தொடர்புடைய பதிவு : தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்
முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.
நன்றி :பி.பி.சி செய்திகள் : கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 12:58 ஜிஎம்டி
நன்றி...
ReplyDeleteதினமும் 24 மணிநேரம் மட்டும் தூங்கும் சிலரை என்ன செய்வது...?
தூக்கத்தையே ஒரு வேலையாக செய்பவர்கள் !! ஹா ஹா நன்றி!
Deleteநன்றி
ReplyDeleteவாங்க முத்தரசு ! நன்றி
Deleteசிலர் 6 மணிங்கறாங்க... ஒரு வகுப்பில் 7 மணி நேரம்ன்னாங்க... இப்ப நீங்க 8 மணி நேரம்கறீங்க.... இதுல எதைப் பின்பற்றுவது? ரொம்ப குழம்பி தூக்கமே வரலைங்க....
ReplyDeleteஎட்டு மணி நேரம் என்பது ஒரு சராசரி கணக்கு. ஆழ்ந்த உறக்கம் ஐந்து மணி நேரம் போதும்.பெரியவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு மணிநேரம் போதுமானது. இது அவர்களின் உடல் நிலையைப் பொருத்தது. குழந்தைகள் அதிக நேரம் தூங்குகின்றன. அவர்களின் வளர்ச்சிக்கு இது அவசியம்.
Deleteநல்ல செய்தி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் பல...
நன்றிங்க ! மகேந்திரன்.
Deleteஅப்படியா, நானும் ஆறு-ஆறரை மணி நேரம் தான் தூங்குறேன்.. சரி, இன்னைக்கு இருந்து நல்லா தூங்கணும்..
ReplyDeleteநம் உடலின் இம்யூனல் சிஸ்டத்தின் படி வாரத்தில் இரண்டு நாட்கள் நல்லா தூங்கினால் கூட போதும். குறைவாகத் தூங்கினாலும் சுறு சுறுப்பா சில பேர் இருக்கிறாங்க. குட்டி தூக்கம் கூட தேவையாயிருக்கு :)
Delete