க்ராபைன் (கிராபைட் அல்ல) உப்பு தண்ணீரை குடிநீராக மாற்றும் தன்மையுடையது.
"Graphene makes salt water drinkable "
பல வருட சோதனைகளுக்குப் பின் யு எஸ் மாஸாசூஸெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (M I T ) ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த செலவில் உப்பு தண்ணீரை குடிநீராக மாற்ற ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அந்த ரகசியம் என்னவெனில் சூப்பர் மெட்டீரியல் என அழைக்கப் பெறும் “க்ராபைன் [Graphene] இத் தனிமத்தில் உள்ள கார்பன் மூலக்கூறுகள் (அணுக்கள்) தட்டி போன்ற அமைவு கொண்டது, அது மட்டுமல்ல இரும்பை விடவும் இது ஆயிரம் மடங்கு வலிமையானது. இந்த மீச்சிறு தட்டி 1 நானோமீட்டர் அளவினாது. உப்பு தண்ணீர் இதன் மீது வேகமாக பீச்சி அடிக்கும் போது மீச்சிறு நீர் மூலக்கூறுகள் உடைபட்டு சோடியம் மற்றும் க்ளோரின் அயன்களாக பிரிதலில் உப்பானது விடுபடுகிறது.
இக் கண்டு பிடிப்பு தொழில் வல்லுனர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கான செயல் நுட்பமுடைய க்ராபைன் தண்ணீர் பில்டரை கண்டுபிடிக்கும் முயற்சியும் ஜரூராக நடக்கிறது. கூடிய விரைவில் சந்தைக்கு வரலாம்.
க்ராபைன் கடினத்தன்மை காரணமாக இதை கட்டிடங்களுக்கு பயன் படுத்துகிறார்கள்.
It's easy to make graphene in the lab, but hard to make perfect graphene on a large scale.
பார்முலா 1 கார்களுக்கு கடினமாகவும் அதே சமயத்தில் எடை குறைவானதாக இருக்கும் படியான கார்பன் ஃபைபர் (Carbon fibre) பயன் படுத்தப் படுகிறது.
வரட்டும்... வரட்டும்... விரைவில் கடல் நீரையும் காலி செய்து விடலாம்...!
ReplyDeleteஅப்படியும் நடக்க சான்ஸ் இருக்கிறது...நன்றி டி.டி
Deleteசிறப்பான தகவல்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteகிராபைன் கட்டிடங்களுக்கா? ஏதேனும் சுட்டி இருக்கா?
ReplyDelete