சந்தர்பங்களும் வாய்ப்புகளும் வாழைப் பழம் போல் வருவதில்லை....
அவைகள் பலா பழம் போலவே வருகின்றன.ஆம்.... வாழை பழம் வேண்டுமென்கிற போது சுலபமாக உறித்து தின்று விடலாம். பலா பழத்தை சுவைக்க முட்களை நீக்கி பிசு பிசுப்பைத் தாண்டி சுளைகளை எடுக்க மெனக்கெட வேண்டும்.
அந்த பாடல் வரிகள் ...
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....
""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""
ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...
மயக்கமா தயக்கமா....
#படித்து_ரசித்தது
வால் செத்துப் போச்சி !!
இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை அவன் வாலைப் பற்றித்தான் கவலை. வாலி வானுலகம் போயிருந்தாலும் அவன் வால் மண்ணுலகில் வைக்கப் பட்டு இருந்தால் என்ன செய்வது ?? அந்த வால் வந்து தன்னை துன்புறுத்துமோ என்ற பயம்.
வாலி மீளாது போயினும் அவன் வால் மீண்டுவிட்டால் என்ன செய்வது என்று அச்சப் படுகிறான். அச்சத்தை தீர்த்து வைக்கிறான் அனுமன்.
அஞ்சலை அரக்க ! பார்விட்டந்தர மடைந்தானறே
வெஞ்சின வாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே !!
{{ கம்பராமாயணம்}}
தானிக்கி தீனி!!
{பரமார்த குரு கதை}
ஒரு சமயம் குருவும் சீடர்களும் வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். செமையான வெயில், வழியில் தென்பட்ட ஒரு விடுதிக்கு சென்றனர். விடுதியாளரிடம் சற்று இளைப்பாறி செல்வதாக கேட்டு இடம் பிடித்தார்கள். அந்த விடுதிக்கு பணக்காரர் ஒருவர் குடும்பத் தோடு வந்தார். அவர் விடுதியாளரிடம் பணத்தை பற்றி கவலை படாமல் அறுசுவை உணவு செய்து தரும் படி கேட்டார். உணவின் மணம் மூக்கை துளைத்தது. குருவிற்கும் சீடர்களுக்கும் பசி வயிற்றை கிள்ள கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்று மூட்டைகளை பிரித்து உண்ணத் தொடங்கினர். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் மணத்தை உறிஞ்சி யவாறே கட்டுச் சோற்றை காலி செய்தனர்.
சட்டென்று வந்த விடுதியாளர் அவர்களின் செயலை கவனித்துவிட்டார். அவர்களிடம் சமையல் மணத்தை நுகர்ந்தவாரே அவர்கள் சாப்பிட்டதால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.
காசு தர மறுத்த குரு சீஷ்ய கோடிகளை பஞ்சாயத்தில் நிறுத்தினார். நடந்த தை கேட்ட நாட்டாமை விடுதியாளர் சொல்வது சரிதானென்றும் அதனால் குரு அவருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார். குரு மற்றும் சீடர்கள் தீர்ப் பை கேட்டு நொந்தனர்.
அதோடு நில்லாமல் நாட்டாமை வேலைக் காரனை கூப்பிட்டு பண முடிப்பை எடுத்து வர செய்தார். விடுதியாளரை அழைத்து காசு நிறைந்த முடிப்பை மேலும் கீழு ஆட்டிக் காட்டி என்ன இது ? எனக் கேட்டார்.
" காசு, துட்டு, பணம், பணம்...என சந்தோசமாக கூறினார் "
பணத்தின் ஓசையை கேட்டீர்கள் அல்லவா அது நீங்கள் காசை வாங்கி கொண்டதற்கு சமம்.
தானிக்கி தீனி சரியா போச்சு " இதுதான் தீர்ப்பு என்றார்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $
// மேரி க்யூரி //
போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.
சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் "அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல..."
பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.
ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.
அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.
அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மிகவும் பிடித்த பாடல்களில் அடிக்கடி மனதில் பாடும் பாடல்களில் ஒன்று... எனது பல பதிவுகளிலும் உண்டு...
ReplyDeleteநாட்டாமையின் தீர்ப்பு செம... (வரும் பதிவில் உதாரணத்திற்காக வேறு விதமாக எழுதி வைத்த இந்தக் கதையை மாற்றி விட வேண்டியது தான்... ஹிஹி... உண்மை...!)
பெண்களின் மன உறுதிக்கு (மாறவும் மாறாது) மேரி க்யூரி அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்...
வாலி வால் கதை புதுசு. மேரி வணங்கத்தக்கவர். குரு சீடன் கதை ஏற்கனவே அறிந்தது.
ReplyDeleteமேரி கியுரியின் தன்னம்பிக்கை விடா முயற்சி பெண்களுக்கோர் ஊக்கமாக அமையும்! வால் செத்து போச்சு அருமை! நன்றி!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்
வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!
வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.
ReplyDelete