வரும் நவம்பர் 5 (2013) இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கை கோளை விண்ணில் ஏவ தயாராகி விட்டது. அன்று மதியம் 2.36 க்கு பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக செய்வாய் நோக்கி புரப்பட்டு விடும். அன்றைய தினம் உலக வல்லரசு வரிசையில் இந்தியா 2 ம் இடம் பெரும். அதாவது சொந்த முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நோக்கி செயற்கை கோள் அனுப்பிய வரிசையில் இந்த இடம். இதற்காக ரூ.450 கோடிகள் செலவு ஆகிறது. இதில் PSLV -C25 ஏவுகணைக்கு மட்டும் ரூ.110 கோடிகள்.(செவ்வாய் அன்று செவ்வாய்க்கு ! )
வெட்டி வீண் செலவு, வீன் பெருமிதம் தேவையா ? என்று ஒரு சாரரின் கருத்தும் நிலவுகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயரும் நாட்டுக்கு வீண் செலவு என்கிறார். தற்போதைய சூழ்நிலையில் இது தேவையில்லாத ஒன்று என்ற வாததின் அடிப்படையில் திட்டத்தை தள்ளிப் போட முடியாது (முன்பே வெளியான தகவல்) ஏன் என்றால் இந்த தேதியை விட்டால் அடுத்த 2016 ல் தான் இந்த செயற்கை கோளை ஏவ முடியும்.
தேசிய பெருமிதத்தை விட்டு தள்ளுங்கள் என்று முன் வைக்கப்படும் விவாதங்கள்.
செவ்வாய் வளி மண்டலத்தில் மீதேன் ஆராய்சி தேவையா ? இந்திய குடிமகனுக்கு அடிப்படை தேவையான சுகாதாரமான குடிநீருக்கு வழி செய்யாமல் அங்கு காற்றிருந்தால் என்ன ? தண்ணீர் இருந்தால் என்ன? சாதாரண குடிமகனுக்கு இது தேவை இல்லை.
இந்தியாவிற்கு ஏறாளமான சிக்கல்கள் இருக்க அதை தீர்ப்பதை விட்டுட்டு இதெல்லாம் தேவையா ?
40 கோடிப்பேர்களுக்கு சரியான மின்சார வசதி இல்லை, 70 கோடி பேர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. மொத்த மக்கள் தொகையில் 47 % பேர்கள் ஊட்ட சத்து குறைபாடால் தவிக்கிறார்கள். 50 ஆயிரம் கோடி தானியங்களை, உணவுப் பொருட்களை பாதுகாக்க வசதி இல்லை, வீணாகிறது. மொத்த உற்பத்தியில் 24 % கோதுமை வீணாகிறது.
Photos from ISRO
(இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரச்சனைகள் தீருமா என்பது ? )
மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் (MOM) பற்றி சில தகவல்கள் :
ராக்கெட்டுடன் சேர்த்து மங்கள்யான் 1350 கிலோகிராம் எடை கொண்டது. பூமியின் சுற்றுப்பாதையில் 25 நாட்கள் சுற்றிவிட்டு, நவம்பர் 30 ல் செவ்வாயை நோக்கி தன் பயணத்தை துவக்கும். அப்போது இதன் எடை 14.49 kg. 55 மில்லியன் மைல் தூரத்தில் செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்க 9 மாதங்கள் (300 நாட்கள்) ஆகும். இன்னும் சரியாக சொன்னால் செப்டம்பர் 22, 2014 ல் இது நடக்க வேண்டும். மன்னிக்க செவ்வாயை சுற்ற வேண்டும்.
செவ்வாய் வளி மண்டலத்தில் மீத்தேன் ஆய்வு மற்றும் சுற்றுபுற சூழல் ஆய்வுகளுக்கு கீழ்காணும் உபகரணங்கள் (5) இணைக்கப்பட்டிருக்கு.
LAP - Lyman Alpha photometer மீத்தேன் வாயுவைக் கண்டறியும் (to measure atomic hydrogen in the Martian atmosphere)
MSM - Methane Sensor for Mars (capable of scanning the entire Martian disc within six minutes)
MCC - Mars Colour Camera
TIS - Thermal Infrared imaging Spectrometer ஹைட்ரஜன் மூலம் தாது வள ஆய்வு (Deuterium Hydrogen ratio ) to Map the surface composition of Mars.
MENCA - Mars Exospheric Neutral Compostion Analyser செவ்வாயின் மேல் மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். (to study the martian atmosphere)
மீத்தேன் சென்ஸார் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் பயன் படுத்தப்படாத கருவி.
செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வுகள் 18 நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது எனலாம். ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம் ஆகியவை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
1960 முதல் 45 மிஸன்களில் இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்திய தேசத்தின் செவ்வாய் ஆய்வு முக்கியமாக சீனாவிற்கு போட்டி என்று சொல்லலாம். ஏன் என்றால் சீனாவின் செவ்வாய் கிரகத்திட்டம் தோல்வி அடைந்தது. இதே போல 1998ல் ஜப்பானின் திட்டமும் (நோசோமி) தோல்வி.
உலக அளவில் மாம் இந்தியாவின் மீது கவனத்தை திருப்பி உள்ளது.
செவ்வாய்க்கு ஒரு வழி பயணம் செய்ய காத்திருக்கும் 8000 இந்தியர்கள்:
”மார்ஸ் ஒன் 2023“ செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு உலக அளவில் 2 இலட்சத்து இரண்டாயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக ஒரு தகவல். அதில் 8000 பேர் இந்தியர்கள்.
மணிகண்டன் என்பவர் அந்த 8000 பேரில் ஒருவர். அவர் சொல்கிறார். இது ஒரு முட்டாள் தனமான தற்கொலை முயற்சின்னு சொல்றாங்க, இருந்து விட்டு போகட்டும். எதிர்பாராத வாகன விபத்தில் நம் உயிர் போவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்துணை காலம் நான் உயிருடன் இருப்பேன் என்பதற்கும் கியாரண்டி இல்லை. அதனால் திரும்பி வரமாட்டோம் என்பது எனக்கு கவலை அளிக்கவில்லை. இதுக்கு ஒரு அர்தம் இருப்பதாக இருக்கும்
இத்துணை பேரில் 40 பேர்கள் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப் படுவர் அதிலும் முதலில் 4 பேருக்கு மட்டுமே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
Labels :Mars Orbiter Mission - Mangalyaan, இஸ்ரோ
இந்தியாவின் சொந்த முயற்சியா?
ReplyDeleteதங்களுக்கு கிடைத்தது தவாறன தகவல். Assembled and fired from in India-என்பதே சரி!
P{arts and know how from abroad!
_________________
அன்றைய தினம் உலக வல்லரசு வரிசையில் இந்தியா 2 ம் இடம் பெரும். அதாவது சொந்த முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நோக்கி செயற்கை கோள் அனுப்பிய வரிசையில் இந்த இடம். இதற்காக ரூ.450 கோடிகள் செலவு ஆகிறது
எனக்கும் முதலில் இந்த சந்தேகம் இருந்தது, டெக்னாலஜி பரிமாற்றம் இருந்திருக்கலாம். ஆனால் நாசா அல்லது வேற்று நாடுகளின் எக்யூப்மென்ட் பொருத்தப் படவில்லை என அறிகிறேன். சில பத்திரிக்கைகளும் சொந்த முயற்சி என்றே குறிப்பிட்டுள்ளது கவனிக்க தக்கது. இதற்குமுன் சந்ந்திராயனில் 11 கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது அதில் சில நாடுகளின் பங்களிப்பும் இருந்தது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Delete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
இனிய தருணத்தில் தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் !!
Deleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Delete4 பேர் போகட்டும்... 40 பேர் போக்கட்டும்... என்னய்யா சொல்ல வர்றீங்க...?
ReplyDeleteஇந்தியாவுக்கு இதெல்லாம் எதுக்கு வே�ண்டாத வேல அதான சொல்ல வர்ரீங்க, எதுவுமே செய்யலைனாலும் 2020 ல் அப்படியே தான் இருக்கப் போகுது. அடிப்பவனும் சுரண்டுரவனும் ஓகோன்னு தான் இருக்கப்போறானுக. ஏழைகள் அப்படியே தான் இருக்க போறாங்க. விஞ்ஞானிகள் அவங்க வேலையை அவங்க செஞ்சுட்டு போறாங்க, விடுங்க. உங்கள் கோபம் நியாயமானது தான். நன்றி D.D
Deleteபூமியைக்குப்பை மேடாக்கியது பத்தாதென்று செவ்வாய்க்கும் கிளம்பிவிட்டார்களா...
ReplyDeleteவிண்வெளியில் குப்பை சேர்ந்து கொண்டேதான் போகிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகமாகும். சில சமயங்களில் இந்த கழிவுகளை பறக்கும் தட்டு என்ற நம்பியதும் உண்டு. செவ்வாயின் வெளியில் சூரிய புயல் பாதிப்பு தெரிவதாகவும் சொல்லப் படுகிறது. இந்தியா பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இருப்பதாக கருத்து நிலவுகிறது.
Delete//இந்தியாவின் சொந்த முயற்சியா?
ReplyDeleteதங்களுக்கு கிடைத்தது தவாறன தகவல். Assembled and fired from in India-என்பதே சரி!
P{arts and know how from abroad!//
சொந்த முயற்சி என்பது ஒரளவுக்கு சரியான தகவல்தான்.
This mission is prove ISRO's capabilities and attract foreign costumers & investment. This mission has 3 objectives
1. Design and realization of a Mars orbiter with a capability to survive and perform Earth bound manoeuvres, cruise phase of 300 days, Mars orbit insertion / capture, and on-orbit phase around Mars.
2.Deep space communication, navigation, mission planning and management.
3.Incorporate autonomous features to handle contingency situations.
மேற்கண்ட திறமைகளை நிரூபிப்பதற்காகவே இந்த லாஞ்ச். இந்தியா வெற்றிகரமாக செவ்வாயில் செயல்படும் செயற்கைகோளை தனது ராக்கெட் மூலம் விட்டால் சாட்டிலைட் ஏவ விரும்பும் நாடுகளை இந்தியாவை நோக்கி திருப்பும் நிறைய பணம் பண்ண முடியும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் ஐப்பான் மட்டுமே செவ்வாய் கிரகத்திலிருந்து தகவல் பெறும் திட்டத்தில் வெற்றி அடைந்துள்ளன.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா இவை செவ்வாயின் சுற்றுப்பாதையில் செயல்படும் சாட்டிலைட்டை விட்டுள்ளன.
பொருளாதார நலன்களுக்காகவே விண்வெளி மார்கெட்டை பிடிக்க இந்தியாவும் சீனாவும் அடித்துக்கொள்ளுகின்றன (global space market value= $304.31 billion), இந்த மாதிரி வானவேடிக்கை காட்டுகின்றன. இப்போதைக்கு இந்த மார்க்கெட்டை வைத்து அதிகம் சம்பாதிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா. இந்தியாவும் சீனாவும் குறைந்த விலையில் இந்த சேவையை வழங்க முடியும்.இந்தியாவுக்கு இலவசமாக க்ரிட்டிகலான தொழில்நுட்பத்தை கொடுத்து ஆப்பு வைத்துக்கொள்ள அவனுக என்ன முட்டாள்களா? ஆனால் இத்திட்டதிற்காக அமெரிக்கா சில உதவிகளை வழங்குகிறது. NASAவின் Jet Propulsion Laboratory communications and navigation support வழங்குகிறது. தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லை. கூட்டு வியாபாரம் மாதிரிதான்!
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. உங்களின் கருத்துக்கள் இந்தியாவின் நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. 2020 இல் இந்தியா அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்ற ஆருடம் சொல்வது மட்டும் பிரியோசனப் படாது. இம்மாதிரியான நடவடிக்கைகளும் இந்தியாவிற்கு அவசியமானது என்பதை வழுப்படுத்துகின்றன இந்த தகவல்கள்.
Deleteயோசிக்க வேண்டிய விசயம்தான்! தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteசொந்த முயற்சி இல்லை என்று விரிவாக எழுதமுடியும்!
ReplyDeleteஇதில் உள்ள ----எந்த எந்த பகுதிகள் --இந்தியாவில் சொந்தமாக தாயரிக்கப்பட்டன? எல்லாமே இறக்குமதி தான்!
ஏற்கனவே நாசா தனது மூளையை கொடுத்துள்ளது!
கட்டாயம் இதில் பணம் வரும். ஏனென்றால், அமெரிக்காவில் எல்லாருக்கும் நல்ல சம்பளம் ஒவ்ய்வூதியம்...இப்படி பல கொடுக்கணும். வேலையில் ஊனாமானால் வாழ் நாள் சப்போர்ட். இதில் நூறில் ஒரு பங்கு பணத்தில் இந்தியாவில் இருந்து அனுப்ப முடியும்; அதே சமயம் அவர்கள் வாங்கும் கூலியில் பத்தில் ஒரு பங்கு பணம் வந்தாலே கொள்ளை லாபம். அரசாங்க அதிகாரிகளை தவிர மீது எல்லா வேலையாட்களையும் ஒரு மண்ணும் கொடுக்காமல் ஒப்பந்தக் கூலிக் காரர்களாவே வேலை வாங்கலாம்.
திருப்பூர் மில்லில் துணி தைக்கும் ஊசி கூட நம்மால் தயாரிக்கமுடியாது. அதுவும் ஜப்பான் அல்லது சீனாவிடம் தான்!
ஒரு கார் என்ஜின் தாயரிக்க அங்குள்ள தொழில் நுட்பம்...அதாவது தொழிற்சாலையை இறக்குமதி செய்து தான் செய்யமுடியும்.
நட் போல்ட் கூட (இதற்க்கு) நாம் அவர்களை தான் நம்பனும்.
seamless pipe தரம் கூட குப்பை. வெடித்து விடும். சும்மா பீத்திக்கலாம்
அரசாங்க அதிகாரிகள் உழைக்கும் வர்க்கத்தை ஏமாத்தி அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்---இந்தியா அந்த வகையில் வல்லரசு தான்!
ஒரே ஒரு கேள்வி.
ReplyDeletefighter Aircrafts அமேரிக்கா மற்றும் இதர நாடுகள் இலங்கைக்கு மட்டும் கொடுத்து, நமக்கு ஆப்பு வைத்தால். சுண்டைக்காய் இலங்கை இந்தியாவை பீஸ் பீசா ஆக்கிவிடும். அப்ப தெர்யும் நம்ம வல்லரசு பவிஷு!
BTW, இலங்கை வல்லரசாகும் என்று பீத்தவில்லை!
இப்பதிவிற்கான சிறப்பான விவாதத்தினை முன் எடுத்தும், சிந்தனையை தூண்டக்கூடிய பலவினாக்களை தொடுத்து, சுவாரசியமான தகவல்களை கொடுத்த நம்பள்கி உங்களுக்கு எனது மனமுவந்த நன்றிகள்.
Deleteஅமெரிக்கா ரஷ்யா முதலானவை இந்தியாவுக்கு பல தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன. உண்மை.
ReplyDeleteரஷ்யாவை எடுத்துக்கொண்டால் எல்லாத் தொழில்நுட்பத்தையும் ரஷ்யா மக்களைக் கொண்டே உருவாக்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் முக்கால்வாசி தொழில்நுட்பவாதிகள் குடியேறிகள்தான். இப்போதும் ஒரு நல்ல தொழில்நுடபத்தோடு வந்தால் உடனே கிரீன்கார்டு தருவான். ஜெர்மனியில் ஹிட்லர் யூதவிஞ்ஞானிகளை அடித்து விரட்டியதால்தான் அமெரிக்காவின் விரைவான தொழில்நுடப வளர்ச்சி போன நூற்றாண்டில் சாத்தியமானது. ஐஐடில் படித்துவிட்டு அங்கு போன எத்தனையோ இந்தியரின் பங்களிப்பு அமெரிக்க ஆராய்ச்சியில் உண்டே? மேலும் அமெரிக்காவின் முக்கால்வாசி ஐட்டம் சைனாவிலிருந்துதான் இறக்குமதி ஆகிறது- ஐபேட் ஐபோனிலிருந்து குண்டூசிவரை. அதனால் என்ன அமெரிக்கா என்ன கேவலமாகவா ஆகிவிட்டது?
மேலும் ஒரு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி மூலம் உருவாக்க பலவருடமும் பணமும் விரயாமாகும். அது வேறுநாட்டில் வேறு ஒருவன் உருவாக்கிவிட்டால் அதை காசு கொடுத்து வாங்குவதுதான் புத்திசாலித்தானம். அதைத்தான் இந்தியா செய்யவேண்டும். விலை குறைவாக கிடைக்கும் காயை மார்கெட்டில் வாங்காமல் புழக்கடையில் விவசாயம் செய்துதான் சாப்பிடனுமா?
அப்படி இருந்தாலும் மிகவும் கிரிட்டிகலான தொழில்நுடபத்தை தரமாட்டார்கள். அதை நாமே செய்யவேணும். இந்தியாவைவிட பணக்கார நாடுகள் உள்ளவே - அவைகளால் ஏன் ராக்கெட் விட முடியவில்லை? பிரேசிலும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே ஆண்டில்தான் தனது விண்வெளிதிட்டத்தை ஆரம்பித்தான. இன்று பிரேசில் நிலைமை என்ன - இந்தியாவின் நிலைமை என்ன? காசு கொடுத்தால் எல்லாம் கிட்டும் எனில் சவுதி அரேபியா இன்று ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பான். இத்தனைக்கும் இந்தியாவை விட அமெரிக்காவின் நெருங்கிய அடியாள்!
ரிவர்ஸ் எஞ்சினியரிங் எனப்படும் கருவிகளை பிரித்து போட்டு அதை மாதிரி செய்வதில் இன்று உலக எக்ஸ்பர்ட் சைனா. அப்படி செய்தே அமெரிக்காவிற்கு சவால் விடுகிற நிலைமைக்கு போய்விட்டது. அமெரிக்காரன் அவனிடம் போய் பணம் கடன் வாங்குகிறான். சைனாவின் தொழில்நுட்பம் பெரும்பாலும் விலைக்கு வாங்கியது, கொடுக்காவிட்டல் திருடவும் தயங்குவதில்லை. ஆகவே காசு கொடுத்து வாங்கியோ எப்படியே தொழில்நுட்பம் இருக்குதா என்பதுதான் முக்கியம்.
இலங்கைக்கு கொடுப்பது போலவே ரஷ்யா தன்னிடமுள்ள நியூக்ளியர் குண்டு தாங்கிய ஏவுகணைகள் கியூபாவிடம் கொடுத்தால் அடுத்த சில மணியில் அமெரிக்காவே பஸ்மாகிவிடும். இதனால் அமெரிக்கா வல்லரசு இல்லை என ஆகிவிடுமா?
நான் இந்தியா வல்லரசு என சொல்லவில்லை. ஆனால் டெக்னாலஜியில் உலகில் பல நாடுகளுக்கு முன்னாடி இருக்கிறோம்.அதிலும் விண்வெளி தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் அமரிக்கா ரஸ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக 4வது இடம்!நமக்கு அடுத்த இடத்தில்தான் ஐரோப்பாவும் ஐப்பானும் இருக்கின்றன http://www.youtube.com/watch?v=DB2RGcEt23A
This comment has been removed by the author.
Deleteவிரிவான தகவல்களும், ஏன் இந்தியா விண்வெளி சோதனைகளை நிகழ்த்த வேண்டும், அதற்கான அவசியம் என்ன என்பதற்கான ஆழமான கருத்துக்களை முன்னெடுத்து சொன்னீர்கள். இப்பதிவிற்காக தங்களது மதிப்பு மிக்க நேரத்தை செலவளித்து இருக்கிறீர்கள். பலருக்கும் இது சுவாரசிய தகவலாக இருக்கும். எனது அன்பான நன்றிகள். மாம் வெற்றி கரமாக அதன் பாதையில் பயணிக்கிறது, இந்தியா சிறப்பான அடியை எடுத்து வைத்துள்ளது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி. ஏன் பின்னூட்டத்தை நீக்கிவிட்டீர்கள் என தெரியவில்லை
DeleteIndia is not developed yet. So why do we need computers?
ReplyDeleteIndia is not developed yet. So why do we need ipads, tablets and iphones?
India is not developed yet. So why do we need cars?
India is not developed yet. So why do we need tall buildings?
India is not developed yet. So why do we need nuclear reactors?
India is not developed yet. So why do we need ......[Fill up the blanks]
Ah, yes, we can ask anything. Think.
சரியா கேட்டீங்க இந்தியன் கேள்வி கேட்பது சுலபம் பதில் சொல்வது கஷ்டம் ...நன்றி
Delete