சென்னையில் தமிழ் பதிவர்கள் சந்திப்பின் பிறகு அடுத்த அடுத்த வார இறுதிகளில் பாண்டிச்சேரி, சென்னை, பின்னர் பெங்களூரு என்று திடீர் பயணங்கள். இந்த பயணங்களின் போது நேரில் கண்ட சில தகவல்கள் இந்த பதிவில்...
டெக்ஸ்டைல் சிட்டியிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டியை நோக்கி...
பெங்களூரு நான் முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்பதற்கும் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் காண்கிறேன். சொல்லப்போனால் இன்னும் இத்துணை வருடங்களில் கோவை இன்னும் அப்படியே உள்ளதாக உணர்கிறேன் இதற்குக் காரணம் முன்னேற்றமடைந்த இந்த பெரு நகரங்களை பார்க்கும் போது கோவை சிறிய நகரம் தான். கடந்த காலங்களில் (நான் சொல்வது ரொம்ம்ப்ப முன்னாடி...இருந்து) இருந்த அரசுகள் இந்த நகரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இதுவும் பிரம்மாதமான கட்டமைப்பில் இட்டு சென்றிருக்குமோ என்றே எண்ணத் தோன்றியது. பெங்களூரின் முதலில் கண்ணில் பட்ட எலக்ட்ரானிக் சிட்டி கண்களை அகல திறக்க வைக்கிறது பிரம்மாண்டமான திட்டமிடப்பட்ட சாலைகளும்(outer ring road), ஐ.டி கட்டிடங்களும் பல ஊர் காரர்களுக்கு புகழிடமாக இருக்கிறது. அதை ஒட்டி பிற எல்லைகளும் பலருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து விரிந்து செல்கிறது.
சில்க் போர்டிருக்கு அடுத்து இருந்த கிருஷ்ணராஜபுராவில் (K.R.Pura) இரண்டு நாட்கள் தொகுப்பு மாடிவீட்டில் தங்கி இருந்தேன். இங்கு உள்ளவர்கள் குடிப்பதற்கு மற்றும் சமையலுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) தான் பயன்படுத்துகிறார்கள். தண்ணீருக்காக மட்டும் மாதத்தில் ஒரு பெரிய தொகை செலவிடுகிறார்கள். ஆனால் ஏனோ இங்குள்ளவர்களுக்கு (கோவை) தண்ணீரின் அருமையே தெரிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது பெங்களுரு மெட்ரோ ரயில் விரிவாக்கத்தினாலும், பெரு மழையின் காரணமாகவும் நகரத்தின் மைய ரோடுகள் பழுதடைந்து இருந்தது. இதனாலோ என்னவோ மேம்பாலங்கள் பல இருந்த போதிலும் போக்குவரத்தின் நெரிசல் அதிகமாகவே இருந்தன (குறிப்பாக பீக் அவர்ஸ்). எம்.ஜி (மகாத்மா காந்தி) ரோடின் நடுவில் செல்லும் மெட்ரோ மேம்பாலம் சுத்தமாக அந்த ரோட்டின் அழகை கெடுத்துவிட்டது என்று சொல்லலாம். மாலையில் இதமான தட்ப வெப்பத்தில் இருந்தது.
இன்னொன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், பெங்களூரு சிக்னல்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் திருநங்கைகள் கையேந்தி நிற்பதை பார்க்க கஷ்டமாக இருந்தது.
மைசூரை ஆண்ட ஹைதர் அலியால் தொடங்கப்பட்ட லால் பாக் (1760) அல்லது சென்னிற பூங்கா (பொட்டானிக்கல் கார்டன் /botanical garden ) பின்னால் வந்த திப்பு சுல்தானால் அழகுற அமைக்கப்பட்ட வரலாற்று பெருமை கொண்டது. ஹைதர் பல தாவரங்களை இங்கு பாது காத்ததாக குறிப்பிடப்படுகிறது. திப்புவும் துருக்கி, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து விதைகளை தருவித்து இதை உருவாக்கி இருக்கிறார். 40 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட லால் பாக் விஸ்தரிக்கப்பட்டு பின்னாளில் சுமார் 200 ஏக்கர்கள் கொண்டதாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான தாவரங்களும், மலர் வகைகளும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலர் கண் காட்சிக்காக அமைக்கபட்ட கண்ணாடி மாளிகையின் முன்பு வந்தவர்கள் தங்களை இணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வெப்ப மண்டல தாவரங்களை (tropical plants) கொண்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்களை உறுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டி இருந்தது அவற்றை இன்னும் சீர் (கட்டிங்.. ஒட்டிங்) செய்யப் பட வேண்டும்.
தாயும் சேயுமாக இருக்கும் சிம்பன்ஸி
தாவர யானை

போன்ஸாய் மரவளர்ப்பு வளாகத்தில், வெய்யிலிலும் தீயாய் வேலையை செய்யும் தேனீ.
இன்னும் சில தகவல்களுடன், அடுத்த பதிவில் தொடர்கிறேன்,
நன்றி
(கலாகுமரன்)
தொடர்புடைய பதிவு :
இனிய பயணம்... படங்கள் அருமை...
ReplyDeleteநன்றிங்க D.D
Deletephotos r good ....!
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteதாவரயானை அழகாக இருக்கிறது . மற்றையவை நீங்கள் கூறியது போல சீரமைத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteபடங்கள் அருமை.. தண்ணீரின் அருமை தெரிவதில்லை என்பது உண்மைதான்..
ReplyDeleteவெயிலின் அருமை நிழலிலே
Deleteநானும் சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தேன்..ஆனால் முன்பே திட்டமிடாமல் திடீரென்று சென்றதால் எதையும் பார்க்கமுடியவில்லை...படங்கள் அருமை..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கலியபெருமாள்.
Deleteஅருமையான படங்களும் தகவல்களும் ..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றிங்க ராஜேஸ்வரி மேடம்.
Delete