<< சுவடுகளை தேடி பகுதி(3) படிக்க இங்கு சொடுக்கவும்>>
பேரூர் கோவில் பற்றிய குறிப்புகளை பெரிய புராணத்தில் ஆயர்கோன் கலிகாமர்), பேரூர் புராணம், மும்மணிக்கோவை பாடல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டில் (A.D) ராஜசிம்மவர்மன் என அழைக்கப்பட்ட நரசிங்க போதரன்யா -II பல்லவ ஆட்சியின் போது இக்கோயில் சீரமைக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம் களிடையேயான உறவு திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிகான் பேரூர் விஜயக்குறிப்புகளில் அறியலாம். மேலும் "தீவட்டி சலாம் " எனும் மாலை பூசை அவர்களின் பெயரால் செய்யப்படுவதை எடுத்துக்காட்டாக காண முடிகிறது.
திருவாதிரை, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். இன்றும் கேரளத்தினர் ஒவ்வொரு ஆண்டும் "மகாலய அமாவாசைக்கு " வந்து நொய்யலில் முன்னோர்க்கு வழிபட்டு செல்கின்றனர்.
பேரூர் கோவிலை சிறப்பித்து பாடல்கள் எழுதிய சான்றோர் :
அவிநாசிக் கவிராயர் (திங்களூர் நொண்டி நாடகம்), கந்தசாமி சுவாமிகள்(பேரூர் கோவை மற்றும் ராமானந்த சுவாமி பிள்ளைத்தமிழ்), சிற்றம்பல கவிராயர் (பாசுரம் (Hymn) பேரூர் மற்றும் அவிநாசி கோவில்கள்), பெரும்புலவர் நடேச கவுண்டர்(மயில் விடு தூது), 12ஆம் நூற்றாண்டிணன் குணவீர பண்டிதர் (கலந்தை -கிணத்துகடவு அருகில் உள்ள ஊர்) தமிழ் இலக்கணம் மற்றும் நேமிநாதம், நந்தி மாலை) குறிப்பிடத்தக்கவர்கள்.
பேரூர் கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானையுரி போர்த்த மூர்த்தி :
ஒரு யானையை பிளந்து அதன் தலை மேல் ஒற்றை காலில் நிற்பது போன்றதோற்றம். நேர்த்தியான நீள்வட்ட வடிவம் யாணையின் நான்கு கால்கள் வெளி தெரிகிறது. நான்கு ஜோடி கைகளின் அபிநயம் நான்குவிதமான தேற்றப் பொழிவு. . விரல்களின் நக அமைப்பு, அணிந்துள்ள அணிகலன்களின் துள்ளியம் நம்மை வியக்க வைக்கிறது.
ஆறுமுகப்பெருமான் :
தமிழ் கடவுள் முருகன் மயில் வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள நிலை.மயிலின் வாயில் பாம்பு. மயில் இறகின் தெளிவு. ஒரே வடிவமைப்பிளான அறு முகங்கள், ஆறு சோடி கைகள். ஒவ்வொரு கையும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.
ஊர்த்துதாண்டவர் :
பார்ப்பவர்களை ஒருகணம் ஸ்தம்பிக்க செய்யும் தாண்டவம் புரியும் நிலை. ஒவ்வொரு கையையும் மறைத்து பார்பதாக கற்பனை செய்தால் நேரிலே நடனம் புரியும் அற்புதத்தை உணரலாம். எட்டு திசைக்கு எட்டு சோடி கைகளின் அபினயம்.
நர்த்தன கணபதி :
எலி வாகனத்தின் மீது நடம்புரியும் தோற்றம்.
பிச்சாடனார் :
நளினமான அழகிய தேற்றப் பொழிவு.
அக்னி வீரபத்ரர் :
கோபத்துடன் வாலேந்தி நிற்கும் தோற்றம்.
அகோர வீரபத்ரர் :
சூலாயுத்தால் முயலகனை குத்துவது போன்ற தேற்றம். தீயதை (தீவினை) அழிப்பதை நினைவு படுத்துகிறது.
ஆலங்காட்டு காளி :
சிலையின் இடப்புறம் நின்று நோக்கினால புன்முருவலும். வலப்புறம் நின்று நோக்கினால் ருத்ரமும் ஒருங்கே கொண்டு விளங்கும் காளி.
குறிப்பு : இச்சிலைகளை நேரில் நீங்கள் பார்த்தால் முன்புரம் கம்பி வலை போட்டிருப்பார்கள். படத்தில் வலை இல்லா தோற்றம்.
அற்புதமான சிலைகள்பகிர்வுக்கு நன்றி.(1978 இல் விஜய் ஸ்கூட்டர் வாங்கியபோது பேருர் கோவிலில்தான் பூஜை போட்டேன்!)
ReplyDeleteநீங்கா நினைவுகள், நன்றி.
Deleteபடத்தில் வலை இல்லா தோற்றம் அற்புதமான பகிர்வு .. ஒவ்வொரு சிலையின் முன்பும் நீண்ட நேரம் நின்று ரசித்துப் பார்த்து வியந்திருக்கிறேன்..
Deleteபாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..