சில பேர் வாழ்கை குறித்து விசனபடுகிறார்கள், வாழ்க்கை மேல் வெறுப்பு கொள்கிறார்கள் அவர்களிடம் அற்பமாக நினைக்கும் மண் புழுவை பற்றி என்ன தெரியும், சொல்லுங்கள் என கேட்கலாம்.
மண் புழுக்களுக்கு உணர்ச்சி உறுப்புகள் வெகு அற்பமாக வாய்த்திருக்கிறது. இருளையும் ஒளியையும் அவற்றினால் பிரித்துணர முடியும் ஆனால் பார்க்கும் புலன் கிடையாது. முழுசெவிடு மோப்ப சக்தி உண்டு. ஸ்பரிச உணர்வு உண்டு.
இழுத்து செல்லும் இலைகளில் நேர்த்தியாக துவாரம் இட்டு கொள்ளும் அதுதான் இவற்றின் வீடுகள். சிலவகைப் புழுக்கள் இலைகளால் கோபுரம் போல் வீடுகளைக் கட்டும் வீட்டு வாயிலை உருவாக்கும் அவை உழைக்கும் உழைப்பும் அற்புதமாயிருக்கும். அதே நேரத்தில் பார்வை அற்ற உயிரினம் என்று சொல்ல முடியாது.
அவை ஒரு வினாடிகூட வீணாக்குவதில்லை.
ஒரு அழகிய பசும் புல் தரையைப் பார்க்கும் நாம் அதன் எழிலையும் சமதள நிலத்தையும் கண்டு ரசிக்கிறோம். இந்த அழகிய தோற்றத்திற்கு மூல காரணம் ஒன்றை மறந்து விடக்கூடாது.
இந்த சிறிய உயிரினம் போல் வேறு எந்த உயிரினமும் உலகை வளமாக்கி உலக சரித்திரத்தில் இடம் பெற்றிருக்குமா? சந்தேகம்தான்.
இன்னொரு அற்புதமான உயிரி பவழப்பூச்சி (coral) அது உருவாக்கும் அழகான மேடுகளும், திட்டுகளும் பல உயிரிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இது போல எண்ணற்ற பல உயிரிகள் உண்டு.
ஆறறிவு கொண்ட மனிதனாக பிறந்த நாம் இந்த பூமிக்காக என்ன செய்கிறோம்.
!!? சிந்தித்து பார்க்க வேண்டும்.
" மனிதன் " பெயர் விளக்கம் : மன் என்றால் மனம் . மனிதன் என்றால் அந்த மனதினால் நினைக்கும் ஆற்றல் பெற்றவன். |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !