கடல் ஆராய்சியாளர்களுக்கென்றே பிரத்தியோகமாக வடிவாக்கப்படும் ஒரு கடல் சுழல் ஆராய்சிக்கூடம் "ஸீ ஆர்பிட்டர்”
ஸ்பேஸ் ஆர்பிட்டர் போல கடலினுள் செல்லும் படி வடிவமைக்கப்படும் ஒரு ஆய்வுக்கூடம் தான் "ஸீ ஆர்பிட்டர்”
அறிவியல்-காண் திரைப்படங்களில் காண்பதை நிஜமாக்கி வருகிறார்கள். 51 மீட்டர்கள் (சுமார் 167 அடிகள் நீளம்) உயரம் கொண்ட இந்த ஆய்வுகூடத்தினை வடிவமைத்தவர் பிரெஞ்சு கட்டட கலைவல்லுனர் ஜாகுவிஸ் ராக்ரி (Jacques Rougerie).
கடினமான கடல் சூழலிலும், கடல் நீர் அழுத்தத்திலும் இது பாதுகாப்பானது என்கிறார்கள். இயங்க தேவையான மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய சக்தியை கொண்டு பெறப்படும்.
இந்த ஆய்வுக்கூடத்தை கொண்டு கடலினடியில் ஆய்வு மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்போகிறார்கள்.
ஆரம்ப கட்டமாக மூன்று மீட்டர்கள் உயரமுடைய கடலாய்வுகூடத்தை நார்வே கடலில் வெற்றிகரமாக பரிசோதித்து விட்டார்கள். இதன் முழுமையான வடிவம் 2014 ல் கட்டி முடிக்கப்பட்டு, மொனாக்கோவில் முதல் பயணத்தை தொடங்கும். மெடிட்டேரியன் கடலில் ஆய்வு செய்து பின் இரண்டாண்டுகள் கல்ப் நீரோட்டத்தில் ஆய்வை தொடரும்.
இதன் பல்வேறு பாகங்கள் மற்றும் வடிவமைப்பை படத்தில் காணலாம்.
ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மற்றும் நாசா இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
காற்றாலை மற்றும் சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் - உட்பட வியப்பான தகவல்... நன்றி...
ReplyDeleteநன்றிங்க D.D !
Delete51 மீட்டர்கள் (சுமார் 167 அடிகள் நீளம்) உயரம் கொண்ட இந்த ஆய்வுகூடத்தினை \\ WHAT ABOUT IT'S LENGTH AND BREADTH?
ReplyDeleteஇதில் நீளம் - உயரம் சந்தேகம் வருவது நியாயமே! கவனிக்க சிறிய படத்தில் படுக்கை வசத்தில் டால்பின் மாதிரி செல்கிறது. உயரம் என்று ஒரே அளவு தான் கொடுத்திருக்கிறார்கள்
Deleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDelete