை தாண்டிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது."
இப்படி பல காட்சிகள் விரிந்தன. இந்த காத்திருத்தலும்
இதை எழுதவும் என்னை தூண்டியது.
நமக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கிறது காத்திருத்தல்...,
(ஒரு கவிதை )
விருட்சத்திற்காக... விதையும்;
மலர்வதற்காக..மொட்டும்,
தென்றலுக்காக...கொடியும்;
தூரலுக்காக... துளிரும்;
விடியலுக்காக... இரவும்
தாயிற்காக.. குஞ்சும்;
எசமானருக்காக.. நாயும்;
விரல் மீட்டலுக்காக.. வீணையும்;
.....காத்திருக்கிறது.
காத்திருப்பாயா ?...
எனக்காக...நீ
காத்திருத்தல் தவிர்க்க இயலாதது..!
ReplyDeleteஆனால்..ஒன்று மட்டும்
எதற்காகவும் யாருக்காகவும்
காத்திருக்காது!
அது...
காலம்!
வாழ்த்துக்கள்!
நன்றி ரமேஷ் சார்.
Deleteகாத்திருப்பு
ReplyDeleteஒவ்வொருவரின் அந்த அந்த நேரத்தின் மனநிலையை பொறுத்தே.....
என்னை பொறுத்தமட்டில் அது ஒரு தனி சுகம் தான் அனுபவித்தால் புரியும்
நல்ல பகிர்வு நன்றி
கருத்திற்கு மிக்க நன்றி முத்தரசு :-)
Deleteயாருக்காக யார் காத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது சுகமா இல்லையா என்பது!
ReplyDeleteசரிதான் சென்னைப்பித்தன் சார்.
Deleteநல்லதொரு பகிர்வு
ReplyDeleteவாழ்வில் காத்திருத்தம் என்பது மிகவும் அவசியமான ஒன்றுதான்.
காத்திருத்தலால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பலனெதுவும் கிட்டவில்லையென்றாலும் அந்த காத்திருப்பே பெரும் பலமாக அமைந்துவிடுகிறது.
சிட்டுக் குருவிக்கு கருத்தளிப்பிற்கு எனது நன்றி. கூடவே ப்லோவர் ஆகிட்டிங்க சந்தோசம்.
Deleteஎல்லாவற்றையும் ரசிக்கும் மனப்பக்குவம் வந்து விட்டால் காத்திருப்பும் சுகமே...
ReplyDeleteமனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சதவிகிதத்தில் இருக்கிறது. அது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.வயதிற்கேற்ப.. நீங்கள் குறிப்பிடுவது போல் மனதை பக்குவப்படுத்திக் கொள்வதை கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும்.
Deleteஉனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்களும் முளைக்கும்..
ReplyDeleteகாத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால் வேறு வழி இல்லையே!! இந்தியாவில் மும்பையில் பேருந்தின் உள்ளே நுழைதல், திரையரங்கு என எங்கே சென்றாலும் வரிசையில் நின்றே செல்கிறார்கள், அடித்து பிடித்துக் கொண்டு முந்திச் செல்வதில்லை. காத்திருக்கும் நேரத்தில் பயனுள்ள புத்தகங்களைப் படிக்கலாம், அதுவும் முடியாவிட்டால் இறைவனை நினைத்துக் கொண்டு இருக்கலாம்!!
ReplyDeleteகாத்திருப்பு என்பது அவசியமான ஒன்றாகிப் போனது அனைவர் வாழ்விலும். அது பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முயற்சி வேண்டும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !
Delete