எரிகல் விழுவதை பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.
சிறிதும் பெரிதுமான ஒரு குறிப்பிட்ட வடிவம் அற்ற “அஸ்ட்ராய்டுகள்” என அழைக்கப்படும் விண்கற்கள் சூரியனை மையமாக கொண்டு சுற்றுபவை. சர் வில்லியம் ஹெர்ஷீல் 1802 ல் முதன் முறையாக இக்கற்களை அவ்வாறு அழைத்தார். அஸ்ட்ராய்டுகள் என்பது கிரேக்க மொழியில் ”நட்சத்திரத்தைப் போல” எனப் பொருள் கொள்ளும் வார்த்தை.
சூரிய குடும்பம் உருவாகிய போது ஏற்பட்டவை இந்த உதிரி பெரும் பாறைகள் என்று சொல்லுகிறார்கள்.
அஸ்ட்ராய்டுகளை விட சிறிய அளவு உள்ள பாறைகளை மெட்ராய்டுகள் (meteoroids) என்கிறார்கள். இவை சில சமயங்களில் பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் காற்று மண்டலத்தினூடாக பூமியை நோக்கி வரும் பொழுதே வேகத்தாலும் வெப்பத்தாலும் காற்றின் உராய்வினால் வெளிச்சத்துடன் உருகி பூமியை தொடும் முன்னரே சாம்பலாகி விடுகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் அதிர்வலைகளால் சன்னல் கண்ணாடிகள் நொறுங்குகின்றன.
சில சமயங்களில் இந்த மெட்ராய்டுகள் பாறைகளாக விழுவதும் உண்டு. ஒருகாலத்தில் டைனசோர் போன்ற பெரும் விலங்குகள் இப்படி விழுந்த மெட்ராய்டுகளால் முற்றிலும் அழிந்து போனதாக நம்பப்படுகிறது (65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்).
லட்சக்கணக்கான மெட்ராய்டுகள் இப்போதும் பூமியின் மீது விழுந்து கொண்டுதான் இருக்கின்றன வெறும் கண்களுக்கு ஏதோ நட்சத்திரம் விழுவது போன்று தெரியும். இவற்றின் சராசரி எடை 100 டன் என்பது ஆச்சர்யம் தான். கூட்டமாக இவை விழுவதை “மீடீ பூ தூரல் (meteor shower)” அல்லது ”மீடீ புயல்(meteor strom)” என்றும் செல்லமாக கூறலாம்.
அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பிரம்மாண்டமான குழி (crater) இப்படி விண் கல் (கல்லா ? இரும்பா ?) விழுந்ததினால் ஏற்பட்டது. இது சுமார் 50,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது என்கிறார்கள்.
பியல்லா எனும் வால் நட்சத்திரமும் இப்படி விண்கற்பாறைகளோடு சூரியனை சுற்றிக்கொண்டுள்ளது.
செவ்வாய் மற்றும் வியாழன் (கோள்கள்) இவற்றின் சுற்று பாதையின் இடையில் சூரியனை சுற்றும் ஆயிரக்கணக்கான அஸ்ட்ராய்டுகள் உள்ளன. இதை ”அஸ்ட்ராய்டு பெல்ட்(asteroid belt)” என்று அழைக்கிறார்கள்.
(ஆஸ்திரேலியாவில் விழுந்த எரிகல் இந்த அஸ்ட்ராய்ட் பெல்டில் இருந்து விலகி வந்ததாக சொல்கிறார்கள்)
அஸ்ட்ராய்டுகளின் வேகம் நொடிக்கு 25 - 30 கிலோமீட்டர்கள் என்பது ஒரு சராசரி கணக்கீடு.
அளவை பொருத்து அஸ்ட்ராய்டுகளை "சிறு கோள்கள்" என்றும் சொல்லலாம். (கற்களாலும் உலோகங்களாலும் ஆனது) உதாரணமாக இடா எனும் அஸ்ட்ராய்டுக்கு டாக்டைல் எனும் (நிலா)துணைக்கோள் உண்டு. இது கலிலியோ ஸ்பேஸ்கிராப்ட்டால் 1993 ல் கண்டறியப்பட்டது.
கடந்த பிப்ரவரி 25(2013)ல் 7 சாட்டிலைட்டுகளுடன் இந்தியாவின் PSLV C-20 ( Polar Satellite Launch Vehicle) ராக்கெட் செலுத்தப்பட்டது. அந்த ஏழில் ஒன்று சூட்கேஸ் அளவிலான கனடாவின் சாட்டிலைட் (NEOSSat) நூறு நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றிவிடும். இதன் முக்கிய பணி பூமிக்கருகில் வரும் அஸ்ட்ராய்டுகளை கண்காணிப்பதுதான். கனடியன் ஸ்பேஸ் ஏஜென்சி இதை ”வானத்திலொரு காவல்காரன்” ("sentinel in the sky") என்று வர்ணிக்கிறது.
அஸ்ட்ராய்டுகளில் தங்கம், பிளாட்டினம், ரோடியம், இருடியம், பலாடியம்..இப்படி மதிப்புமிக்க பல தாதுக்கள் அடங்கி இருப்பதாக விண்ணியல் ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மதிப்பு மிக்க உலோக தாதுக்களை பூமிக்கு கொண்டு வர ரோபோ விண் இயந்திரங்கள் தயாரிப்பு முயற்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
241 GERMANIA எனும் அஸ்ட்ராய்டில் 95 டிரிலியன் டாலர் மதிப்புமிக்க உலோக தாதுக்களை கொண்டு வரலாம் என மதிப்பிடுகிறார்கள். எதிர்காலம் தான் இதற்காண விடையளிக்க வேண்டும்.
நாசா அடுத்த பத்தாண்டுக்குள்ளாக ஒரு கிராப்டை(CRAFT) ஒரு அஸ்ட்ராய்டில் (1999 RQ36) தரை இறக்கி அதிலிருந்து சாம்பிளை எடுத்துவர திட்டம் (OSIRIS -REx MISSION) வைத்துள்ளது.
இனி தினமும் வானில் அண்ணாந்து, மீடியர்கள் வருகின்றனவா என பார்க்கத் தூண்டியுள்ளது..உங்கள் பதிவு ! இன்ட்ரஸ்டிங் ! வாழ்த்துக்கள் !
ReplyDelete//ரமேஷ் வெங்கடபதிFebruary 28, 2013 at 1:18 PM
Deleteஇனி தினமும் வானில் அண்ணாந்து, மீடியர்கள் வருகின்றனவா என பார்க்கத் தூண்டியுள்ளது..உங்கள் பதிவு ! இன்ட்ரஸ்டிங் ! வாழ்த்துக்கள் !/ நன்றி ரமேஷ் !
அரிய தகவல்கள்.. சுவாரஸ்யமாக இருந்தது..
ReplyDelete//கோவை ஆவிFebruary 28, 2013 at 4:25 PM
Deleteஅரிய தகவல்கள்.. சுவாரஸ்யமாக இருந்தது..// நன்றி ஆனந்த்
சுவையான அறிவியல் பகிர்வு! நன்றி!
ReplyDelete//s sureshFebruary 28, 2013 at 5:17 PM
Deleteசுவையான அறிவியல் பகிர்வு! நன்றி!// நன்றி சுரேஷ் !
good.........
ReplyDelete//Jayadev DasMarch 1, 2013 at 3:20 PM
Deletegood.........// நன்றி ஜெயதேவ் சார் !