இச்சுரங்கத்தினூடாக ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு தடையுள்ளது உள் நுழைந்து செல்லும் காற்றின் அழுத்தம் அதிகம். இந்த சுரங்கத்தை 1957 ல் இருந்து தோண்டி இருக்கிறார்கள். சோவியத் புவியியலாளர்கள், இரண்டாண்டுகள் கழித்து இதனுள் கிம்பர்லைட் எனும் எரிமலை பாறைகள் இருக்க கண்டார்கள்.
1960களில் வருடத்திற்கு 10 மில்லியன் காரெட் எடை கொண்ட வைரங்கள் (2000 கிலோ வா ! ) வெட்டி எடுக்கப்பட்டன. சோவியத் உலக அளவில் தன்னை முன்னிருத்தும் முயற்சிக்கு இது உதவிகரமாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அதிக உற்பத்தி விலையை சரிய செய்யும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆப்பிரிக்க வைரத்தின் மதிப்பிற்கு இந்த வைரங்கள் மதிப்பு குறைந்தவையே.
டீபீர்ஸ் எனும் நிறுவனம் அப்போது உலக வைர மார்கெட்டை நிர்ணயித்தது. மிர்னியில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் இந்த நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்படும் ஒப்பந்தம் அப்போது நடைமுறையில் இருந்தது.
சாதாரணமாக நிலத்தின் கீழே அதிக அழுத்தத்தில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் வைரங்கள் உருவாகும் சுழ்நிலை இருக்குமாம். எரிமலை குழம்பானது பைப்பில் தண்ணீர் பீறிட்டு பாய்வது போல நிலத்தின் அடியில் பயணித்து பாறைகளுக்கு இடையே அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் பல ஆண்டுகளில் இறுகி வைரமாக உருவெடுக்கிறதாம். நீரோட்டத்தைப் போல இந்த குறிப்பிட்ட இடத்தை கண்டு பிடித்துவிட்டால் நூல் பிடித்தது போல கேரட் வடிவ வைரங்களை தோண்டி எடுக்க வேண்டியதுதான். இந்த மிர் சுரங்கம் அந்த வைரப்பாதையின் மேல் மட்டத்தில் இருக்கிறது.
சோவியத் பிளவிற்கு (1990) பின் இச் சுரங்க செயல் பாடுகள் குறைந்தன. மேற்படி சுரங்கமானது 2004 ல் நிரந்தரமாக இதன் செயல் பாட்டை மூடிவிட்டார்கள்.
==================================================================
சிந்தனைக்கு
நம் உடலின் எல்லா நகங்களும் ஒரே அளவில் வளர்கிறதா? அப்படி இல்லை என்றால் எந்த விரலின் நகம் சீக்கிரமாகவும் எந்த விரலின் நகம் மிக மெதுவாகவும் வளர்கிறது ?
உங்கள் பதிலை சரிபார்க்க இங்கே சொடுக்கவும்
வியப்பாக உள்ளது... நன்றி... சிந்தனையை அறிந்தேன்...
ReplyDeleteதமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்!
Deleteஇந்த படங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். தகவல்கள் நான் அறியாதவை. பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க பாலா ! நன்றி
Deleteஅரிய தகவல்கள் ....இதுவரைக்கும் கேட்டது பார்த்தது இல்லை...
ReplyDeleteஆமா நேரில் பார்பதற்கு அங்க ஒன்னும் இல்லையே எல்லாத்தையும் காலி பன்னீட்டாங்களே ஹி ஹி
Deleteநல்ல தகவல்.சுரங்கம் பற்றி பயனுள்ள விஷயங்களை தெரிந்துகொண்டேன்.பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteஏன் மூடி விட்டார்கள் ?
ReplyDeleteஅரசியல் காரணமாகவா ?
ஆராய்ந்து அந்த தகவலை பதிவாக்குங்கள்.
அதில் இன்னும் சுவாரஸ்யம் மிகுந்திருக்கும் என பட்சி சொல்கிறது.
இப்போதைய தகவல்களுக்கு... நன்றி நண்பரே.
மேற்படி கம்பெனியோடு ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள் அந்த கம்பெனி உலக தரத்தை நிர்ணயிப்பதோடு அவர்கள் போடுவதுதான் விலை அப்புரம் தரம் உலக அரசியலும் ஒரு காரணம்தான். இன்னொன்று அதிக செலவின் காரணமாகவும் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். நன்றி நண்பரே!
Deleteசாதாரணமாக நிலத்தின் கீழே அதிக அழுத்தத்தில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் வைரங்கள் உருவாகும் சுழ்நிலை இருக்குமாம்.\\மனிதன் பூமியில் அடைந்த ஆழம் எட்டே மைல்கல்தான். 125 கி.மீ ஆழத்தில் உள்ள ஒன்றை எப்படி எடுப்பார்கள் ??
ReplyDeleteம்..ம் அது முடியாத காரியம் . ஆழத்தில் வைரங்கள் உருவாகும் சுழ்நிலை இருக்கும். அங்கிருந்து இது உற்பத்தி யாகிறது என்றுதான் குறிப்பிட்டேன். மட மட ன்னு கருத்துக்களா போட்டு தள்ளீட்டீங்க நன்றி.. நன்றி !!
Delete