வேற்றுகிரக வாசிகள்,பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம். (ஏலியன்ஸ் இருக்குதா? இல்லையா? சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்... அது வேறு)
மாயன்கள் காலத்தில்(இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம். நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது. 12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது. இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன.
அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா? மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்.. இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது.
ராட்சஷனின் படிமம் Fossilized giant
டிசம்பர் 1895ல் பிரிட்டிஷ் ஸ்டேண்டேர்ட் சஞ்சிகையில் (the British Strand magazine) ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 12 அடி உயரமுள்ள ஒரு இராட்சஷ மனித உருவத்தின் படிமம் அயர்லாந்தில் கண்டறியப்பட்டது என்பதுதான் செய்தி. அந்த உருவத்தின் உயரம் 12 அடி இரண்டு அங்குலம், மார்பின் சுற்று ஆறு அடி ஆறு அங்குலம், கைகளின் நீளம் நான்கடி ஆறு அங்குலம், வலது காலில் ஆறு விரல்கள் (பைபிளில் சொல்லப்படும் ராட்சசனோ ? என்ற விளக்கம் அளிக்கபபட்டது..விடைதெரியா மர்மம்)
புனித உடற்போர்வை (Shroud of Turin)
யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர். பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் 3000 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.
செக்கோந்தோ பீயா என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நெகட்டிவ் மூலமாகவே முதன் முதலில் உருவம் தெளிவாக தெரிந்தது (1898) உலகிற்கு அறியக்கிடைத்தது. இரத்தம் உறைந்த பகுதிகள் கைகள் சிலுவையில் அறையப்பட்டதற்கான தடயம் உள்ளது. இப்புனித துணி நெருப்பில் இருந்து எரிவதிலிருந்தும் தப்பியதாகவும் அறிகிறோம். கருப்பு வெள்ளை ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது.
கிருஸ்துவின் உருவம் எப்படி இந்த துணியில் மெல்லியதாக தெரிகிறது என்பது ஆச்சர்யமானது. இந்த ஆய்வு மதத்தவரை புண்படுத்தும் என்பதாலோ? அல்லது பரிசோதனை பிரியோசனம் இல்லை என்பதாலோ விடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
ஆகக்கூடி இது குறித்த சர்ச்சைக்கு முடிவு கிட்டவில்லை. புலப்படா மர்மங்களில் இதுவும் ஒன்று. Download As PDF