நாம் நம்முடைய வயதை குறைத்துக்கொள்ள முடியுமா ? ஆனால் ஒரு ஜெல்லி மீனால் இதை செய்ய முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறதா?
சில ஜெல்லி மீன்களின் வாழ்க்கை சில மாதங்களிலும்; சிலவகை பல வருடங்களும் உயிர் வாழும்.
டுரிப்டாப்ஸிஸ் நியூட்ரிகுலா [Turritopsis Nutricula ]எனும் ஜெல்லி மீன் வகை அழிவில்லாமல் வாழ்கிறது. அதாவது வயதாகி பின் திரும்ப முதலில் இருந்து வாழ்க்கையை தொடங்குகிறது.
ஆண் ஜெல்லி மீன் தனது உயிரணுவை (விந்து) தண்ணீரில் விட்டுவிடுகிறது இந்த உயிரணு பெண் ஜெல்லி மீனின் கருமுட்டையுடன் இணைந்து கொள்கிறது. ப்லானுலே (planulae) (லார்வா பருவம்) எனும் பருவம் அடைந்ததும் பெண் ஜெல்லியிடமிருந்து பிரிந்து தரையை நோக்கி பயனித்து பாறைகளில் தொற்றிக்கொள்கிறது. பாலிப் எனும் பருவமாக ஒரு தாவரம் போல இது வளர்கிறது. இன்னும் சொல்லப்போனால் பூஞ்சை (பாசி) போல வளர்கிறது. அவை ஒன்றிணைந்து பல்கி பெருகி வளர்கின்றன. சில வருடங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இவற்றில் இருந்து நீந்தி திரியும் ஜெல்லி மீன்கள் உருவாகின்றன.
இந்த ஜெல்லி மீன்கள் கடல் நீரோட்டத்தில் கலந்து தம் வாழ்வை துவக்குகின்றன. இவற்றிற்கு ஏதேனும் நிகழுமானால் அல்லது இதன் உடல் சிதைக்கப்பட்டால் இதன் மீதமான செல் வளர்ந்து பின் இணைந்து பாலிப் உருவத்தை பெற்று மீண்டும் ஜெல்லியாக பிறக்கிறது. அதாவது முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்குகிறது.
இதன் மரபணு தொடர்ந்து செயல்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது. இது ஒரு உயிரியல் விநோதம்.
top of image "Giant Nomura Jellyfish"
"jelly polyp"
இதன் நீளமான கொடுக்கு நிமாடோசைட்ஸ் (nematocysts) என்று அழைக்கப்படுகிறது. சிலவகை ஜெல்லிகள் இந்த நீள் கொடுக்குமூலம் உணவை பற்றி மின்சாரத்தை பாய்ச்சுகிறது. (இதனுள் உள்ள சில வேதிப்பொருட்கள் இந்த தகவமைப்பை இதற்கு கொடுத்திருக்கிறது )
இறந்த ஜெல்லியினுள் இந்த மின்னூட்டமானது படிப்படியாகவே குறைகிறது. அதாவது இறந்த ஜெல்லியை தொட்டாலும் ஷாக்கடிக்கும்.
உடலில் பற்றிகொண்ட ஜெல்லியை தண்ணீரை ஊற்றி எல்லாம் கழுவ முடியாது அதன் வேதி மாற்றம் அதிகரிக்கும், கத்தியால் லாகவமாக சுரண்டி எடுக்க வேண்டுமாம்.( மின் தாகுதலில் இருந்து தப்பிக்க). ஜெல்லியிடம் கடி வாங்கினால் அடி பட்ட இடத்தில் வினிகரை உற்றினால் அதன் தாக்கம் குறையும் ஆனால் கண்ணில் பட்டால் என்ன செய்யமுடியும் ?
மனிதன் மிகப் பெரிய ஜெல்லி கூட்டத்திடம் இருந்து தப்பிப்பது கடினமே?
ஜெல்லிகள் 500 - 700 மில்லியன் ஆண்டுகளாக இந்த உலகில் வாழ்ந்து வருகிறது.
புரிதலுக்காக இவை ஜெல்லிமீன்கள் என அழைக்கப்படுகின்றன ஆனால் மீனினத்திற்கும் இவைகளுக்கும் சம்பந்தம் இல்லை.
ஜெல்லிகளுக்கு மூளை உண்டா ?
பெரும்பான்மையான ஜெல்லிகளுக்கு அப்படி ஒரு உறுப்பு இல்லை. கூட்டுணர் உறுப்புகள் உண்டு. ஆனால் பாக்ஸ் எனும் ஜெல்லி வகைக்கு நான்கு மூளை போன்ற உறுப்புகள் உண்டாம் ( யப்ப்பா ? ) இவற்றிற்கு 24 கண்கள் இருக்கு. நிறங்களை பிரித்தரியும் தன்மை இதற்கு உண்டு.
ஜெல்லிகள் சின்னதா மட்டும் தான் இருக்குமா?
அப்படி சொல்ல முடியாது சிங்க பிடறி ஜெல்லிகள் (Lion’s Mane Jelly) 120 அடிகள் நீளம் வளருதாம் ( அடேங்கப்பா !)
(Giant Nomura Jellyfish )பிரம்மாண்ட நோமுறா வகையில் மணி போன்ற இதன் தலைப்பாகத்தின் குறுக்கு விட்டம் 7 அடிகள். இதன் எடை சுமார் 440 பவுண்டுகள் ( 1 பவுண்டு = அரைகிலோ 16 அவுன்சு) இவை சீன, ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது அதிக விஷம் கொண்டவை.
காணொளி
வியக்க வைக்கும் தகவலுடன் ஆரம்பித்து ஜெல்லி மீன் வகைகளைப் பற்றிய விளக்கம் அருமை... ஆச்சரியமளிக்கும் பல தகவல்கள்... நன்றி...
ReplyDeleteநன்றிங்க ! :)
Delete
ReplyDeleteஜெல்லிகளுக்கு மூளை உண்டா ?
பெரும்பான்மையான ஜெல்லிகளுக்கு அப்படி ஒரு உறுப்பு இல்லை\\ no CPU??!! what does it use to think & make decisionS?
அதுங்க சிந்திக்க தேவையே இல்லை தான். ஆனா அவைகளுக்குள் நிற மாற்ற சமிஞ்சைகள் இருக்கு இன்னும் அவைகளோட ஆக்ட்டிவிட்டி உடல் செயல் பாடுகளை கடல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்யராங்க
Delete\\அதுங்க சிந்திக்க தேவையே இல்லை தான்.\\ I don't think this is correct. Definitely every living being has the ability to think, but we don't know which part it is using for that purpose. For movement, eating it must think!!
Deletethey simply have a network of nerves which allow them to respond to various things in their environment இது புரியாத புதிரா தான் இருக்கு பரிணாம வளர்ச்சி பற்றி யோசித்தால் ரீசைகிள் லைப் என்பது இன்னும் ஆராய்சிக்குறிய விசயம் தான் இல்லீங்களா?
Delete