மீன்கள் சப்தம் எழுப்புமா ?
மற்ற விலங்கினங்களை போல் அல்லாமல் மீன்களால் சப்தம் எழுப்ப
முடியும். மீன்களுக்கு வாயுப் பை [air bladder] என்ற மீச்சிறு உறுப்பு இருக்கு
இந்த காற்றுப்பையில் ரத்தத்தில் இருந்து வாயுக்களை நிரப்பி வைத்துக் கொள்ளும். இது அதன் மிதவை நிலையை தக்கவைத்துக் கொள்ள உபயோகப் படுத்திகொள்கிறது.
தண்ணீர் மேல் மட்டத்தில் சென்றும் வாயுவை நிரப்பி கொள்ளும். சில
மீன்கள் இந்த உறுப்பை கொண்டு சப்தம் செய்கிறது. சில மீன்கள் பல் போன்ற
உறுப்புக்களை நற நற வென்று கடித்தும் சப்தம் ஏற்படுத்தும்.
(Oyster Toadfish ) தேரைமீன்கள் தம் இணையை அழைக்க விசில் (சீல்கை) சப்தம்
எழுப்புகிறது. இந்த சப்தத்தை மனிதர்களால் கேட்க முடியும்.
(mackerel utter )மேக்ரெல், drumfish டிரம் மீன் வகை மீன்கள் எழுப்பும் ஒலியை நீர் மேல்மட்டத்தில் கேட்டிருப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.
[drumfish] டிரம் மீன் கள் நீரில் 60 ஆழத்தின் கீழ் இருந்து ஒலி ஏற்படுத்துகின்றன.
அவ்வளவுக்கு ஏன் நாம் வீடுகளில் வளர்க்கும் வண்ணமீன்களில் குறிப்பாக
தங்கமீன்கள் எழுப்பும் "பொளக்" ஒலியை அவதானிக்கலாம்.
சரி மீன்களுக்கு காது உண்டா சப்தங்களை எப்படி கேட்கிறது?
கடலின் அடியில் சென்றுவரும் "டிரைவர்கள்" கடல் உள்ளே அமைதியாக
இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பல சப்தங்களை மனிதனால்
கேட்க முடிவதில்லை என்பதே உண்மை. மேலே சொன்னோம் மீன்கள்
சப்தம் எழுப்புவதாக அப்படி இருக்கும் போது சப்தங்களை கேட்க அவை
களுக்கு காதுகள் இருக்கின்றனவா? தலைப்பகுதியில் இருந்து வால்வரை நீண்ட நீளமான நுணர் உறுப்புகள் மிக மெல்லிய உறுப்பு மூலம் சப்தங்களையும் அதிர்வுகளையும் அவைகள் உணர்ந்துகொள்கின்றன.
பூனை மீன்களால் [Catfish] எல்லாவித சப்தங்களையும் கேட்க முடியும் என்கிறார்கள். (படத்தில் இருப்பது)
இருட்டில் மீன்கள் ஒன்றை ஒன்று மோதாமல் நீந்துமா?
மீன்களின் செவுள்களில் (Gills ) இருந்து வால்வரை மெல்லிய புலன் உறுப்பு மற்ற மீன்கள் மீது மோதாமல் செல்லவும் எதிரிகளிடம் தற்காத்துகொள்ளவும் உதவுகிறது. இது மிக மெல்லிய அதிர்வலைகளை உடனுக்குடன் உணர்ந்துகொள்ளும். இரவில் எதிரே இருப்பது மீனா பாறையா என்பதை எல்லாம் இந்த நுணர் உறுப்பின் மூலம் அது அறிந்துகொள்ளும்.
(இருட்டில் எதிரே வருபவன் மீது மோதாமல் நம்மால்
போக முடியுமா? )
வலை இல்லாமல் கைகளால் மீன் பிடித்தல்
(maori) நியூசிலாந்து குக் தீவின மக்கள் "மெளரி" அவர்களின் பாரம்பர்ய மீன்
பிடித்தல் வித்தியாசமானது. தெளிந்த நீருக்கடியில் சலனமில்லாமல் இருந்தபடியே மீன்களை தடவி (கிச்சு கிச்சு மூட்டுவது போல) பின் அவற்றை வெறும் கைகளால் பிடிக்கிறார்கள்.

மீன்கள் பற்றி எவ்வளவு விஷயங்கள். நிறைய தெரியாத விஷயங்கள். படங்கள் அருமை. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஇன்றும் மீனாவைப் பார்த்து விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பது தெரியும். ஆனா மீன்கள் விசிலடிக்குமான்னு இதுவரை தெரியாது.. (மேலே சொன்ன மேட்டர் எந்த வகையிலும் பதிவர் செங்கோவியை குறிக்காது என்பதை தெரிவித்துக் "கொல்கிறோம்"
ReplyDelete//இருட்டில் எதிரே வருபவன் மீது மோதாமல் போக முடியுமா??// வெளிச்சத்துலையே மோதாம போக முடியல, இன்றைய சூழல்ல..
ReplyDelete
ReplyDeleteமீன்கள் விசிலடிக்குமா ? = இனியவை கூறல்
புதிய தகவல்கள் கொண்ட பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி.
மீன்கள் பற்றிய சுவையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசுவையான தகவல்கள்
ReplyDeleteஅருமையான படங்கள்
நன்றி
தம 3
\\maori) நியூசிலாந்து குக் தீவின மக்கள் "மெளரி" அவர்களின் பாரம்பர்ய மீன்
ReplyDeleteபிடித்தல் வித்தியாசமானது. தெளிந்த நீருக்கடியில் சலனமில்லாமல் இருந்தபடியே மீன்களை தடவி (கிச்சு கிச்சு மூட்டுவது போல) பின் அவற்றை வெறும் கைகளால் பிடிக்கிறார்கள்.\\ இதென்ன கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிச்ச கதையா இருக்கு.