மத்திய மற்றும் தென் அமெரிக்கக் காடுகளில் வளரும் ஸ்லவுத் [Sloth] எனும் இவ்விலங்கு ஒரு மந்தமான விலங்கு. சட்டென பார்க்கும் போது நம்மூர் தேவாங்கு [குரங்கு] போல் இருக்கிறது.
இதன் பெயருக்கு ஏற்றார் போல் இது ஸ்லோதான். மில்லியன் ஆண்டு களில் எப்படியோ தப்பி பிழைத்து வந்த அரிய விலங்கு இனம் இது. இதன் அழிவுக்கு பேராசையும் சுயநலமும் மிக்க மனிதர்களே காரணம்.
இது மரங்களின் மேலேயே வசிக்கிறது. மிகவும் சாதுவான விலங்கு.
அதிலும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் இலைகளை மட்டுமே சாப்பிடுகிறது. இந்த இலைகளை வயிரார இது சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இதனுடைய செரிமான அமைப்பு அப்படி.
இது மரத்திற்கு மரம் தாவுவதில்லை மரத்தின் மேலும் கீழுமே இயங்கும்.கால்களில் பாவ் என்று சொல்லப்படும் விரல் அமைப்பு இல்லை நீண்ட மூன்று நகம் போன்று இருக்கும்.
நகர மயமாக்கல்; காடுகளை அழித்தல்; சாலைகளை அமைத்தல் போன்ற காரணிகள் இந்த விலங்கு இனத்தையும் அழிவுக்கு கொண்டு சென்றது.
மரங்களை வெட்டி அழிக்கும் போது மேலிருந்து விழுந்தே பல இறந்து போயின.
இதனுடைய சோம்பேரித்தனமான தோற்றம் மற்றும் நடவடிக்கை மனிதனை கவரவில்லை. இல்லை யென்றால் இதை வளர்ப்பு பிராணியாக வளர்த்திருப்பர்.
ஒரு கட்டத்தில் இந்த இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது.
20 வருடங்களுக்குமுன் [1992] ஒரு நாள் நோய் வாய் பட்ட ஒரு பெண் குட்டி ஏதேச்சையாக குழந்தைகளால் காப்பாற்றப்பட்டு ஜுடி ஏவி எரோயோ எனும் பெண்மணியிடம் சேர்க்கப்பட்டது அதற்கு முதல் உதவி; மருத்துவம் செய்து காப்பாற்றினார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த விளங்கிற்கென கோஸ்டோரிக்காவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விலங்கிற்காக ஒரு சரணாலயம் அமைத்தார் ஜுடி. செல்லப்பிராணியாக குழந்தைபோல் தேவையான கவனிப்புகளுடன் இங்கு இவை வளர்க்கப்படுகின்றன.
ஸ்லவுத் பாது காப்பு மற்றும் வளர்ப்பு மையத்தில் இவைகள் குட்டியிலிருந்து உணவு கொடுத்து பராமரிக்கப்படுகின்றன. சிறந்த மருத்துவ கவனிப்புகளுக்கு உட் படுத்தப்படுகின்றன. அடிபட்ட இவ் விலங்குகளும் இங்கு பராமரிக்கப்பட்டு பின் காட்டில் விடப்பட்டுகின்றன.
குட்டிகள் நன்கு வளர்ந்த நிலையில் [ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர்] இவை சுயமாக காட்டின் சூழ்நிலையை புரிந்து கொண்டு வளர கற்றுக் கொடுக்கப்படுகிறது. பின் இவற்றை அந்த காட்டு பகுதியில் [லிமோன்] விடப்படுகிறது.
இப்பகுதியில் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை நூற்றைம்பது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
அட அப்படியா
ReplyDeleteநன்றி நண்பா
பெருகிவரும் நகரமயமாக்களின் விளைவாக இன்று பல்வேறு விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் தான் இருக்கின்றன! அவற்றை அழிவிலிருந்து தடுத்து காக்கும் இதுபோன்ற முயற்ச்சிகள் பாரட்டப்படவேண்டும்!
ReplyDeleteமிகச்சரி. இன்னொரு தகவல் " அக்டோபர் 4 - உலக விலங்குகள் தினம் "
Deleteஅருமை, இதே மாதிரி எல்லா விலங்குகளையும் காக்க வேண்டும்..............
ReplyDelete