- ஒரு காரியத்தை செய்யும் பொழுது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்தவும் வேறு சிந்தனை களுக்கு இடம் கொடாதீர்கள்.
- "என்றும் நன்றே செய் நன்றும் இன்றே செய்" என்பதை மனதில் கொண்டு தாமதமின்றி தொடங்கி விடுங்கள்.
- எப்போதும் விழிப்பாய் இருங்கள் நம்மை கவிழ்க்க ஒருவன் இருக்கிறான் என்பதை மனதில் கொண்டிருங்கள்.
- ஓய்வு நேரத்தை என்றும் வீணாக்காதீர்கள். ஓய்வாக இருக்கும் போது நாம் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை எப்போதும் அசை போடுங்கள் உடலுக்கு ஓய்வு அவசியம் மூளைக்கு ஓய்வு என்பது ஒன்றை பற்றியே சிந்திக்காமல் மாற்றி யோசிப்பது தான்.
- எப்போதும் அறிவு பசியுடனே இருங்கள். நல்ல நேரத்தை தவறவிடாதீர்கள்.
- துடிப்பும் வழிப்பும் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வர். சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பர்.
- பயம் ஆழ்ந்த கவலை நம் உடலை கெடுக்கிறது.
- எந்த காரியத்தையும் ஊன்றிபார்த்து கவனமாய் படித்து ஆழ்ந்து யோசித்து, அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருங்கள் அது உங்களின் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
- மனவெழுச்சியும் தீவிர எண்ணமும் எந்த காரியத்தையும் அவசியம் வெற்றி பெறச்செய்யும்.
- மனோதிடம் நம் வாழ்வின் முதுகெலும்பு.
- எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள் உங்கள் சுற்று வட்டாரத்தில் சந்தோஷ காற்றை தவள விடுங்கள்.
- சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரிடமும் இன் முகத்தோடு அன்புடன் பழகுங்கள்.
- குடியா முழுகிடும், எழவாய் போச்சு, ஏதும் நடக்காது போன்று எதிர்மறையாக பேசுவதை தவிருங்கள்.
- வாக்கு சுத்தத்தை மறக்காதீர்கள் எதிலும் ஒரு நேர்மையை கடைப்பிடியுங்கள்.
- அவசரப்பட்டு எந்த காரியத்தையும் உடனே தீர்மானிக்காதீர்கள். மனதினை கேளுங்கள் அதுவே சரியானது.
- கோபத்தை விட்டொழியுங்கள்.
- வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஆசையும் ஆர்வமும் எப்போதும் வளர வேண்டும் அதுவே மனோவலிமை.
- மனோவலிமை உள்ள இடத்தில் பகுத்தறிவு பளிச்சிடும்.
- தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள என்றும் கூச்சப்படாதீர்கள்.
- நல்ல குணம் படைத்த நண்பர்களிடம் பழகுங்கள் உயர்ந்த சிந்தனை தரத்தக்க நூல்களை படியுங்கள். தன்னம்பிக்கை பெற இது அவசியம் உதவிபுரியும்.
Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html
Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !
http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html
மெமரி Card Data Recovery Software !
http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html
''....எப்போதும் விழிப்பாய் இருங்கள் நம்மை கவிழ்க்க ஒருவன் இருக்கிறான் என்பதை மனதில் கொண்டிருங்கள்....''
ReplyDeleteஇன்னும் பல மனம் கவர்ந்த அருமை வழிகள். ஒவ்வொரு நாளும் இதை வாசித்து மனதில் பதித்தாலே வாழ்வில் முன்னேறலாம. பாராட்டுகள் சகோதரா. பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி
Delete"என்றும் நன்றே செய் நன்றும் இன்றே செய்" என்பதை மனதில் கொண்டு தாமதமின்றி தொடங்கி விடுங்கள்.
ReplyDeleteஇனிய முத்து முத்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
arumai
ReplyDeletethanks for your comments.
ReplyDelete