சுவடுகளைத் தேடி எனும் இத்தொடர் கட்டுரை குறிப்பாக நொய்யல் ஆறு மற்றும் கொங்கு மண்டலத்தின் கோவை மாநகரின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழமையான ஊர் பேரூர் குறித்த வரலாற்று தகவல்களை எழுத இருக்கிறேன் வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவுடன். >>>>>கலாகுமரன்<<<<<<<
வரலாற்றுப் பெட்டகம் பேரூர்.
கொங்கு மண்டலத்தின் வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களின் டைரியில் தவிர்க்க முடியாத அங்கம் பேரூர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அரசவனமாக இருந்துள்ளது. பேரூரில் கோவில் எழுப்பப்பட்ட பிறகு சுற்றியுள்ள நிலங்கள் அதற்கு தானமாக கொடுக்கப்பட்டு இருந்தது. கிழக்கு எல்லை யாக முத்தண்ணன் குளம் இருந்தது. அதாவது இன்றைய காந்தி பார்க் பகுதி. அக்காலத்தில் மக்களின் போக்குவரத்து மிகுந்த ஊராக பேரூர் இருந்தது.
பேரூரை சிறப்பு பெற்ற தளமாக விளங்க முக்கிய வரலாற்று சாட்சியாக கம்பீரமாக வீற்றிருக்கும் பட்டீஸ்வரர் (சிவன்) கோவில்.
எந்த ஒரு நாகரீகமும் நதிக்கரையில் தொடக்கம். நாமும் ஜீவ நதியாக ஓடும் நொய்யல் நதியில் இருந்து தொடங்குகிறோம். காவிரியின் செல்ல மகள் என கருதப்படுவது. செலிப்பான வற்றாத ஜீவநதி இன்று அதன் தன்மையை இழந்து நிற்பது நிதற்சன உண்மை. மனிதன் தன் சுயநலங்களுக்காக ஏற்படுத்திய பல ஆக்கிரமிப்புகள், இயற்கை வள சுரண்டல்கள். தனக்கு தானே அழிவைத் தேடுகிறான் என்றே சொல்லவேண்டும். இயற்கையின் சீறழிவுகளுக்குப் பிறகும் நமக்கு நன்மை ஒன்றையே செய்பவை ஆறுகள் என்பது மிகையில்லை. (...இந்நதியை பற்றி பிறகு விரிவாக பார்போம்.)
காஞ்சிமாநதி எனும் நொய்யல் ஆற்றின் பேரூர் படித்துறை சோழர்களால் கட்டப்பட்டது.
இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்கள், ஓலை சுவடிகளில் இருந்து பல பெயர்கள் நாம் அறிய கிடைக்கிறது. விக்கிரம சோழன், வீரசோழன், வீரராஜேந்திர சோழன், கரிகாற்சோழன், வீரபாண்டியன், மாதையன், மூன்றாம் வீரவல்லாளன் ...இப்படி பல.
இவர்களைப்பற்றிய வரலாற்று சான்றுகளை பின்னர் விரிவாக காண்போம்.
கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர் புராணத்தில் இம் மேலை சிதம்பரம் குறித்து பல ஆதாரங்களை நாம் காண முடிகிறது.
நாம் வழிவழியாக கேள்விப்பட்ட ஒரு செய்தி இப் பகுதி ஆற்றில் எலும்பைப் போட்டால் 48 நாட்களில் அது கல்லாக மாறுவது. ( கேள்விப்பட்ட செய்தி இபோது உண்மை தான் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிப்பது கடினம் என்று நினைக்கிறேன்.)
இப்பகுதியில் வளர்ந்த புற்கள் மற்றும் இலைகளை மட்டுமே சாப்பிட்டு வளரும் கால்நடைகள் போடும் சாணம் புழுப்பதில்லை. அதாவது புழுக்கள் ஊறி வளர்வதில்லை அப்படியே மண்னோடு மக்கிப்போய்விடுகிறது. ( கவனிக்கவும் இயற்கை உணவு உண்ணும் மாடு அல்லது பசு போடும் சாணம். அவற்றிக்கு வைக்கப்படும் தவிடு, பிண்ணாக்கு இத்யாதி இத்யாதி.. இதில் சேர்த்தி இல்லை.) இன்னொரு குறிப்பு, அவை இயற்கையாக இறக்கும் போது அவற்றின் வலது காதை மேல் நோக்கி வைத்த வண்ணமே இறக்கின்றன. (இங்கு பிறந்த எவ்வுயிரும் என்றும் சொல்வர்)
இங்குள்ள ஆற்றின் கரைப்பகுதியில் வடகைலாயநாதர் கோவில் அருகே இருக்கும் ஒரு பனை மரம் நெடு நெடுவென உயர்ந்து நிற்கிறது. இது இறவாப்பனை என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்டு பல தலைமுறை கடந்து இன்னும் செழிப்புடன் இருக்கும் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இது நமக்கு சொல்லும் தெரிவிக்கும் உண்மை அல்லது தத்துவம் என்ன?
அதிகபட்சமாக சாதாரணமாக நல்ல செழிப்பான ஒரு பனை மரம் 80 முதல் 120 ஆண்டுகள் வாழும் என்று சொல்கிறார்கள்.
கற்சிலையும் கவிபாடுமா?, களிநடனம் புரியுமா ? ஒவ்வொரு கல்தூணும் சிற்பங்களும் பல சம்பவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் மௌனமாய் கூறும்.... இன்னும் பல அரிய தகவல்களுடன் தொடர்கிறேன்.
நம்ம ஊர் கோவில் பத்தின தகவல்...அரிய தகவல்கள்...
ReplyDeleteநன்றி, ஜீவா.
ReplyDeleteகற்சிலையும் கவிபாடுமா?, களிநடனம் புரியுமா ?
ReplyDeleteஎத்தனை முறை சென்றாலும் பார்க்க புதிதாய் ஏதாவது கவிபாடும் ஆலயம் !
கவிபாடும் ஆலயம் ! சிறப்பான மொழி நடை நன்றி.
Deleteதங்களின் அறிமுகம் என் விகடனில் ...நேற்று..வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி, ஜீவா
Deleteஅறிந்திடாத செய்திகள் அறிந்த கோவில் ...அருமை இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறோம்
ReplyDeleteசுவடுகளைத் தேடி எனும் தலைப்பில் 5 பகுதிகள் எழுதியுள்ளேன் இன்னும் எழுத இருக்கிறேன். தங்கள் கருத்து மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கிறது நன்றி.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_5.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
வலைச்சர அறிமுகமா ? உடனடி தகவலுக்கு நன்றி தனபாலன் சார்.
Deleteவலைச்சர அறிமுகத்திலிருந்து இங்கு வந்தால், பேரூரைப் பற்றி அறிந்துக் கொண்டேன். தொடருங்கள்.
ReplyDelete