நண்பன் படத்தில் வரும் வைரஸ் [விருமாண்டி சந்தனம்] இல்லை..கம்யூட்டரை தாக்கும் வைரஸ் பற்றியும் இல்லை. இந்த பதிவு மனிதனை தாக்கும் நிஜ வைரஸ்கள் பற்றியது.
உலக அளவில் எது மோசமான வைரஸ் ? இந்த கேள்வி எழும் காரணம் பலவித வைரஸ்கள் இருப்பதால் தான். சில குறிப்பிட்ட கால கட்டங்களில் சில வைரஸ்கள் பிரபலம். தகுந்த மருந்துகள் கண்டுபிடித்து தடுத்து விடுகிறார்கள் சிலவற்றை மட்டுமே முழுக்க பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. சில இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில கொசுக்களைப் போல் அடிக்கும் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி மிகுதியாகி இன்னும் விரியத்துடன் தாக்குபவை. முகமூடி போட்டு கொண்டு மனிதனை உண்டு இல்லை என ஒரு கை பார்ப்பவை.
சரி கேள்விக்கான பதிலை பார்போம். இந்த பட்டியலில் ஒரு ஐந்தை மட்டும் இறுதியில் வரிசைப்படுத்தலாம்.
HIV - ஹெச் ஐ வி (எய்ட்ஸ்)
இதற்காண உலக அளவில் இறப்புகள் அதிகம் தான் வருடத்தில் 1.8 மில்லியன் பேரின் உயிரை பறித்து வருகிறது.
பரவல் : ரத்தத்தின் மூலமாக பரவக்கூடியது. வியர்வை மூலமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுவதில்லை. உயிரணுக்களின் மூலமாக பரவுகிறது.
தடுப்பு மருந்து [Vacsin] : இது வரை இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜ் வரைக்குமான கவனிப்பு [ட்ரீட்மென்ட் ] மட்டுமே மேற்க் கொள்ளப்படுகிறது.
இன்பூளூயன்ஸா [Influenza virus]
வருடத்தின் இறப்புகள் : ஐந்து லட்சம்
பரவல் : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பரவக்கூடியது.
தடுப்பு மருந்து : இன்னும் முழுதாக ஆராயப்படவேண்டி உள்ளது. வருட கால கட்டத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அவ்வளவே.
ரேபிஸ் [Rabies ]
வருடத்தின் இறப்புகள் : 55 ஆயிரம்.
பரவல்: நாய்கடி, வெளவாள் கடி மூலமாக பரவக்கூடியது மற்றும் சில வகைமூலமாக பரவக்கூடியது. இது விலங்கிலிருந்து.
இபோலா [ EBOLA ]
வருடத்தின் இறப்புகள் : 100 க்கு குறைவானது.
பரவல் : விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும். முக்கியமாக இறைச்சி மூலம் பரவுகிறது.
தடுப்பு மருந்து : இல்லை.
ஒரே ஒரு வைரஸ் மட்டுமே உயிரிழப்புகளில் இருந்து முழுக்க முழுக்க தடுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். அது ;
சின்னம்மை [ Smallpox ]
வருட இறப்பு இல்லை. கிடைத்த புள்ளி விவரங்களின் படி தடுக்கப்பட்டது. அல்லது நீக்கப்பட்டது. முன்னர் இதன் வருட இறப்பு 2மில்லியன் ஆக இருந்தது.
பாதிப்பு : காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாக பரவும்.
தடுப்பு மருந்து. நிரந்திரமாக தடுக்கப்பட்டது.
உலக அளவில் வைரஸ் நோய் குறைக்கப்பட்டது என்று சொன்னால் அது இளம்பிள்ளைவாதம் [போலியோ] உயிரை எடுக்காமல் வாழ்நாள் முழுதும் முடக்கி போடும் எமகாதக வைரஸ். [என் வாழ்வில் விளையாடிய மறக்க முடியாத வைரஸ்]
இதற்கு இரண்டு எதிர் தடுப்பு முறைகள் ஒன்று தடுப்பு மருந்து [வேக்சின்] மற்றது எதிர் தடுப்பு தெரபி முறை [Anti viral therapy ] இதில் இரண்டாவது செலவு அதிகம் அதனாலே வருடத்தின் சில குறிப்பிட்ட இடைவெளிகளில் வேக்சின் சொட்டு மருந்தாக போடப்படுகிறது.
மேலே சொன்ன வேக்சின், ஆன்டி வைரல் தெரபி இவைகளை காட்டிலும் ஒரு சிறந்த மருத்துவம் "சூப்பர் புரோடீன் ட்ரகோ " எனும் புதிய டீரீட்மென்ட் இது flu, AIDS; அப்புரம் விலங்குகளில் இருந்து பரவும் நோய்களுக்கு சரியான மருத்துவமாக இருக்கப்போகிறது. இந்த முறையில் வைரசால் தாக்கப்பட்ட செல் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமாம். அதோடு சேர்ந்து அந்த வைரசும் அழிந்து போகும். இது பரவலான மார்கெட்டுக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம்.
2011 ல் டாக்டர் ரைடர் குழு இந்த மருத்துவத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது.
DRACO என்பதன் விரிவாக்கம் Double Stranded RNA [dsRNA] Activated Caspase Oligomerizer
ReplyDeleteஅருமையான தெரிந்து கொள்ளவேண்டிய தொகுப்பு - அறிந்து கொண்டேன், பகிர்வுக்கு நன்றி நண்பரே
தெரியாத தகவல் டிரகோ வைரஸ். இந்த புதிய கண்டுபிடிப்பு வணிகமயமாவதற்குள் எத்தனை புதிய வைரஸ்கள் வரப்போகிறதோ தெரியவில்லை.
ReplyDeleteஎத்தனை எத்தனை இருக்கு... அறிந்து கொண்டேன்... நன்றி...
ReplyDeleteஇது பற்றி சிறிய செய்தி படித்தேன் முழு தகவல் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்.நன்றி
ReplyDeleteநண்பர் மனசாட்சி, தோழி எழில், தனபாலன் சார், நண்பர் பழனிசாமி தங்களின் கருத்துகளுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
Deleteவைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்ங்கிற மாதிரி வைரஸ்ஸை வைரஸால் தான் அழிக்க முடியுமோ? நல்ல தகவல்!
ReplyDeleteBTW,
>>>என் வாழ்வில் விளையாடிய மறக்க முடியாத வைரஸ்<<< இதற்க்கு என்ன பொருள் நண்பரே.. இதன் தாக்கம் தங்களுக்கு இருக்கிறதா?
ஆமாம் நண்பரே ஐந்து வயதில் இதனால் தாக்கப்பட்டவன்.
Deleteநல்ல உபயோகமான தவல் நன்பரே..புதிய விசயத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!
ReplyDeleteநன்றி விஜயன்
Deleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்