மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள் குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..
இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.
அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
தற்போது இத்தகைய உணவுகள், குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின் எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.
Tks to bbc news
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'
பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?
இதற்கான பதில் இறுதியில்...
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை
தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.
"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...
" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "
"ஏன் "
" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"
" நடிப்பு தானப்பா"
" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும். வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.
3 வருடங்களுக்கு பிறகு.....
"என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது
"அட டே"
என்ன நொ டே டே...
அவ என்ன பார்த்து குரைக்கிறா...
(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL)
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
விடுகதைக்கான பதில் "காளான்"
விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
விடுகதைக்கான பதில் "காளான்"
விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.
அட சர்க்கரை நோய் தானே...! வரட்டும்... எந்தக் கெட்டப் பழக்கத்தையும் மாற்றும் அற்புத நோய்...!!! நகைச்சுவை இல்லேங்கோ...!!!
ReplyDeleteஅதுக்கப்புறம் வீட்டுல சர்க்கரை வாங்க வேண்டாமே!!
ReplyDelete