சுறுசுறுப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதில் பெயர் பெற்றவை தேனீக்கள். சமீபத்தில் ஆக்லாண்டு, ஜெர்மன்,நியுசிலாந்து புலனறிவு ஆராய்சியாளர்கள் (தனித் தனியாக) தேனீக்களுக்கு மூன்று மணிக்கொருமுறை ஐசோஃபுளுரன் மயக்கமருந்து (isoflurane) கொடுத்து ஆராய்ந்தார்கள். மனிதனின் அறுவை சிகிச்சைக்கு இம்மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. சரி இந்த ஆராய்ச்சி எதற்கு ?
நம்மில் சிலர் எப்படி சரியான நேரத்திற்கு அலாரம் வெச்ச மாதிரி தூக்கத்திலிருந்து விழிக்கிறார்கள் ? நமது மூலையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்சைம் சுரந்து எழுப்பிவிடுவதாக சொல்கிறார்கள். அப்படி இந்த என்சைம் சுரப்பதற்காண கோடிங் DNA ( ஜீன் செல்) வில் பதியப்படும். இம்மாற்றம் பற்றிய இந்த டைமிங் சென்ஸ் பற்றிய மரபியல் ஆய்வு (ஜெனிடிக்) தான் இது.
மற்ற விலங்குகளை (குரங்கு, எலி ) விட தேனீக்களுக்கு டைமிங் சென்ஸ் அதிகம் அதனால் அவைகளை இந்த ஆராய்சிக்கு உட்படுத்தினார்கள். தேனீக்களுக்கு நுண்ணிய டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டு மூன்று மணிக்கொருதரம் மேற்சொன்ன மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சில பல தூரங்களில் விட்டும் அவற்றின் கூட்டிலேயே விட்டும் இப்படி பல விதங்களில் சோதித்தார்கள்.
இப்படி தொடர்ந்த இடை வெளியில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட தேனீக்கள் நேரம் தவறின, கூடு இருந்த இடத்தை மறந்தன. அவற்றின் செயல்பாடுகளில் அந்த மூன்று மணி வித்தியாசம் இருந்தது. அவற்றின் ஜீன் களில் mRNA ( நம்ம DNA மாதிரி) மூலக்கூறு செல்களில் இந்த வேதிவினை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் இரவில் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் இது குறித்த ஆய்வு தொடர்கிறது.
தேனீக்களை பற்றிய சில சுவையான தகவல்கள் :
சுறுசுறுப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்றவை தேனீக்கள். அதேபோல சரியான பூக்களில் தேன் சேகரிக்க குறித்த நேரத்திற்கு செல்கிறது திரும்புகிறது. சூரியன் தான் இவற்றிற்கு திசை காட்டி(காம்பஸ்).
தேனீக்கள் 35 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக அறிகிறோம். பெரும்பாலான தேனடைகளில் ஒரேஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். ஆண் பூச்சிகள் சோம்பேரிகள் அவற்றிற்கு கொடுக்குகள் கிடையாது தேன் சேகரிக்க வெளியில் எங்கும் செல்வதும் இல்லை. இவை செய்யும் ஒரே வேலை ராணி தேனியுடன் இணைவது (டம்மி பீஸ் ?!)
ராணி தேனீ அளவில் பெரியவை நன்கு வளர்ந்தவுடன் கூட்டை விட்டு 1000 அடி உயரத்தில் பறக்கும் தொடந்து செல்லும் 10 முதல் 20 ஆண் தேனீக்களுடன் அந்தரத்தில் இது இணையும். அதன் பிறகு இறகு பீய்ந்த ஆண் தேனீக்கள் இறந்து விடும். அதன் பிறகு ராணி தேனீக்கள் உறவு கொள்வதில்லை தக்க வைத்துக்கொண்ட ஸ்பேர்ம்களை வைத்துக்கொண்டு தினமும் 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது. அவற்றின் வேலை முட்டை இட்டு கொண்டிருப்பதே. வயதான பின் முட்டையிடுவதை நிறுத்திவிடும். ஒரு கூட்டில் பெரும்பாலும் ஒரு ராணி ஈ தான் இருக்கும். அதற்கு மேல் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு இறந்து ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே உயிருடன் இருக்கும்.
ராணி தேனீ எப்படி உருவாகின்றன ? ராணி தேனீ லார்வா எனப்படும் புழுப்பருவத்தில் அது உண்ணும் ஊட்டசத்து மிக்க ஒரு வகை நொதிப்பொருளினால் அதன் உடலில் ஏற்படும் மாற்றமே அவற்றை உருவாக்குகிறது. அந்த நொதிப்பொருளுக்கு TOR (Target of Rapamycin) ராப்பாமைசின் அடைவி என்று பெயர்.
நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான தேனீக்கள் இருக்கும்.
அவற்றில் நிர்வாக கோளாரோ, குளருபடியோ ஏற்படுவதில்லை. தேன்கூடுகள் பெண்களின் ராஜ்ஜியம்.
வேலைக்கார தேனீக்கள் அனைத்தும் பெண் தேனீக்கள் ஆனால் மலடுகள். ராணி தேனீக்கு இவை கட்டுப்பட்டவை. சுறுசுறுப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பெயர் பெற்றவை. 24 மணிநேரமும் உழைக்கப் பிறந்தவை. தேனை சேகரிப்பது கூட்டை நிர்மானிப்பது, லார்வா, ராணி ஈ, ஆண் ஈ, இவற்றிற்கு உணவளிப்பது இப்படி. எதிரிகளை தாக்க இவை கொடுக்கினால் கொட்டுகின்றன. கொடுக்கினை இழந்த தேனீக்கள் இறந்துவிடும். ( தற்கொலைப்படை ?!)
அறுங்கோண அறைகளையே கட்டுகிறது. கட்டுமாணங்களில் சிறந்த வடிவமைப்பு இந்த அறுங்கோணம் இதற்கு பழுதாங்கும் மற்றும் இழுவை திறன் அதிகம். (வாட் எ ஜீனியஸ் !! )
மர பிசின்களைக்கொண்டும் அவற்றில் சுரக்கும் நொதியங்களை வைத்தும் புரோபோலின் எனப்படும் பிசினைக்கொண்டு மெழுகாலான பலவித பயன்பாடு கொண்ட அறைகளை (கூட்டை hive ) கட்டுகிறது.
ஊணவு கிடைக்குமிடம், திசை, ஆபத்து, இப்படி பல விசயங்களை நடனம் மூலம் பறிமாறிக் கொள்கின்றன. சுற்றி சுற்றிப்பறப்பது, நேர்கோட்டில் சென்று நடுநடுங்கி பறந்து பின் வளைந்து திரும்புவது இப்படி பல சமிஞ்சைகள். (காணொளி காண்க)
இதன் வகைகள் மலைத்தேனீ (Epis Dorsata), கொம்புத்தேனீ - (Apis Florea), அடுக்குத்தேனீ - (Apis Indica) கொசுத்தேனீ - (Apis Melipona), மேற்குலகத்தேனீக்கள் மற்றும் ஆசிய தேனீக்கள்