ஏமாற்றம் என்று சொல்லும் போதே, "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறேதே, ஏமாறாதே ....." என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகள் உங்கள் மனதில் ஓடுவதை தவிர்க்க முடியாது.
ஏமாற்ற உணர்வு எப்போது நம்மில் தூண்டப்படுகிறது ? ஆம் குழந்தைப் பருவத்தில். ஒரு குழந்தையின் நடவடிக்கையை கட்டுப்படுத்துகிறோம் அது நல்லதற்கா என்ற காரண காரியங்களை அக்குழந்தை ஆராய்வதில்லை. ஆனால் நாம் அதன் மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே அதற்குப் புரிகிறது. அதற்கு கட்டுபடுவதில்லை எதிர் விளைவை நம்மிடம் காட்டுகிறது. ஆனால் அதன் உள்ளத்தில் ஏமாற்ற உணர்வு பதிக்கப்படுகிறது.
இதனால் நாம் அதற்கு கற்பிக்கும் நல்ல பழக்கங்கள் கூட எதிர் விளைவையே ஏற்படுத்தி பிடிவாத குணத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்துகிறது.
இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இந்த பிடிவாத குணத்தை காணலாம்.
ஆனால் அன்பு குழந்தைகளை கட்டுப்படுத்துகிறது ஒரு புரிதலை எற்படுத்துகிறது.
இதே போல் வயது வந்த இளைஞனை குழந்தை போல நடத்துவது அது எவ்விதமான நல்லதாக இருந்தாலும் அவர்களிடம் ஏமாற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஏமாற்றம் என்னவெல்லாம் சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தவறான வழியில் நடத்தல், பள்ளிப் படிப்பில் ஏற்படும் தோல்வி, இளமையில் தான் தோன்றி தனம், மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கை, வியாபார தொல்லை, விரும்பத்தகாத மனித நடவடிக்கை, சிறுபான்மையர் மீதான இன வெறி, தொழிலாளர் போராட்டம், கலவரங்கள், புரட்சிகள், போர்கள் ஆகியவை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் விரும்புவதை செய்ய என்னை அனுமதிக்காத போது ஏமாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக ஆக்கிரமிப்பு உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த போக்கு தவறானது. எல்லா சந்தர்பங்களிலுமா என்று சொன்னால் இல்லை என்றே சொல்லலாம்.
ஏமாற்றத்தில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி ?
முதலில் ஏமாற்றதை நீங்களே ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். தேவையற்ற கட்டுப்பாடுகளை பிறர் மீது செலுத்தாமல் இருத்தல், கோபதாபங்களை பொருத்துக் கொள்ளல்.
தேவைக்கதிகமாக ஒரு நபரையோ குழுவையோ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலாதீர்கள்.
மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.
நியாயமான இலட்சியத்தை நோக்கி அவர்கள் செல்வதை தடுக்காதீர்கள்.
மற்றவரோடு முரண்பட்டு விவாதம் செய்வதை தவிர்க்கலாம்.
மற்றவர்களை தொல்லைக் குள்ளாக்காதீர்கள்.
உங்கள் எண்ணங்களை பிறர் மீது திணிக்காதீர்கள்.
உங்கள் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரி என்று அவர்கள் எண்ணுகிற சுழ்நிலையை ஏற்படுத்துங்கள்.
மற்றவர்களை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். புகழை குறைக்க முயலாதீர்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் தான் பாராட்டப் பட வேண்டும். மற்றவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள்.
ஏமாற்றத்தை அப்புரப்படுத்துங்கள் இது பிறர் மீதான உங்கள் ஆக்கிரமிப்பை தடுக்கும்.
இறுதியாக ஏமாற்ற உணர்வை நீக்குவது ரொம்ப சுலபம் மற்றவர்களை பாராட்டி விடுங்கள்.
ஆழ்மனதின் ஆக்கிரமிப்பு உணர்ச்சியை கட்டுப்படுத்தினாலே உங்களின் ஏமாற்றத்தை இல்லாமல் செய்துவிடலாம்.
//இறுதியாக ஏமாற்ற உணர்வை நீக்குவது ரொம்ப சுலபம் மற்றவர்களை பாராட்டி விடுங்கள்.//
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மை. நம்மால் எளிதில் செய்ய முடியும் காரியம் பாராட்டு, ஆனால் நாம் செய்ய தயங்கும் காரியமும் அதுவே தான். அழகான சிந்தனை வாழ்த்துக்கள்
படித்துப் பாருங்கள்
வாழ்க்கைக் கொடுத்தவன்
நன்றி சீனு சார்.
Deleteஆமாங்.... அட அட ஏமாற்றம் இம்புட்டு வேலை செய்யும்னு நல்லா சொன்னீங்க போங்க.
ReplyDeleteவாழ்வில் உணர்பவர் மிகச் சிலரே..!
Deleteயாரிடமும் எதையும் எதிர்பார்க்காத பொழுது ஏமாற்றம் ஏற்படுவதே இல்லை.. ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போகிறது..
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியே, கோவிந்த்
Delete