இவ்வுலகில் நீர் நில வாழ் (amphibians )உயிரினங்கள் தோன்றி 365 மில்லியன் வருடங்கள் ஆகின்றன அதாவது சடையானை போன்ற விலங்குகள் உருவாவதற்கு முன்பே.
இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1830) தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரை வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.
டார்வின் ஆராய்சியில் முக்கிய இடம் பெற்றது ஒரு தவளை அதற்கு அவரின் பெயர் இடப்பட்டது "Northern Darwin’s frog " மற்ற தவளைகளை போல் இல்லாமல் வித்தியாசமானது இந்த தவளை. இதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அது இப்போது முற்றிலும் அழிந்து விட்டதாக நம்பப் படுகிறது.(extinct species !)
இது பற்றி பி.பி.சியில் வெளியான தகவல் :
புகழ் பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் பெயரிடப்பட்ட ஒரு தவளையினம் அழிந்தொழிந்து போய்விட்டது என்று சிலி மற்றும் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறியிருக்கிறனர்.
வட டார்வின் தவளை என்ற இந்த தவளையினம், நீர்-நிலம் வாழ் பிராணிகளைத் தொற்றிய ஒரு வித மோசமான தோல் வியாதி காரணமாக, அதன் தென்னமெரிக்க வாழ்விடங்களிலிருந்து முழுதுமாகக் காணாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,
இந்த தவளையின் உறவினமான, தென் டார்வின் தவளையினமும், எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் அறிவியல் சஞ்சிகையான "ப்லோஸ் ஒன்" என்ற சஞ்சிகையின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தவளையினம், 1830களில் சார்லஸ் டார்வின் எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் உலகக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவரால் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவு : தசாவதாரமும் டார்வினிசமும் !
இந்த தவளையின் காணொளி கீழே இதில் வாய் வழியாக குட்டியை பிறசவிக்கிறது. தவளையை பார்த்தே அருவருப்பு அடைபவர்கள் இதை பார்க்க வேண்டாம்.

இந்த இனத்தின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், இந்தத் தவளைகளின் குஞ்சுகள் ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப்படுவதுதான்.
தொடர்புடைய பதிவு : தசாவதாரமும் டார்வினிசமும் !
இந்த தவளையின் காணொளி கீழே இதில் வாய் வழியாக குட்டியை பிறசவிக்கிறது. தவளையை பார்த்தே அருவருப்பு அடைபவர்கள் இதை பார்க்க வேண்டாம்.
நன்றி : கலாகுமரன்
ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப்படுவதா...! வியப்பாக உள்ளது...
ReplyDeleteகாணொளிக்கு நன்றி...
பதிவு போட்டதுமே உங்க பின்னூட்டம்...நன்றிங்க D.D
Deleteபரிணாம வளர்ச்சியைச் சொல்லிய டார்வின் ஆராய்ச்சியில் முக்கியபங்கு வகித்த "Northern Darwin’s frog " என்ற தவளையினம் அழிந்தது என்பது விஞ்ஞான உலகிற்கு நஷ்டம்தான். டார்வின் பெயருக்காகவாது அந்த இனத்தை, விஞ்ஞானிகள் காப்பாற்றி இருக்கலாம். தகவலை தெரியப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteநன்றிங்க தமிழ் இளங்கோ.
Deleteவிநோதம்...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோ!
வாங்க இளமதி...நன்றி
Deleteபரிணாம கோட்பாட்டுக்கு உதவிய முக்கியமான தவளை இனத்தை இழந்திருப்பது வருந்த தக்கதே. சில சமயங்களில் சில இனங்கள் முற்றாக அழியாமல் அங்கொன்று இங்கொன்றாய் இருப்பது உண்டு, அப்படி இத்தவளை இனங்களும் இருத்தல் கூடும். உயிரினங்களின் வாழ்விடங்களை காப்பதும் சிற்றினங்களை அழியவிடாது தக்க வைப்பதும் மிக அவசியம் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
ReplyDelete//பையோ பேங்க்
Deleteசாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது. // இந்த தவளையோடதும் பாதுகாக்கப் பட்டு இருக்கலாம். பொருத்து இருந்து பார்க்கவேண்டும். ஏதாவது அதிசயம் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கு.
நல்ல தகவலா இருக்கே, யார் சுடப் போறாங்கன்னு தெரியலையே.. ;)
ReplyDeleteஆண் தவளையின் குரள்வளைக்குள் குஞ்சுகள். வியப்பான விந்தையான செய்தி நண்பரே. நன்றி
ReplyDeleteஎனது வலைப்பூவை தங்களின் வலைச்சரம் பதிவுகளில் அறிமுகபடுதியதர்க்கு நன்றி நண்பரே......மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள் தொடர்கிறேன் !
ReplyDelete