உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.
இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.
காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை. முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின் சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன். இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.
கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.
ஒரு வரலாறும் உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.
சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார். அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.
பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால் உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன. பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும். அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.
இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது. இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை. சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !