அபுதாபியில் (UAE) 76 அடி உயர காற்றாலை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனுடைய இறக்கைகள் வேகமாக சுழலும் போது காற்றை உள்ளிழுக்கிறது. கம்பரசர்கள் கொண்டு காற்றின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி குளிரூட்டும் எந்திரங்கள் மூலமாக மேன்மேலும் குளிரவைக்கப்படுகிறது. அதானால் நீர் துளிகள் தொடர்ந்து உருவாகிறது
இந்த நீர்த்துளிகள் குழாய் மூலமாக நீர் தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. ஒரு மணிநேரத்தில் 16 காலன் தண்ணீர் சேகரமாகிறது. ஒரு நாளைக்கு 265 காலன்கள் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். இது காற்றின் வேகம் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பொருத்தது.
பாலை வனப்பகுதிகளுக்கு இக்கருவி பயனுள்ள ஒன்று.
=====================================================
உசைன்போல்ட் போல வேகமாக ஓடும் ரோபோ இயந்திரம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். இவர் நூறு மீட்டரை 28 mph வேகத்தில் கடந்தார். ரோபோ அவரை விஞ்சியது 28.3 mph.
=======================================
இங்கிலாந்தில் காணப்படும் பென் ராப்ட் (Fen Raft spider) எனும் சிலந்தி வகை பூச்சிகளை மட்டும் இன்றி சிறிய வகை மீன்களையும் பிடித்து உணவாக்கிக்கொள்கிறது. இந்த ராட்சச வகை சிலந்தியின் கால்களில் எக்கச்சக்க நுண்ணிய மயிர்கால்கள் இருப்பதால் இது நீரின் மேல் இலகுவில் நடக்கிறது. இங்கிலாந்தில் அருகிவரும் சிலந்தி இது.
========================================
குயின்ஸ்லாந்தில் காணப்படும் 200 ஆண்டு காலம் உயிர்வாழும் ஆமை.
----------------------------------
”சீன சிறுத்தை” பரிசு பெற்ற புகைப்படம்.
----------------------------------
”ருவாண்டா சிம்பன்சி” இரட்டை சிம்பன்சி குட்டிகள் பிறப்பது அரிது. .
பல அறிவியல் தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteபடங்கள் சொல்லவா வேண்டும்...? பிரமாதம்... பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
பதிவிட்ட உடனே உங்கள் வாழ்த்து கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
Deleteபடமும் செய்திகளும் அருமை! நன்றி!
ReplyDeleteநன்றி ஐயா! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
Deleteபடங்கள் ரசிக்கும்படியாக இருந்தன சூப்பர்.
ReplyDeleteநன்றிங்க !
Deleteபோற போக்க பாத்தா டிஸ்கவரி சேனல பீட் பண்ணிடுவீங்க போல ...!
ReplyDeleteபுது டெம்ப்ளேட் நல்லாருக்குங்க...!
சிம்பன்சி க்கு டபுள் லைக்ஸ் ...! ஹா ஹா ஹா ..!
:) அது சேனல்ங்க.. இது ப்ளாக்குங்க ! நன்றி ஜீவன் சுப்பு.
Deleteகலாகுமரன்,
ReplyDeleteநல்ல சுருக்கமான அறிவியல் தொகுப்புகள்.
இந்த காற்றாலை மூலம் குடிநீர் தயாரிக்கும் திட்டம் அவ்வப்பொழுது புது வடிவம் பெற்று வந்துக்கொண்டே இருக்கிறது,ஆனால் இன்னமும் பெரிய அளவில் பரவக்காணோம். முன்னர் நான் கூட காற்றினிலே வரும் குடிநீர்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்!
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: காற்றினிலே வரும் குடிநீர்!
சொல்லப்போனால் முதன் முதலில் காற்றாலைகள் உருவாக்கப்பட்டதே நீர் இறைக்கத்தான், மின் மோட்டார்/டீசல் மோட்டார்லாம் இல்லாத காலத்தில் காற்றலைகள் தான் பம்ப் செட். இப்பவும் ஹாலந்து போன்ற நாடுகளில் காற்றாலை பம்ப் செட் ஓடுதாம்.
கடல் நீரை குடி நீராக்குவதை விட இது செலவு குறைவோ! காற்றாலை பம்பு செட்டுகள் ஏற்றம் மாதிரியா? தகவலுக்கு நன்றி. அப்பப்ப இது மாதிரி மூளைக்கு தீனி போடுங்க (ஙே..என்னோட மூளைக்கு ! )
Deleteசிம்பன்சி கலக்கல்..
ReplyDeleteகாற்றாலை பற்றிய தகவல்கள் பயனுள்ளவை
நன்றி நண்பரே டிவின்ஸ் என்றாலே எப்போதும் ஒரு கவர்ச்சி உண்டு இல்லையா?
Deleteபல அறிவியல் தகவல்கள படங்கள் என சிறப்பான பகிர்வு.
ReplyDeleteகாற்றாலை நல்ல தகவல் .
நன்றி மாதேவி முதல்ல காற்றாலை தகவலை மட்டுமே பதிவு போட நினைத்தேன். படங்கள் கொசுறுதான் !
Deleteஅருமையான தகவல்கள் நண்பரே...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
அபுதாபியில் நிறுவப்பட்டுள்ள இந்தக் காற்றாலையை
ReplyDeleteநான் நேரில் பார்த்திருக்கிறேன்...
உங்கள் கருத்து பதிவுக்கு வழு சேர்க்கிறது. தகவலுக்கு நன்றி நண்பரே!
Delete