பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்
சென்ற பதிவில் #KR ஒரு கருத்தை முன் வைத்தார் குயில், முட்டையை அடைகாக்காமல் காகத்தின் கூட்டில் போட்டு விடுவது தெரியாத முட்டாளா காக்கை இருக்கே ? என்று மனிதர்களை, அவர்களின் செயல்களையும் கூட ஞாபக வைத்து அடையாளம் கண்டு கொள்கின்றன, அப்படியாயின் இந்த முட்டை மாறுபாட்டை அவைகளால் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதே என்ற கேள்வி எழுகிறது. அடை காத்து பிறந்த பின் குயில் குஞ்சானது அதனோடு இருக்கும் காக்கைகளை போலவே சப்தமிட்டு நடிக்கிறதா? தெரியவில்லை. தாய் குயில் ஒரு கட்டத்தில் அதை தன்னோடு கூட்டி சென்று விடுகிறது என நினைக்கிறேன்.
காக்கைகளின் புத்திசாலி தனத்தை அது கட்டும் கூட்டில் பயன்படுத்தும் பொருட்களை( டூல் ) பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
மனிதர்களில் உணவு பழகக்கம் அசைவம் / சைவம் ( ?! ) போல காக்கைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
நியூசிலாந்தின் கியா (கிளி) பறவைகளிடம் ஒரு ஆராய்சி செய்தார்கள் முடிவில் இவைகள் கிப்பன், ஆந்த்ரபோட் குரங்குகளை காட்டிலும் புத்தி சாலியானவை என்று நிரூபமானது. நியூசிலாந்து வாசிகள் ஒரு காலத்தில் இவைகளை சுட்டு தள்ளினார்கள் காரணம் என்ன வென்றால் இவைகள் ஆட்டுகளை (ஷீப்) கொன்று விடுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவைகள் "சைவ" பட்ஷிணிகள்.
பறவைகள் ஞாபக சக்தி ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வலசை பறவைகள் நாடு விட்டு நாடு கடல் கடந்தும் வருவதை பார்க்கிறோம் எதற்காக வருகின்றன என்பதில் முக்கிய காரணம் இனப் பெருக்கத்திற்காக என்று சொல்லலாம். அப்படி கண்டம் விட்டு கண்டம் வந்த பறவைகள் இங்கே குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பின் தம் தாய் நாட்டிற்கு திரும்பி விடுகின்றன. இப்படி வலசை வரும் பறவைகள் வருடா வருடம் எப்படி ஒரே பகுதி களுக்கு திரும்ப வருகின்றன "கூகிள் மேப்" போல அவைகள் இடங்களை பாதைகளை தக்குனூண்டு மூளையில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன. குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அவற்றின் வருகை தொடர் கதையாகிறது. தாய் பறவையில் இருந்து குஞ்சுகளுக்கு என ஞாபகங்கள் கடத்தப் படுகின்றன.
மனிதன் என்ன செய்கிறான் அவைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அழித்து விடுகிறான் தாம் பிறந்து வளர்ந்த இடத்தை காண ஆவலுடன் வந்த பறவை காணாமல் போன வரண்ட குளங்களை கண்டு ஜெர்க்காகிப் பின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. ஒரு கட்டத்தில் அவைகள் திரும்ப வராமல் கூட போகலாம்.
மனித குழந்தை கற்றுக் கொள்ளும் காலத்தை விட பறவை குஞ்சுகள் அவற்றின் தாய் பறவையிடம் வெகு சீக்கிரமாக வாழக் கற்றுக் கொள்கின்றன. அந்த வகையில் மனித குழந்தை முட்டாள் தான்.
இரண்டு குயில்கள் சப்த மிட்டு கொண்டிருந்தன நீண்ட நேரமாக என்னவென்று போய்ப் பார்த்தால் தாய் பறவை குஞ்சிற்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தது. கிளி,மைனா, சிட்டுகள் மற்ற பாடும் பறவைகளும் இப்படியாக சங்கீதத்தை தம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகின்றன.
பறவைகள்,விலங்குகள் சப்தமிடாத பகுதியில் மனிதனை வாழச் சொன்னால் அந்த கூட்டம் ஜோம்பீஸ் ஆக மாறிப் போய்விடும்.
சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன் பறவைகள் முட்டைகளை நிலையாக ஒரே மாதிரி வைத்து அடை காப்பதில்லை முட்டைகளை திருப்பி திருப்பி வைத்து அடை காப்பதாக இவற்றை எப்படி கற்றுக் கொண்டன சந்ததிகளுக்கு கடத்துகின்றன? அவற்றின் ஜீன் களில் எழுதப் பட்டிருக்கலாம்.
Download As PDF