கி.பி 6 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் பல பிரபலங்கள் பிறந்து வாழ்ந்தார்கள். சீனாவில் லாவோட்சே, கன்பூஷியஸ் ;
இந்தியாவில் மகாவீரர், புத்தர்;
யூதர்களில் ஜெர்மையா, எசக்சியல் ;
பாபிலோனில் நேபுசாத்நேட்சர் ;
ஈரானில் சைரஸ் ; கிரீஸ் தேல்ஸ், பிதகோரஸ் ; இப்படி பல பெரியவர்கள் தோன்றிய நூற்றாண்டு அது.
புத்தரின் போதனைகள் அவரது மறைவிற்கு பின் 200 வருடங்களுக்கு பிறகே ஆவணப்படுத்தப்பட்டன. இவை " மாகதி " எனும் மொழியில் இருந்தது. இந்த மொழியே பின்னர் " பாலி " மொழி எனப்பட்டது. பாலி என்றால் பாதுகாக்கும் எனப் பொருள். அதனாலே புத்தரின் மத நூல்கள் பாலி எனவே அழைக்கப் பட்டது.
இப்போது அந்த மொழி பிரயோகத்திலேயே புத்த சமய கிரியைகள் தொடர்கிறது. இம் மதத்தவர் கோயில்கள் சைத்தியம் எனப் பெயர். புத்த பிக்குகள் வசிக்கும் இடம் விகாரங்கள் . அப்போது காஞ்சியை போன்று கட்டிடங்களாக சிலவே இருந்தன. பெரும்பாலும் குகைக் கோயில்கள் அஜந்தா எல்லோரா போன்று [ ஏழாம் அறிவு திரைப்படத்தில் புத்த மதம் மற்றும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பு சிறப்பாக காண்பிக்கப்பட்டதை உங்கள் ஞாபகத்தில் ரிவைண்ட் செய்து கொள்ளலாம் ..! ]
பிதகோரஸ், பிளாட்டோ இவர்கள் இந்திய ஞானிகளின் உபதேசங்களை கிரகித்து தங்கள் தத்துவங்களை எழுதினார்கள். நமது தத்துவங்களே... கிரேக்க தத்துவமானது. இதற்கு வரலாற்று சான்றுகளை மேற்கோல் காட்டப்படுகிறது.
தேவநகரி என்ற எழுத்து வடிவம் இந்திய லிபியான பிராமி எழுத்தின் திருந்திய வடிவம். இந்த பிராமி முதலில் சமஸ்கிருதத்திற்கும் பின்னர் ப்ராகிருத மொழிக்கும் பொதுவான எழுத்து வடிவமாக இருந்தது. ஒலி வடிவங்கள் சுத்தமாக பிரதிபளிக்ககூடியது. கி.மு 5 ஆம் நூற்றாண்டில் நல்ல வளர்ச்சி கொண்டிருந்தது. அசோகர் கல்வெட்டுகள் ' பிராமி எழுத்துக்கள் தான்.
பைபிள் என்ற வார்த்தை கிரேக்க சொல்லான "பிப்லாஸ்" என்ற வார்த்தையில் இருந்து உதித்தது. பைபிள் ஒரு தனி நூல் அல்ல 64 புத்தகங்களின் தொகுப்பு. கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டது பழைய ஏற்பாடு இது எபிரேபிய மொழியில் எழுதப்பட்டது. கிறித்துவின் காலத்திற்கு பின் ஏற்பட்டது புதிய ஏற்பாடு இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
பகோடா [ இங்கு மொறு மொறு தின்பண்டம் அல்ல ] கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வெளியிட்ட நாணயம். மேற்கு கரைப்பகுதிக்கு போர்துக்கீசியர் வந்த போது பகவதா என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தது அவர்கள் வாயில் வெளிப்பட்ட வார்த்தை பகோடா... இதில் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது.
வணக்கம்
ReplyDeleteஅறிய பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி நண்பா
நன்றி மனசாட்சி !!!
Deleteஎன்னை போன்ற வரலாற்று பிரியர்களுக்கு நல்ல உணவு.!
ReplyDeleteஎன்னைப்போல் ஒருவன்... நன்றி !, வரலாற்றுசுவடுகள்.
Deleteவரலாற்று விருந்து....
ReplyDeleteதொடர்ந்து அளியுங்கள்..
கொடுத்துருவோம்.. நன்றி..! பாஸ்கரன் சார்.
Deleteஅனைத்துமே நான் அறியாத தகவல்கள் மற்றும் படங்கள். சூப்பர்
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
வாழ்க்கைக் கொடுத்தவன்
நன்றி சீனு சார்.
Deleteஅறியாத பல தகவல்கள் ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி நண்பரே !
நன்றி தனபாலன் சார். உங்க அளவுக்கு நான் எழுதுவதில்ல..., self confident அதோட ஆன்மீகத்தை கலந்து எழுத்தும் உங்கள் எழுத்துகள் பலருக்கும் இன்ஸ்பிரேசன் தான்.
Delete