மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் முஷ்டங் பகுதியில் நிறைய உள்ளன.
மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் [Mustang ]மலைபாங்கான பகுதி (காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கு) தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்ட குகைகளினுள் நுழைவது எப்படி ? என்பது புலப்படவில்லை. உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. " ஒரு கிளிப் ஹாங்கர்" போலத்தான் இந்த குகைகளை ஆய்வு செய்யவேண்டும்.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. ( சுமார் 8 முதல் 9 மாடி உயரம்). பெரும்பான்மையானவை 3000 ஆண்டுகள் பழமையானவை ( பெளத்தமதம் பரவுவதற்கு முன்பிருந்தவை)
சுக்ர சாகர் ஸ்ரேஷ்தா (Nepal's archaeologist) எனும் அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய 10000 குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது.
இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ?
எதற்காக யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது.
இந்த குகைகளை பீட் எதென்ஸ் (தொல்பொருள் ஆய்வாளர்) என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது, இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் டிரெக்கிங் மேற்கொண்டார். 2011 ல் எட்டாவது முறையாக இப்பகுதியில் ஆய்வு செய்தார்.
மார்க் அலெண்டெர்ஃபெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்). இவர்களோடு ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும் (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் உடனிருந்தனர்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் சுருசுருப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பல அரசர்கள் ஆண்ட பகுதி.
முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்தமத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. இந்த வணிகத்திற்கு உப்பு ஏற்றி சென்ற வண்டி தடங்களே சாட்சி. 17 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது காரணம் குறைந்த விலையுள்ள உப்பு இந்தியாவில் கிடைக்க ஆரம்பித்ததே என்று சொல்கிறார்கள்.
சாம்ட்ஜோங்க் எனும் பகுதியிலும் நிறைய குகைகள் காணப்படுகின்றன.
நேபால் (நே என்றால் புனித , பால் என்றால் குகைகள்)
ஒரு காலத்தில் செழிப்பான பகுதியாயிருந்த இந்த பகுதியில்;
அறிய சிலைகளும், ஓவியங்களும் நிறைந்த கோவில்கள் சிதைவுக்குள்ளாகின. ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது.
சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக (மிதமான வெப்பம்) இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மர்ம நிகழ்வுகள் :
ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு ஆய்வு தடை பட்டது (2010)
லிங்கன் எல்ஸ் ( விடியோ கிராஃபர்) தலை ஹெல்மெட் எடுத்த சமயத்தில் கற்கள் பொறிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார்.
இன்னொருவர், ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராஃபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார்.
"இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு. அவர் மந்திர உச்சாடனங்களுடன் ஹோம பூசை செய்து எங்களை அடுத்தடுத்த ஆய்வு மேற்கொள்ள அனுமதித்தார் " நினைவு கூர்கிறார் ஏதென்ஸ்.
அந்த குகைகளில் அப்படி என்ன இருந்தன ? ஆய்வின் விவரங்கள் அடுத்த பகுதியில் படங்களுடன்...
//நேபால் (நே என்றால் புனித , பால் என்றால் குகைகள்)//
ReplyDeleteஇது நிச்சயம் என்னைப் போல் பலருக்கும் புதிய தகவலாய் இருக்கும்.. படிக்க படிக்க ஆர்வமாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்!!
நண்பர் கோவை ஆ.வி -க்கு நன்றி.
Deleteநண்பரே...கற்ற கைமண்ணை விட, கல்லாத உலகளவு திகைக்க வைக்கின்றது.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
உலக சினிமா ரசிகருக்கு நன்றி :)
Deleteவாவ்வ்வவ்வ்வ்!!!
ReplyDeleteஅரிய தகவலை அறிய தந்துள்ளீர். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
வணக்கத்துடன் வரவேற்கிறேன். நன்றி ராஜி மேடம்.
Deleteநல்ல முயற்சி, புதிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDelete//தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. ( சுமார் 8 முதல் 9 மாடி உயரம்). பெரும்பான்மையானவை 3000 ஆண்டுகள் பழமையானவை ( பெளத்தமதம் பரவுவதற்கு முன்பிருந்தவை)//
இமய மலையின் பெரும்பகுதி ஒரு காலத்தில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்த நிலப்பரப்பு என்கிறார்கள்.
இமய மலையின் 5000-6000 அடி உயரத்தில் கடல் அலையின் அறிப்பின் சுவடுகள், கடல் உயிரினம் படிமம் ஆனவை எல்லாம் கிடைத்துள்ளன.
இப்படத்தில் கூட நீரோட்டத்தினால் உருவாகும் வரிகள் போன்ற கோடுகள் பல மட்டத்திலும் தெரிகிறது, அக்காலத்தில் பெரு வெள்ளம்,அல்லது கடல் நீர் அங்கு புகுந்து இருக்கலாம், அதன் விளைவாக உயரமான இடத்தில் குகை அமைத்து தங்கி இருப்பார்கள் என நினைக்கிறேன்.
இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்ததை அப்போது பல வரலாற்று,புராண நூல்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள், இதனை "deluge" பெரு வெள்ளக்காலம் என்கிறார்கள் ,சரியான காலம் கணிக்க முடியவில்லை.நோவாவின் ஆர்க், மனுவின் ,கப்பல் போன்ர புராணங்கள் இதனையே குறிப்பிடுகின்றன.
துருக்கியில் 5000 அடி உயர மலையில் மனிதன் வாழ்ந்த சுவடுகள் இருக்கிறது, அவன் வெள்ளத்திற்கு பயந்தே உயரமான இடத்திற்கு குடிப்பெயர்ந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
பெருவில் மாச்சு பிச்சுவில் மலையில் நகரம் அமைக்கவும் இது போன்ற காரணங்கள் இருந்திருக்க கூடும்.
முழுமையாக ஆய்வுகள் செய்தால் பல இரகசியங்கள் வெளிப்படும் என நினைக்கிறேன்.
விரிவான கருத்தளித்த வெளவால் அவர்களுக்கு எனது நன்றி.
Deleteஅறிந்து கொள்ள வேண்டிய மற்றும் அனுபவப்பூர்வமான, ஆராய்ச்சி செய்ய வேண்டிய பல தகவல்களை அளித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சில தகவல்கள் வாசகர்களுக்காக :
திபெத் 16000 அடி உயரத்தில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லப்பட்டாலும் பல பகுதிகள் சீன மக்கள் குடியரசுப் பகுதி என்று வரையரை சீனாவால் குறிப்பிடப்படுகிறது. சீன ஆளுகையின் கீழ் உள்ள பிரச்சினைக்குறிய பகுதிகளும் அடக்கம்.
திபெத் இனம் தவிரவும் 10க்கு மேற்பட்ட இன மக்கள் இப்பகுதியில் வசிக்கிறார்கள்.
இந்த குகைகளில் எப்போதும் 8 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவுகிறதாம்.
பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடம் இதுதான். இந்நிலப்பரப்பை இந்த ஆறுகள் அறுத்தெடுத்துள்ளன வெள்ள அபாயம் கருதியும் அக்காலத்தில் உயரமான குகைகளில் வசித்திருக்கலாம். மணற் பாங்கு வடிவ குகைகள் என்று சொல்கிறார்கள்.
புவியின் இளமையான பீட பூமி இது எனவும் "உலகத்தின் கூரை" என்றும் குறிப்பிடிப்படுகிறது.
புதிய... ஆனால் அதிசயங்களை சுமந்து வந்த தகவல்கள்! மேலும் வாசிக்க காத்திருக்க செய்தமை.. ஆவலைத் தூண்டியுள்ளது!
ReplyDeleteநன்று! வாழ்த்துக்கள்!
இன்னும் படங்களுடன் கூடிய தகவல் என்பதால் அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன். தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வெங்கடபதி சார்.
Deleteகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ReplyDeleteஅக்சாய் சின் (Aksai Chin) என்பது காஷ்மீரின் வடமேற்கு நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இந்தியாவினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி இந்தியாவுடன் சம்மு காசுமீர் 1947ல் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் கோட்டினை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் இந்திய சீனப் போராக வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும் திபெத்தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.
சுவாரஷ்யமான தெரியாத பல தகவல்கள் அடுத்த பகுதியை அறிய ஆவலாக உள்ளோம் சார்..
ReplyDeleteஇவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ?
ReplyDeleteஎதற்காக யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு
//////////////////////////////////////////
மலைகளைத் தங்களது கைகளால் குடைந்து தம்முடைய வீடுகளைச் செய்து கொண்ட மனித வர்க்கம் ஒன்றைப் பற்றி அல்குரான் சொல்கிறது சார்
நன்றி சிட்டுக்குருவியாரே ! ஒரு புது தகவலையும் தந்திருக்கீங்க மிக்க மகிழ்ச்சி, மின்சார சிக்கலினால் அடுத்த பகுதியை உடனே வெளியிட முடியவில்லை.
Deleteநல்ல ஆய்வு கட்டுரை சார் ,பல தகவல்கள் அறிந்துகொள்ள முடிந்தது .நன்றி !
ReplyDeleteவாருங்கள் நண்பரே. நன்றி !
DeleteKEEP IT UP KALAKUMARAN!
ReplyDelete-VAMUMURALI
அரிய தகவல்... தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி...
tm3
அடுத்த பதிவு நோக்கி-----
ReplyDeleteவித்தியாசமான முயற்சி.............. கலக்குங்கள்!!
ReplyDelete