அனைவருக்கும் "தீப ஒளி" திருநாள் வாழ்த்துக்கள் !
மத்தாப்பு குச்சிகள் எறியும் போது பல நிறங்களில் சுடர்விடும். குறிப்பாக பச்சை நிறத்தில் ஒளிர எந்த வெப்ப உலோக உப்பு அதில் பயன் படுத்தப்படுகிறது ? க்ளு இவற்றில் ஒன்று: (அ) :சோடியம் நைட்ரேட், (ஆ) : பொட்டாசியம் க்ளோரைடு, (இ) : பேரியம் குளோரைடு
விடை இறுதியில்.
இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் என்ன?
இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம்
அதன் கண்களின் பின்புற உட் பகுதிகளில் "டேப்டம் லுசிடம்" என்று சொல்லப்படுகிற விளித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது. ஒளியானது கண்களின் ரெட்டினா எனப்படும் விளித்திரையின் மேல் பட்டு கண்களின் உட் சென்று டேப்டம் லுசிட படலத்தின் மேல் விழும் போது பிரதிபளிக்கின்றன. இந்த ஒளிரும் படலம் இரவில் குறைந்த ஒளியிலும் அதற்கு உருவங்கள் தெளிவாக தெரிய பயன் படுகிறது.
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில் ஒளிர்வது எப்படி?
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன. இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது அவற்றின் மீது வெயில் படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன. நம் கையால் இறகை தொட்டும் போது கைகளில் இந்த துகள்களை ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகிவிடும்.
வெடிகுண்டைக் கண்டறியும் மோப்பத்தேனீ க்கள் ( super sensitive Sniffer Bees)
மோப்ப நாய் கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன மோப்பத்தேனீ ?
தேனீக்கள் நாட்டியம் நமக்கு தெரிந்ததுதான் [ தெரியாதவர்கள் இதை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம் ] தேன் கிடைக்குமிடம் எவ்வளவு தொலைவில் உள்ளது ? தேன் எவ்வளவு உள்ளது இப்படி பல சிக்னல்களை தெரிவிக்க நாட்டியம் ஆடும். இதோடு கூட அவற்றின் மனசில்... ! பதிய வைத்த மேப் என்று சொல்லுவோமே அது போல இவைகள் இட அமைவை பதிய வைத்துள்ளன. நம்மில் சிலருக்கு மூனு தெரு தள்ளி இருக்கும் கடையை கூட ஞாபகம் வெச்சுக்க முடியாது இல்லீங்களா ?.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அட்வான்ஸ்டு டிபென்ஸ் ரிசர்ஸ் ஏஜென்சி களுக்கு தேனீக்களின் திறமை தெரிந்து போய் அவர்கள் இதனுடைய மோப்ப திறனை ஆராய்ந்தார்கள். இறுதியில் இதற்கென ஒரு கையடக்க கருவியை தயார் செய்தாங்க இது எப்பிடி இருக்கும்னா ( முழு படம் கிடைக்கல ) ஆஸ்துமா நோயாளிகள் பயன் படுத்துவது போன்ற இன்ஹாலர். டிசைன்... ரேஸில் ஒரு கேட் இருக்குமே அது மாதிரின்னு கற்பனை செய்துக்கலாம்.
இந்த கருவியினுள் 32 தேனீக்களை அடைக்க முடியும். டிரிக்கர் மெக்கானிசம் இதுல இருக்கு அவ்வளவுதான்.
இந்த கருவி முன்னால தேனீக்கள் முன்னாடி மோப்பம் பிடிக்க வேண்டிய பொருள்களை அதாவது ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிபொருள் ( TNT பவுடர் ) இருந்தாலோ, போதை வஸ்துகளான கோகைன்,ஹெராயின் அப்புரம் செம்டெக்ஸ் இருந்தா உடனே அவைகள் டிரிக்கரை கிளிக் செய்கின்றன. அதாவது மோப்ப நாய் செய்யும் வேலையை இந்த தேனீக்கள் செய்கின்றன.
எனக்கு ஒரு சந்தேகம் திறமையானவங்க இதுக்கு பயிற்சி அளித்த மனிதர்களா ? அல்லது தேனீக்களா ?
கொசுறு தகவல்கள் :
2002 வரை ஒடிசாவில் போலீஸ் துறையில் புறாக்கள் இருந்ததா ஒரு தகவல்.
புறாக்கள் தூதுவர்களாக 3000 ஆண்டுகள் இருந்தன.
1850 ல் பால் ராய்ட்டர் செய்தி நிறுவனம் புறாக்களை வைத்து நடத்தப்பட்டது.
1941 ல் நேச நாடுகள் தகவல் பரிமாற்றத்திற்கு புறாவைப் பயன்படுத்தினர்.
US மற்றும் ரஷ்ய கடற்படையில் பயிற்சி பெற்ற டால்பின்கள் பணிபுரிகின்றன.
டர்கி வல்லூறுகள் (turkey vulture) பைப்லைன்களில் கேஸ் கசிவை கண்டறிகின்றன. இதனுடனை நாசி அமைப்பு இப்படிப்பட்ட தகவமைப்பை கொண்டிருக்கிறது.
சில பென்குவின் வகைகள் :
ஸ்நேர்ஸ் நியூசிலாந்தின் குட்டிதீவு. இங்கு வாழும் சிறியவகை ஸ்நேர்ஸ் பென்குவின்கள் 31000 இருப்பதாக கணக்கெடுப்பு சொல்லுகிறது. இத் தீவு மனிதர்கள் தரை இறங்க தடை செய்யப்பட்ட பகுதி. (கடலில் போட்டில் மிதந்த படியே எடுக்கப்பட்ட படம் மேலே)
துணை அண்டார்டிக் பகுதியில் மெக்குலர் தீவில் வசிக்கும் ராயல் பென்குவின்கள் வகை சிறு கற் குகைகளில் தங்கள் கூட்டை அமைத்து வசிக்கின்றன. வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டுமே இந்த தீவில் இருக்கும் ( பிக்னிக் ! ) ஹிரோ ஹீரோயின் மாதிரி ஸ்டைலான தலைய கவனிச்சீங்களா ?
சிறியவகை ஜூவினில் வெள்ளை துடுப்பு ( juvenile white flippered penquin) பென்குவின்கள் என்பவை நியூசிலாந்தின் வடக்கு குட்டிதீவில் அதாவது காண்டெர்பரி பகுதியில் 4000 உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு.
விஷ அம்பு தவளைகள் அல்லது நச்சு தவளையை (Poison arrow frog / Poison dart frog) உண்ணும் பாம்புகள் உண்டா ? இந்த தவளையின் சிறப்பு என்ன ?
மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் விஷ-அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. (ஆங்கிலப்படம் அபோகலிப்ட்தோ படம் பார்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ) மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக்காலத்தில் இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் எதிராளியை உண்ணவா? சாக வா? என்பதற்கான ஒரு எச்சரிக்கை அடையாளம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது (அடேங்கப்பா !). நச்சு, இது உண்ணும் கரையான்கள்,எறும்பு, பூச்சிகளில் இருந்து பெறுகிறது.
இதை உண்ணும் பாம்பு - லியோஃபிஸ் எபைன்ஃபைலஸ்
Liophis epinephelus ( வல்லவனுக்கு வல்லவன் ! )
சில புகைப்படங்கள் :
வியட்நாமிலுள்ள மட்டந்தட்டு மூக்கு குரங்கு [ Snub nosed Monkey ]
முதல் கேள்விக்கான பதில் (இ) : பேரியம் குளோரைடு
அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள், ஒரே பதிவில்........ அத்தனையும் கேள்விப் பட்டிராத தகவல்கள், வியப்பாக இருந்தன. நன்றி.
ReplyDeleteHappy Diwali to you and your family, Kalakumaran!!
ReplyDelete//2002 வரை ஒடிசாவில் போலீஸ் புறாக்களை இருந்ததா ஒரு தகவல். //
ReplyDeleteபுரியல...சற்று கவனிக்கவும்
நன்றி நண்பரே சரி செய்துவிட்டேன்.
Deleteஅறிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
தகவல்கள் அனைத்தும் அருமை... சில தகவல்கள் அறியாதவை... நன்றி... பகிர்கிறேன்...
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
tm1
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் சிறப்பு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பர் தகவல்கள்.. தீபாவளி வாழ்த்துகள்..!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் அளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
ReplyDelete