கடந்த 15 நவம்பர் 2013 ல் எத்தனை பூனை புதிருக்கான பதிலை இந்த பதிவில், அதற்குமுன் என்னை மன சஞ்சலத்திற்கு உள்ளாக்கிய பதிவு திருட்டு.
நம்பினால் நம்புங்கள் கம்யூனிட்டி இது பேஸ்புக் குழுக்களில் ஒன்று சமீபத்தில் எனது பல பதிவுகளை வரி மாறாமல் அப்படியே எடுத்து போட்டிருந்தது. ஏற்கனவே வலைபதிவுகளில் அப்படியே காஃபி அடித்து போடும் செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் பேஸ் புக்கில் போடுவதற்குமுள்ள வித்தியாசம் நோய் தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுவதற்கும், காற்றில் பரவுவதற்கும் இருக்கும் வேறு பாட்டை போன்றதே.
வலைத்தளத்தில் மட்டுமே எழுதி வருபவர்களுக்கு பேஸ்புக்கில் அவர்களின் பதிவுகள் திருடி போடப் படுவது தெரியாது.
யாரும் ஜீனியசாக பிறப்பதில்லை, கூகுல் காரன் இலவசமா கொடுக்கும் (அவன் நம்மள வெச்சு சம்பாதிப்பான், அத விடுங்க..) தளத்தில் ஏதேனும் உபயோகமான தகவல்கள தேடியும், புத்தகங்கள பிறாண்டியும், அதுக்கப்புறம் பின்னூட்ட வாதிகள் கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகனும், தூக்கம் கெடனும், இதுக்கும் மேல வீட்டுகாரம்மா கேட்கும் ஏங்க உங்களுக்கு கிருக்கு பிடிச்சிருச்சா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கனும். இதெல்லாம் அப்படியே சுட்டுப் போடும் கம்யூனாட்டிகளுக்கு எங்கே தெரியப் போகிறது.
மார்குகிட்ட (பேஸ்புக் ஓனர்) கம்ளைண்ட் செய்யறதுக்கு முன்னாடி மருவாதையா கேட்டேன் ஐயா நீங்க போட்டிருக்கிற போஸ்டல இருக்கற சமாச்சாரம் நான் எழுதுனது இன்னின்ன தேதில, அதனால தகவலுக்கு கீழே எம்ட தளத்தோட பேரப் போடுமய்யான்னு ! முகத்தில அடிச்ச குறையா போட்ட கமெண்ட நீக்கி என்ன தள்ளி வைச்சிட்டான். அப்ப தெளிவா ஒன்னு புரிது இவன இதுன்னுதான் கூப்பிடோனும்.
அந்த கம்யூனிட்டில லைக் செஞ்சிருக்கர 27000 மஹா சனங்களே நீங்க படிச்ச பதிவ பார்த்தா இது இந்த பதிவு சமாச்சாரம்னு குட்டுங்க. அந்த பதிவுகள பகிர்ந்து அதுக்கு கிர்....ர் ஏத்தாதீங்க.
என்னோட பிரச்சனைக்கு பதிவின் மூலம் குரல் கொடுத்த நண்பர் கோவை ஆவிக்கு நன்றி.
இந்த பூனை புதிரையும் திருடி போட்டு விட்டது அந்த திருட்டு பூனை.
இதில விடை தேடுனவங்க 740பேரு,விரும்புனவங்க 275, பகிர்ந்துகிட்டவங்க 96
இந்த தளத்து ஓனருக்கு விழுந்த ஓட்டுகள் 39
இந்த புதிருக்கான படத்தை கொடுத்தது நண்பர் தமிழ்குளோன் அவர் காசு கட்டி (ஆன்ராய்டு paid site) ஒரு தளத்தில் இருந்து இதை பெற்று இருக்கார்.
ஒரு பேச்சு மொழி சொல்லுவாங்க கோல்ட விட கில்டுக்குதான் பவுசு அதிகம்னு அது சரியாத்தான் இருக்கு.
சரி புதிரோட பதில பார்போம்.
இரண்டு கண்ணாடிகளை பக்கத்தில் ஒட்டி வைத்தால் 180 டிகிரி கிடைப்பது ஒரே பிம்பம்.
http://angelgilding.com/Multiple_Reflections.html இந்த தளத்தில் செய்முறை விளக்கம் இருக்கு.
இரண்டு கண்ணாடிகளையும் 45 டிகிரி சாய் கோணத்தில் வைத்தால் 7 அல்லது 8 பிம்பங்கள் தெரியும். கோணத்தை இன்னும் குறைச்சா தோராயமா 33 டிகிரி என்றால் ஒரு பூனை(ஒரிஜினல்) ஒன்பது பூனையா (பிம்பம்) தெரியும்.
இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே கோணம் குறைய குறைய பிம்பங்களின் எண்ணிக்கை கூடும். அதே போல பார்க்கும் கோணம் , கண்ணாடியின் அளவு இப்படி எல்லா அம்சங்களும் ஒத்து வரவேண்டும்.
நண்பர் கமல் பாலனும் இதுக்கு ஒரு பார்முலா கொடுத்து இருந்தார்
Number of images=(360/angle between two mirrors)-1 இதற்கும் பொருந்தி வருகிறது.
சரியான விடை ஒரே ஒரு பூனை.
சென்னை பதிவர் சந்திப்பின் போது நடந்த நிகழ்ச்சியை பற்றி நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பாமரனின் நக்கலும் நையாண்டியும்
அதே போல் நண்பர் சங்கவி ஒரு பதிவு போட்டிருந்தார். இரண்டுமே ஒரே சப்ஜக்ட் ஆனா காஃபி செய்யப் படாதவை.
பதிவர் சந்திப்பும் பாமரனின் பட்டைய கிளப்பும் பேச்சும்...
நன்றி,
கலாகுமரன்
பேஸ்புக்கில் திருடர்களுக்கு பஞ்சம் இல்லை! உஷார் படுத்தியமைக்கு நன்றி! இவனுங்க எதையெல்லாம் திருடி போடுவானுங்களோ?!
ReplyDeleteஎல்லாமே உங்க புகைப்பட ஹைகூ உட்பட...நன்றி நண்பரே
Deleteஎதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை ஆவி... எனது பதிவுகள் இன்றும் கூட திருடப்படுகின்றன... பதிவு எழுதும் முறையை (உரையாடல் போல) மாற்றியும் எழுதுகிறேன்... அப்படியும் அதில் உள்ள சில பகுதியை மட்டும் திருடுகிறார்கள்... வேண்டுமானால் திருடனை நண்பனாக்கி கொள்ளலாம்... அப்படியும் திருடுவது போகவில்லை... ஹா... ஹா... தெரிந்து கொள்ள வேண்டுமா...?
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html
இது ஆவி-யின் தளத்தின் copy and paste...!
//வேண்டுமானால் திருடனை நண்பனாக்கி கொள்ளலாம்.// நல்லாத்தான் இருக்கு. நம்ம பின்னூட்டத்தையே காப்பி பேஸ்ட் இது தப்பில்லையே. இதையும் சுட்டுடுவான்களோ...
Deleteஎதுவும் கடந்து போகும்... take it easy...
ReplyDeleteதூக்கம் தொலைத்த இரவாகிப் போனது. பதிவு எழுதுவது அவசியமா என்று. உங்கள் பதில் எனக்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி D.D
Deleteவிடுங்க ஸார். இனி உஷாரா இருப்போம்..
ReplyDeleteவாசகர்கள் ஒன்னு கூடி தேர் இழுத்தா பரவாயில்லயே... நமக்கென்ன ன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிறது இந்த மாதிரி ஆட்களுக்கு வசதியா போகுது. ம்..ம். பார்போம்.
Deleteகலாகுமரன்,
ReplyDeleteநாம எழுதின பதிவ அப்படியே தூக்கிப்போட்டு பயன்ப்படுத்திக்கொள்வது முறையற்ற செயல் தான் ,ஆனால் இணையத்தில் இதனை தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று என்பதே உண்மை. இதற்கெல்லாம் டெங்சன் ஆனால் ,காலம் முழுக்க டெங்க்சன் தான் அவ்வ்!
அப்புறம் ஒன்னு, நம்ம பதிவர்கள் பல இணையத்தளங்களில் இருந்து பகுதியாகவோ முழுமையாகவோ செய்திகளை எடுக்கிறார்கள்,படங்கள் எடுக்கிறார்கள் ,ஆனால் பெரும்பாலும் இன்னின்ன தளங்களில் இருந்து தகவல்கள் & படங்கள் பெறப்பட்டன ,என மூலத்தினை தெரிவித்து சுட்டியோ அல்லது நன்றி கூட தெரிவிப்பதில்லை :-))
எல்லாம் சுத்த சுயம்பிரகாசஜோதிக்களாக "இணையத்தில் இருப்பதெல்லாம் எமக்கே சொந்தம்"னு இருக்காங்க என்ன செய்ய?
அஞ்சு பைசா திருடினா தப்பா ..அஞ்சந்து பைசாவ அஞ்சு தடவை திருடினா தப்பா ..ஐநூறு தடவை திருடினா தப்பானு கேட்டுக்கிட்டு போயிட்டே இருக்கனும் அவ்வ்!
சுட்டி காட்டியும் அவன் கண்டுகல எ...கல.
Delete//அஞ்சு பைசா திருடினா தப்பா ..அஞ்சந்து பைசாவ அஞ்சு தடவை திருடினா தப்பா ..ஐநூறு தடவை திருடினா தப்பானு கேட்டுக்கிட்டு போயிட்டே இருக்கனும் அவ்வ்!// ஹ..ஹா..