ஏப்ரல் 22 ல் கொண்டாட வேண்டும் என்றும் இதை 1970 ல் முதலில்
ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவைச்சேர்ந்த கைலார்ட் நெல்சன்(
(Senator Gaylord Nelson) அப்போது முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 20ல் என்று சொல்லப்படுவதற்கு அந்த நாளில் பூமியின் வட கோளார்த்ததிலும், தென்கோளார்த்ததிலும் இரவும் பகலும் சமமாக இருக்கு என்கிறாங்க. அதுமட்டும் இல்லை வட பாதியில் வசந்தகாலமும், தென்பாதியில் இலையுதிர் காலமும் தொடங்குது.
எந்த நாளிலும் இந்த பூமிக்கு நம்மால் ஏற்படுத்தும் கெடுதலை மட்டுப் படுத்தவேண்டும் என்பதை உணர வேண்டும்.
இந்த தினந்திற்காக ஒரு கொடியும் உண்டு(Ecology flag),பாடலும் (Earth Anthem)உண்டு. எப்போது தொழிற்புரட்சி (18 ம் நூற்றாண்டு) ஏற்பட்டதோ அப்போதிருந்து சுற்று சூழல் பாதிப்படைந்தது.
மனித இனம் தொடங்கிய காலத்திலிருந்து இந்த பூமி பலப் பல விதங்களில் மனிதனால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதை மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம் (Anthropogenic) எனலாம்.
மக்கள் தொகைப் பெருக்கம் இந்த பூமி மனிதர்களால் பந்தாடப்படுவதற்கு காரணமாயிருந்தது என்பது பல காரணங்களில் ஒன்று.
மனிதன் தான் தான் உயர்ந்தவன் என்று பெருமிதம் கொள்கிறான் அதோடு நின்று விடுவதில்லை எல்லாவற்றையும்..எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர ஆசைப்படுகிறான். விழைவு தாறுமாறான அழிப்புகள்...காடுகளை அழிக்கிறான் நகரத்தை ஏற்படுத்துகிறான்..நகரத்திலும் மரங்களை நாசப்படுத்துகிறான்.
அதிக உரங்கள்,வேதி மருந்துகள் கொண்டு ஏற்படுத்திய பசுமைப்புரட்சி என்பதெல்லாம் ஒரு எல்லைக்குமேல் இந்த பூமியை ஏதும் விழையாத மலட்டு நிலமாக்கிவிட்டன என்பதே உண்மை.
புதுப் புது கருவிகள் பலப்பல டெக்னாலஜி இந்த பூமியை இதுள்ள ஜீவ ராசிகளை நம்மையும் சேர்த்து படாத பாடு படுத்துகின்றன என்பதும் மறுக்க இயலாது.
நாம் இந்த பூமியில் இருந்து பெறும் வளங்கள் பல ஆனால் இந்த பூமிக்கு செய்யும் கைமாறு என்னவோ சிதையாத நெகிழி குப்பை கூழங்களை (பிளாஸ்டிக்), அணு கழிவுகளை, சாயக்கழிவுகளை, ஓசோன் ஓட்டை ஏற்படுத்தும் மாசுக்கள், நச்சுபுகைகளை, இன்னும் பலப் பல.
சாலை விரிவாக்கத்திற்காக அனேக மரங்களை சாய்த்துவிட்டு இன்று பருவ மழை பொய்த்துப்போய் பரிதவிக்கிறது கோவை மாநகர்.
கடந்த சனிஅன்று(20.4.2013) சில தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ”எர்த் டே 2013 “ கோவை ப்ரூக் ஃபீல்ட் மாலில் ஏற்படுத்தினர். ஐநூறு பேர்களுக்கு மேல் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நம் நண்பர்கள்.. கோவை வலைப்பதிவர்களும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து பங்கெடுத்தனர்.
குழந்தைகளுக்காண ”பூமி அன்னை” ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருப்பாடல்கள், நாடகங்கள், நாடனங்கள் கலை கட்டின.
கோவை கவிஞர் சரளா அவர்கள் பேச்சிலிருந்து சில மேற்கோள்கள்
இந்த பூமி தன் பசுமையை இழந்து பழுப்பாகும் போது மனிதன் தன் இறுதி எல்லைக்கு சென்று விடுவான். கட்டிடங்கள் மட்டுமே பச்சை வர்ணம் கொண்டு இருக்கும் சூழலை தடுக்கவேண்டும். பாக்கெட் தண்ணீர் போல எதிர் காலத்தில் பாக்கெட் காற்றினை சுவாசிக்கும் காலம் வராமல் நாம் போராட வேண்டிய கட்டம் இது. வருங்கால சந்ததியினருக்கு நாம் பூமி பாதுகாப்பை உணர்த்தவேண்டும்.
”நான் எப்போதும் துணிப்பையை மட்டுமே உபயோகிக்கிறேன் “ வலைப்பதிவர் எழில் அருள்
(இ.வ : கோவை ஆவி,கவிஞர் சரளா, எழில், ஓவியர் ஜீவா(தேசிய திரைப்பட நூல் விருது பெற்றவர்)
(நடுவில் நிற்பவர் வலைப்பதிவர் ஜீவா)
(வலதுபுறம் நான் தான் !)
(போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சர்டிபிகேட்)
தனி மனிதனின் சில...சில சுயக் கட்டுப்பாடுகள் :
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பாலிதீன்,பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்துதல், தம் வாகனத்தில் அதிக நச்சு புகை வெளியேறாமல் தடுத்தல், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்ப்பது,நீர் நிலைகளை மாசுபடுத்தாது இருத்தல், நம் குழந்தைகளுக்கு இயற்கை பாது காப்பை உணர்த்துதல், இவையே, இப்பூமிக்கு நாம் செலுத்தும் பிரதிபலன்.
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே உணர வைப்பது பாராட்டத்தக்கது...
ReplyDeleteஆனால் அவர்கள் நன்றாக உணர்ந்து உள்ளார்கள், நாம் தான் செயல்படுத்த வேண்டும் என்பதும் உண்மை...
நன்றி... நல்லதொரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு...
வாழ்த்துக்கள்...
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/
மிக நல்ல விஷயத்தை பகிர்ந்து செய்தற்கு வாழ்த்துகள்
ReplyDeleteஇப்போதைய நிலைமைக்கு தினமும் புவி தினமா கொண்டாடி சுற்று சூழலை காக்க வேண்டும்.
ReplyDelete