ஒளியானது உலோகத்தின் மீது பட்டு பிரதி பலிக்கும் போது ஏற்படும் எலக்ட்ரான் அடர்த்தி அலைகள் ப்ளாஸ்மான்கள் (Plasmons ) என அழைக்கப்படுகிறது. இதனுடைய அலை நீளமானது சாதாரன ஒளியின் அலை நீளத்தை விட பத்து மடங்கு குறைவானது.
100 மில்லியன் மிகச்ச்ச்சிறு (அதாவது ஒரு துளையின் அளவு நம் தலைமுடியை குறுக்குவிட்டத்தின் அளவை விட 200 மடங்கு சிறியது) துளைகளிடப்பட்ட மிக மிக மெல்லிய தங்க தகட்டில் (gold foil) மேற்கொண்ட ஆராய்ச்சியில் ப்ளாஸ்மான்ஸ் எனும் ஒளியானது பிரதி பலிப்பதை கண்டறிந்தார் “ தாமஸ் எபீஸன் (Ebbeesen)” ( ஆண்டு 1989 ) இது மேஜிக் ஒளி என்று மட்டுமே அப்போது அறியப்பட்டது.(நார்வே காரரான இவர் யு எஸ் NEC research institute ல் physical chemist ஆக இருந்தார் )
அவரின் உடன் வேலை செய்தவர் பத்து ஆண்டுகளுக்கு பின் இந்த மேஜிக் ஒளி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார் இந்த ஒளியே நானோ டெக்னாலஜியில் பல புது திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. டிஜிடல் கேமரா, சோலார் எனர்ஜி, கேன்சர் தெரபி,கம்யூட்டர் மைக்ரோ சிப்புகள்,ஆப்டிக் கேபில்கள், இப்படி பல துறைகளில் இந்த டெக்னாலஜி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ப்ளாஸ்மான்கள் ஒளியோடு எலக்ட்ரோ மேக்னடிக் அலையையும் கடத்தும்.
லிகியூர்கஸ் கோப்பை (Lycurgus Cup)
நான்காம் நூற்றாண்டு (CE ) ரோமன் காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை லண்டன் மியூசியத்தில் உள்ளது. இது கண்ணாடி மற்றும் உலோக தாதுக் கலவையால் தயாரிக்கப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்றால் வெளிப்புறத்தில் விழும் ஒளியினால் பச்சை நிறமாகவும் உள்புறத்தில் பிரதிபலிக்கும் ஒளியினால் வெளிர் சிகப்பு நிறமாகவும் கோப்பை ஒளிருகிறது.
அப்படியானால் அந்த காலத்திலேயே ப்ளாஸ்மான்களை பற்றி அறிந்திருக்கின்றனரா ? ( ரோம தேசத்தார்க்கும் தமிழருக்கும் தொடர்பிருந்தது என்று வரலாறு சொல்கிறது..அது தனி ஆராய்ச்சி ? ! )
புற்றுநோய்க்கு நானோ தங்கப்பொடி சிகிச்சை (Gold particles kill cancer cells)
(நம்மூர் தங்கபஸ்பம் சிக்கிச்சை நாம் அறிந்தது தான்)
புற்று நோய்க்கு நீண்ட கால ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன புற்று நோய் கிருமிகளும் பல வடிவங்களில் விஷ்வரூபமெடுத்து கொண்டே இருக்கின்றன.
நானோ டெக்னாலஜி மற்றும் மேலே சொன்ன ப்ளாஸ்மான் டெக்னாலஜியை இணைத்து இதற்கு தீர்வு காண எலிகளிடம் சோதனைகள் நிகழ்த்தி வெற்றி கண்டுள்ளனர்.
100 nm (nanometres)குறுக்குவிட்டமுள்ள மீச்சிறு தங்க துகள்களை சிலிக்கன் உட்கரு மற்றும் ரத்தசெல்களை பயன்படுத்தி ஒரு மாய உறை (Camouflages) நுண்பொருளை தயாரித்து அதை ரத்த நாளங்களினுள் செலுத்தி புற்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்புகிறார்கள்.
பின் ப்ளாஸ்மான் டெக்னாலஜியைப் பயன்படுத்தி 120 டிகிரி வெப்பக்கதிரை ஏற்படுத்தி புற்று கிருமிகளை அழிக்கிறார்கள்.பின் தங்க துகள்களை மீட்டெடுக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையினால் பின்விளைவுகள் ஏற்படாது 10 - 12 நாட்களில் முழுக்க குணமடைந்து விடலாம் என்கிறார்கள்.
எலிகளிடம் மட்டுமே இச்சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்.
(பி.கு என்னால் புரிந்து கொள்ளப்பட்ட அளவிலேயே மேற்சொன்ன தகவல்களை கொடுத்திருக்கிறேன். கூடுதல் தகவல் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நானோ டெக்னாலஜி எதிர்கால வரலாற்றில் பல பல சாதனைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்)
எப்படியோ புதிய டெக்னாலஜி பயன்படுத்தி புற்று நோய்க்கு ஒரு விடிவு காலம் வரட்டும்...
ReplyDeleteவரட்டும்... வரவேற்கிறோம்.
Deleteநல்லதொரு தகவல்..நன்று..வாழ்த்துக்கள் !
ReplyDeleteபுதிய தகவல்கள்.. பதிவுக்கு நன்றி
ReplyDeleteகோவை ஆவிக்கு நன்றி!
Deleteமருத்துவத்துரையின் சமீபத்திய ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.
ReplyDeleteமிக்க நன்றி முரளிதரன் அவர்களே!
Deleteகான்செர் தீர்வு வந்தா நல்லாயிருக்கும் ஆனா எவ்வளவு போட்டு தீட்டுவானுன்களோ.
ReplyDeleteஉண்மைதான், வயத்துவலிக்கு அட்மிட் ஆனாலே பலமா தீட்டிராங்க ...
Deleteபயனுள்ள பதிவுங்க
ReplyDeleteநன்றி சக்தி :)
Delete