தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை. தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்கள்.
தமிழ் பேசும் மக்கள் உலகில் சுமார் 100 மில்லியன்.
சுமேரியன், அராபிக், மாயன், மீசோ, பெர்சியன், துருக்கி இம்மொழிகள் உருவாக்கத்தில் தமிழும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது.
தமிழ் உலகின் 7 புராண மொழிகளுள் ஒன்று (செம்மொழி).
தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம்.
வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர் )
பண்டைய தமிழ் இனத்தில் சாதிகள் இல்லை.
தொல்காப்பியம் 3000 வருட பழமையான நூல்.
உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள்.
CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) .
Photo: Tamilnadu State Department of Archaeology
Potsherd with Tamil Brahmi inscription, circa first century B.C., found in Egypt. @Archaeologyindia
Pottery inscription in Tamil-Brahmi found in Thailand by a Thai-French team of archaeologists. @Archaeologyindia
The picture shows the urn with the rudimentary Tamil-Brahmi script,
and a human skeleton and miniature pots at the Iron Age urn burial
site at Adichanallur in Tamil Nadu. The inset with the arrow mark
depicts how the script has been written inside the urn. — Photo
courtesy: ASI, Chennai Circle.
ஆசிய சண்டை கலையின் தந்தை எனப்படுவது "கலரி"
தமிழ் - பிராமி எழுத்து வரிவடிவங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.
வேட்டி, சேலை பாரம்பரிய உடைபற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.
தமிழரின் பழமையான நாட்டியகலை பரத நாட்டியம்.
இன்றும் நல்ல நிலையில் இயங்கி வரும் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தமிழனின் தொழிற்நுட்பத்திற்கு சான்று.
ஜல்லிக்கட்டு 2000 வருடத்திற்கு முன்பு இருந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு.
தமிழ் அளவைகளுள் ஒன்றுமையான கணக்கீடு உண்டு.
தஞ்சாவூர் கோயில் துல்லியமான அளவீடுகளுக்கு கட்டடக்கலைக்கும் ஒரு சான்று.
சித்த மருத்துவம் தமிழரின் பழமையான மருத்துவம்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணி உள்ளது. (1200AD)
பண்டைய தமிழரிடம் வலிமையான கடற்படை இருந்திருக்கிறது,
நீண்ட கடற்பயணமும், வெளிநாட்டு வாணிபமும் பழந்தமிழர் மேற்கொண்டிருந்தனர்.
வணிகம், மருத்துவம், விவசாயம், போர்பயிற்சி இவைகளில் வேரோடியது தமிழ் கலாச்சாரம்.
பி.கு : இவை இணையத்தில் கிடைத்த தகவல்கள்
பயனுள்ள தகவல்கள்..
ReplyDeleteசற்று இடைவெளிக்கு பிறகு பின்னூட்டம் வழி உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நன்றி குணா.
Deleteநல்ல தொகுப்பு... அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
ReplyDeleteநன்றி... பகிர்கிறேன்...
tm1
மிக்க நன்றி தனபாலன் சார், கூடவே உங்கள் ஜி பிளஸ் பகிர்விற்கும்.
Deleteஅற்புதமான தகவல்கள்..அதிசயமாக உள்ளது..மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி நன்பரே !
Deletevery nice i want more informationssss
ReplyDeleteபதிவு மிக நீண்டுவிடும் என்பதால் சுருக்கமான தகவல்கள். தமிழர் பற்றிய இன்னும் பல தகவல்களை அளிக்க முயல்கிறேன்.
Deleteஅற்புதமான தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஅப்படியே
//வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர்)//
இத்துடன் இதையும் சேர்த்து விடுங்கள்
மலேசியா, மாலதீவு மற்றும் அந்தமான் நிகோபர்
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். மாலதீவு ஆட்சி மொழி திவெயி , மலேசியா ஆட்சி மொழி மலேசிய மொழி
Deleteயாம் அறிந்தது : மலேசியா பற்றி
தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர். மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் இது வியாபார மொழி.
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன இருந்தாலும் ஆட்சி மொழி மலேசிய மொழி.
நன்றி !நல்ல பதிவு!!!
ReplyDeleteஉளமார நன்றி கூறுகிறேன் நன்றி பழனிசாமி அவர்களே.
Deleteதமிழ் பற்றிய தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தது. மேங்கலீஸ் பற்றிய தகவல் புதியது..நன்றி.
ReplyDeleteஉங்களுக்கு.. புதியதா ! நன்றி நண்பரே!
Deleteஅரிய,அறிய வேண்டிய தகவல்கள்.நன்றி
ReplyDelete//சென்னை பித்தன்November 21, 2012 11:44 AM
Deleteஅரிய,அறிய வேண்டிய தகவல்கள்.நன்றி//
மிக்க நன்றி சார் !
திருக்குறள் எழுதிய பொது, இங்கே போட்டிருக்கும் எழுத்துக்கள் தான் இருந்தனவா? வெளிநாட்டு பட்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள், இதை படிக்கிறவங்க சாமர்த்திய சாலிகள் தான்!!
ReplyDeleteபழைய தமிழ் எழுத்துக்களுக்கும் இப்போதய தமிழ் எழுத்துக்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கே, பழைய முறையை பின்பற்றினால் நல்லது என்று நினைக்கிறேன் ஏனென்றால் நம் தமிழர்கள் புராண கல்வெட்டுக்களை பார்த்தல் உடனே படித்து விடுவார்கள், தொல் பொருள் ஆராயசியாளர்கள் வந்து படித்து சொன்னால் தான் இது தமிழ் என்று நமக்கு தெரிகிறது
ReplyDelete