மரங்களை வெட்டும் செயல் எல்லா இடங்களிலும் நடக்கிறது.
மரங்களை வெட்டினார்கள் என்று செய்திகளை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது எந்த தாக்கத்தையும் ஏற்படுவதில்லை. இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான (23.4.2012) செய்தியின் தலைப்பு
"மரங்களின் வேரில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய கொடுமை ! ( கோவை பதிப்பு)"
இச்செய்தியை படிப்பவர்கள் மனதில் முதலில் தோன்றுவது என்ன மனிதர்கள் இவர்கள். அய்யா உங்க வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்தால் யாரும் கேட்க போவதில்லை. நடைபாதை அல்லது சாலை ஓர மரங்களை வெட்டும் போது தான் அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு.
செய்தியின் சாராம்சம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் (ஆங்கிலேயர்கள் நிறைய மரங்களை நட்டு நிர்மானித்த பகுதி) ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் வெளியே சாலை ஓரத்தில் இருந்த மரங்களை அழிக்க முயற்சி நடந்துள்ளது. இருந்த 12 மரங்களின் அடி பாகத்தை கொஞ்சம் வெட்டி அதன் வழியாக 1 அடிக்கு ட்ரில் செய்து ஆசிட்டை ஊற்றி வைத்தது. சுற்று சூழல் ஆர்வலரும் கண்டக்டருமான லோகநாதன் கூறுகையில் ' வளர்ந்து வரும் மரங்கள் நம் குழந்தைகள் மாதிரி இதை வெட்ட எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை இந்த இடத்தில் இனி மரமல்ல சிறு செடிகூட முளைக்காது. இந்த செயல் ஒரு படுகொலை என சாடியுள்ளார்.
எப்படிப்பட்ட மரங்களை வெட்டுகிறார்கள் தேவை இல்லா மரங்களா, பட்டுபோனவையா, விழும் ஆபத்து நிலையா? வீட்டிற்கோ வேறு செயல் பாட்டிற்கே இடைஞ்சல் கொடுப்பவையா இப்படி பல கேள்விகள் இறுதி பதில் தேவை, தேவை இல்ல அவ்வளவுதான். முறையான அனுமதியின்றி வெட்ட கூடாது.
காரில் ஏ.சி போட்டுக் கொண்டு செல்லும் இவர்களுக்கு இயற்கை காற்றின் வெகுமதி பற்றி தெரியாதது நியாயம் தான். ஆனால் அவர்களின் மனசாட்சியை கேட்டு சொல்லட்டும் ஒரு முறை கூட சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிக்கவில்லையா ?
ஒரு மரம் நமக்களிக்கும் நன்மைகள் பல மனிதன் வெளிவிடும் நச்சுகாற்றை,வாகனங்கள் வெளிவிடும் நச்சு புகையை தூய்மைப்படுத்துகிறது அதில் ஒன்று. படிகாதவர்களை விட இப்படி படித்தவர்கள் தான் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள்
சுற்று சூழல் ஆர்வளர்கள் இதுமாதிரியான மரம் வெட்டும் செயலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. இது போன்று கண்மூடித்தனமான செயலை செய்பவர்களை ஆயிரம் மரங்களை நட்டு பராமரிக்கும் தண்டனை அளித்தால் தான் எவரும் இயற்கை மீது நடத்தும் இது போன்ற கொடுமையை செய்யாமலிருப்பார்கள்.
எனது கருத்து கொடுமையான வெயிலில் சேற்றில் நடு வயலில் களை எடுத்து பாத்தி கட்டும் தண்டனையும் சேர்த்து கொடுக்கவேண்டும்.
தங்கள் கருத்துகளை பதிவிட அழைக்கிறேன்.
நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் தான் ..!
ReplyDeleteகருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் "வரலாற்று சுவடுகள்"
Deleteஒரு குழந்தையை நரபலி கொடுப்பதுக்கு சமமான குற்றம் மரத்தை ஆஸிட் ஊற்றி கொல்வது.......
ReplyDelete