தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் ! என்ற பதிவின் தொடர்ச்சி இப்பதிவு.
இரட்டை கரு உருவாக்கம் எப்படி நிகழ்கிறது ?
முட்டை விந்து செல்லுடன் இணைந்து எம்பிரையோ (Embryo) எனும் கரு உருவாகிறது. கருவானது சில சமயங்களில் உருவான 15 தினங்களுக்குள்ளாக இரண்டாக பகுப்படையும் பட்சத்தில் பிரிந்த சரிசமமான இக்கருக்கள் (இது ஏன் என்பது விளங்கவில்லை)சிசுவை உருவாக்குகிறது. பகுப்பு ஆரம்பித்து 12 தினங்கள் ஆன சமயத்தில் தனிதனியாக வளரும் போது இக்கருவானது ஒரே மாதிரியான சிசுக்களாக மாற்றம் பெறுகிறது.
உடலோடு ஒட்டி பிறக்க காரணம் என்ன ? என்பதை விஞ்ஞானிகளால் அறுதியிட்டு கூற முடியவில்லை. இருப்பினும் இரண்டு தியரிகளை சொல்கிறார்கள்.
Fission theory ஃபிஸன் தியரி - கரு கூடி வளர்தல்
பகுப்பு ஆரம்பித்து 12 தினங்களில் ஏதோ காரணத்தால் முழுமை அடையாமல்
போகலாம் அப்படிப்பட்ட சமயத்தில் இவ்விணைக்கருக்கள் சரியாக பிரியாமல் அந்த நிலையிலேயே வளர்ச்சி அடையும் போது சிசுக்கள் ஒட்டி பிறக்கின்றன. என்பது
Fusion theory ஃபியூஜன் தியரி - கரு வளர்ந்து கூடுதல்
பிரிந்து வளரும் சரிசமக் கருக்கள் இறுதி கட்ட நிலைக்கு முன் நிலையில் ஏதோ காரணத்தால் இணைந்து வளர்ச்சி அடைதல்.
உடலின் பின்புறத்தில் ஒட்டி பிறந்த பெண் இரட்டையர்
உடல் பகுதியில் ஒட்டி பிறந்து சர்கஸில் வேடிக்கை காட்டி வாழ்கை நடத்திய ஒட்டிப்பிறந்த இரட்டையர்.
பெரும்பாலான ஒட்டி பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களில் இறப்பெய்துகின்றன.
2011 ல் சூடானில் பிறந்த தலை ஒட்டி பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் (ரிடாக் மற்றும் ரிட்டல்கோபுரா ) பதினோரு மாதங்களுக்கு பின் நான்கு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிக்கப்பட்டன. இவ்விரு குழந்தைகளுக்கும் சிறப்பு தலை கவசங்கள் பொருத்தப் பட்டு உள்ளன.
இது நவீன அறுவை மருத்துவத்தின் சாதனையாக கருதப்படுகிறது.
பல வரலாற்று கல்வெட்டு, காசுகள், படிமங்கள், களிமண் அச்சுகள்,பாண்டங்கள்,சிம்மாசனம்... இப்படி பல தரப்பட்ட பதிவுகளில் இருந்து தகவல்களை பார்க்கையில் அனேக ஒட்டி பிறந்த இரட்டை உயிரினங்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்துள்ளன என்ற முடிவிற்கு வரமுடிகிறது.
அகநானூறு புறநானூற்று பாடல்களில் இருந்து இரட்டை தலை பறவைகள், பஞ்ச தந்திரக்கதைகளில் இரட்டை தலை யாழி (யானை போன்ற உயிரினம்) போன்ற விசித்திர உயிரினங்கள் இருந்ததாக அறிகிறோம்.
மாயன் சிற்பம்
இதுபோல இரட்டை பறவை, கழுகு இவற்றை பல நாடுகள் சின்னமாக கொண்டுள்ளன.
இரட்டை கழுகு சின்னம் அல்பானிய தேசியக் கொடி
துருக்கி ரஷ்ய இலங்கையிலும் இரட்டை பறவை சிற்பங்கள் உள்ளன.
Sculpture in Keladi Temple, Karnataka
Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC
சில படங்களை இங்கு பகிர்கிறேன் அவற்றின் உண்மை தன்மை உங்கள் பரிசோதனைக்கு விட்டு விடுகிறேன்.