சமீபத்தில் எமது குடியிருப்பு பகுதியில் கொசுத் தொல்லைக்கு என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, சாக்கடையின் மேல் சிமெண்ட் பலகைகளை அமைக்க யோசனை சொல்லப்பட்டது. இன்னொருவர் கொசு பிடித்து உண்ணும் செடியை வளர்க்களாமா? என்றார். கொடுமைக்கார பாவிகளை இந்த மாதிரி பிடிச்சு சாப்பிடும் மரத்தில போட்டிடனும் என்றார் இன்னொருவர் ? ! இப்படி சுவரசியாமாக போய் கொண்டிருந்தது பேச்சு...
சரி விசயத்திற்கு வருவோம் பூச்சியுண்ணும் தாவரம் பற்றி (கேரளா) திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன இது புழு பூச்சிகளை எளிதில் கவர்கிறது. (அவதார் திரைப்படத்தில் இது போன்ற தாவரங்கள் காட்டப்பட்டது)
இதற்கு முன் இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்று உலக ஆய்வாளர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்க தக்கது.
பூச்சியுண்ணும் தாவரம் கோப்பை போன்ற பூக்களை கொண்டிருக்கும் அதனுள் சுவையான நீர்மம் நிறம்பிக் காணப்படும். உட்பாகம் வழுவழுப்பான மெழுகு போன்ற சுவர் அமைப்பு உடையது. சிக்கிக்கொள்ளும் எறும்பு, பூச்சி, புழுக்கள்,சிலந்திகள் இதிலிருந்து வெளியேர முடியாமல் மூழ்கிவிடும் இந்த பூவின் மேலுள்ள மூடி போன்ற அமைப்பு இதை மூடி விடுகிறது. உள்ளே சிக்கிய பூச்சிகள் அந்த நீர்மத்தில் கரைந்து ( ingested)அந்த தாவரத்திற்கு உணவாகி விடுகிறது.
போர்னியோ, சுமத்திரா தீவு மழைக்காடுகளில் சுமார் 100 வகையான இத்தகைய ( largest carnivorous plants) ஊன் உண்ணும் தாவரங்கள் காணப்படுகின்றன.
”Giant meat-eating plants / munkey cup plant ”
டிராபிகல் பிட்சர் (Tropical pitchers )எனும் தாவரம் சிறு எலிகள், பல்லிகளை உணவாக்கி கொள்கிறது. இந்த கொடி வகை தாவரம் பெரிய கோப்பை (மங்கி கப்) போன்ற பூக்களை கொண்டது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வளர்கிறது. இதனுள் உள்ள திரவம் இவற்றை செரிக்க செய்கிறது. ஊன் உண்ணும் மனிதர்கள்,விலங்குகள் போல இவையும் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறது.
உலகத்திலேயே நிபந்தஸ் ரஜா (Nepenthes rajah ) என்பதுதான் பெரிய ஊன் உண்ணும் தாவரம் இதனுடைய திரவ கொள் அளவு இரண்டு லிட்டர்.
வீனஸ் பிளை டிராப் சட்டென 20 நொடிகளில் பூச்சியை பிடித்து உண்கிறது. மிக மெதுவான காணொளியில் இதை காணலாம்.
படங்களும் செய்திகளும் அருமை ...நடுநிலை வகுப்புகளில் படித்த நினைவு ஆனால் இப்படி ஒளி படங்களுடன் விளக்கும் போது மாணவர்கள் மனதில் பதியும் நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சரளா !
Deleteசூப்பர் நண்பரே. அதென்ன BBC லிங்க் போகும்போதே வேலை செய்யாது என்கிறான் !!
ReplyDeleteஆமாம் டைரக்ட் சோர்ஸ் கோடில் போனா வராது. பேஸ்ஜ் தலைப்புமேல் சொடுக்கி போனால் வேலை செய்யும். அடோபி ப்ளாஸ் இல்லாத சிஸ்டத்திலேயும் இது வேலை செய்யாது.
Delete
ReplyDeleteவீடியோ பார்த்தேன். சான்சே இல்லை............. வெள்ளைக் காரன் வெள்ளைக் காரன்தான்!!
மிகச்சிறிய கேமரா வச்சு இந்த வீடியோவை எடுத்திருக்காங்க.. ஈயின் இறகு சப்தம் கூட துல்லியமா வந்திருக்கும். 20 செகண்டுல டக்குனு மூடிக்கும். அதனால ஸ்லோ மோசன்ல விடியோவை போட்டிருக்காங்க. நன்றிங்க
Deleteகாணொளி அருமை! கட்டுரையும் மிக அருமை!
ReplyDeleteமிக்க நன்றி முத்துசிதறல் மனோ !
Deleteதகவல்களும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteகண்ணொளி பார்க்க முடியவில்லை... நல்ல பகிர்வு...
ReplyDeleteசில சமயங்களில் தெரிவதில்ல..நன்றி தனபாலன் சார்!
Deleteமுன்பு ப்ளாஸ் வீடியோ திறப்பதற்கு நேரமானதால் தற்போது மாற்றி விட்டேன்.
Deleteவழக்கம் போல் சூப்பர் ஸார்.. சிறு வயதில் நெப்பன்திஸ் பற்றிப் படித்த ஞாபகம்..
ReplyDeleteஅமேசன்,இந்தோனேசியக் காடுகளில் சிறுவகை எலி,தவளைகளை உண்ணும் தாவரங்கள் உண்டு. இத்தாவரங்களின் சாடி போன்ற அமைப்பில் உள்ள கவரும் மணமிக்க திரவங்கள் இச்சிற்றுயிர்களைக் கவர்வதாகவே ஆய்வு கூறுகிறது.
ReplyDeleteஇங்கு பூச்சியுண்ணும் தாவரங்களை பூக்கடைகளில் வாங்கலாம்.
இங்கே இத் தாவரங்கள் கிடைப்பதில்லை அதோட கிழங்கோ, விதையோ இருந்தால அனுப்பி வையுங்கள் இங்க கொசுத்தொல்லை தாங்க முடிவதில்லை :-) :-)
Deleteகலாகுமரன்,
ReplyDeleteநல்லப்பதிவு.
சில நாட்களுக்கு முன் மனிதன் தாவர உணவு உண்னுவது போல தான் படைக்கப்பட்டுள்ளான் என பினாத்திய ஒருவருக்கு, அசைவம் உண்னும் தாவரங்கள்னு விக்கி சுட்டிய தான் பதிலாக கொடுத்தேன் :-))
உங்கப்பதிவு அப்போவே வந்திருந்தா கொடுத்திருப்பேன் ,அப்போவாச்சும் தாவரமே அசைவம் உண்டும் போது மனுசன் உண்டால் என்னனு புரிஞ்சிருக்கும் :-))
பூச்சியுண்னும் தாவரங்கள் விலங்குகளுக்கும்,தாவரத்துக்கும் இடையே உள்ள பரிணாம தொடர்பையே காட்டுகின்றன.
விலங்குகளில் உள்ளது போன்ற புரோட்டின், கொழுப்பு செரிக்கும் நொதிகள் தாவரங்களும் சுரப்பது கண்டிப்பாக பரிணாமத்தின் விளைவே.
ஆதி காலத்தில் மனிதன் கிழங்கு பழம் அப்புரம் பச்சை கறியை சாப்பிட்டிருக்க வேணும். இன்னும் சொல்லப்போனா டயனோசர் காலத்தில் எல்லாம் பெரிசு பெரிசாத்தான் இருந்ததென்றால் இவ்வகை தாவரமும் பெரிசா இருக்க வாய்ப்பு உண்டு இல்லைங்களா? இந்த நொதி சமாச்சாரமும் உடலின் சுற்று சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறி வந்திருக்கனும். தாவரமே அசைவம் சாப்பிடும் போது மனிதன் சாப்பிட எந்த பிரச்சனையும் இல்லை. அவன் தாவர பட்சிணி தான் என்ற வியாக்யாணம் அடிபட்டுப் போகிறது. புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் அசைவம் சாப்பிடுவது சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
Deleteமனிதன் கிழங்குமாதிரி பச்சையா சாப்பிடும் மீன்னும் கடல் உயிரனமும் உண்டு இல்லையா ?
மிக்க நன்றி !!