பாடும் பறவைகளை பறவைகளில் சிறப்பு தன்மை உடைய பறவைகள் எனலாம். 4500 இனங்கள் உண்டு. இந்த லிஸ்டில் காகம், நைட்டிங்கேல், அண்டங்காக்கை பொதுவானவை.
சில பாடும் பறவைகள் :
காகம், ஃபிஞ்சஸ்(Finches), லார்குகள், மோக்கிங்(mocking), நைட்டிங்கேல் (nightingales),அண்டங்காக்கை(Ravens), சிட்டுகுருவி(Robins), த்ரஸ்ஷஸ்(thrushes), தூக்கனாங்குருவி(weaver bird), வாப்ளர் (Warblers)
பாடும் பறவைகளின் சிறப்பு அவற்றின் தொண்டையில் இருக்கும் குரல்வளை (Syringers) அமைப்பு. இவைதான் இவற்றிற்கு சப்தமெழுப்ப உதவுகிறது. வுட் த்ரஸ் என்று சொல்லப்படும் பறவையின் குரல்வளை அமைப்பு பிரமாதமானது ஒரே சமயத்தில் இரண்டு விதமான பாடல்களைப் பாடும்.( டூ இன் ஒன் !)
பறவைகளின் மூளையில் இந்த பாடல்களை கிரகிக்க ஒரு சிறப்பு பகுதி உண்டு. இது ஒரு பாடலை கற்றுக்கொள்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்கிறது.
பறவைகள் ஏன் பாட வேண்டும் ?
பெரும்பான்மையான ஆண் பறவைகள் சப்தமிட்டுப் பாடும் இது பெண் பறவைகளை ஈர்ப்பதற்குத்தான் (விசிலடிச்சான் குஞ்சுகள் ! )
நன்றாக பாடும் ஆண் பறவையே பெண் பறவைக்கு பிடிக்கும்.
பறவைக் குஞ்சுகள் பாடுவதற்கு தந்தைதாய் பறவைகளைப் பார்த்தே கற்றுக்கொள்கின்றன.
சாதாரணமாக நீங்கள் பார்க்கும் பறவைகளில் 10 க்கு 8 பாடும் பறவை.
பாடும் பறவைகளின் ஆயுள் 5 வருடங்களே. பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக முட்டையிட்டு குஞ்சு பொறித்துவிடும். பாடும் பறவைகளின் முட்டை பத்து நாட்களில் குஞ்சு எட்டிப்பார்க்கும்.
பாடாத பறவை அல்பட்ராஸ் (Albatross) குஞ்சு பொறிக்க 80 நாட்கள் ஆகிறது.
வுட் த்ரஸ் (wood thrush) மெலடியாகப் பாடும் புல்லாங்குழல் இசைப்பதைப் போல. அதன் பாடலை கேளுங்கள்..
ஸ்டார்லிங்ஸ் விநோதமான பறவை மற்ற பறவைகளின் குரல்களை காப்பியடித்து அப்படியே பாடும் திறமை கொண்டது.
இந்த காணொலியில் பழக்கப்படுத்தப்பட்ட பறவை கேட்கும் குரல்கள் சப்தங்களை ஒலித்துக் காட்டுகிறது. நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.