எனது அனுபவத்தை சொல்கிறேன்...
அன்று வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். வழக்கம்போல சாப்பிட்டபின்
தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூக்கம் கண்ணை சொக்க தூங்க சென்றேன்.
காற்று வரட்டும் என்று சன்னலை திறந்து வைத்து விட்டு,கண்ணை கூசுகிறது
என்று இரவு விளக்கையும் நிறுத்தி விட்டேன். நல்ல உறக்கம்.
லேசாக உறக்கம் கலைந்த போது என்னால் முழுவதுமாக கண்ணை திறக்க முடியாமல் சொக்கியது, அப்போது என்ன மணி என்றும் தெரியவில்லை, திறந்திருந்த சன்னலில் இருந்து நீளமான தடிமனான ஜந்து ஊர்ந்து கட்டிலில் இருந்த என் கால் மாட்டில் நைசாக இறங்கியது. உதறல் எடுத்தாலும் என்னால் அடித்துப்போட்டது போல அசையக்கூட முடியவில்லை.
அந்த ஜந்து அதோடு நிற்கவில்லை தரையில் இருந்து எழும்பி
என் முகத்திற்கு நேராக நிற்கிறது. புஸ்...புஸ் என்ற சப்தம் இன்னும் என்னை
காபுரா படுத்தி எடுத்தது. எனது சின்ன சலனம் கூட அதை கோபப் படுத்த
முடியும். என்ன செய்வது என்றே தெரியவில்லை...
எந்த அசைவும் இல்லாமல் அப்படியே படுத்து இருந்தேன்....எவ்வளவு நேரம் அப்படி படுத்து இருந்தேன் என தெரியவில்லை. படு முயற்ச்சி செய்து கண்ணை விழித்து பார்த்தேன். மச மசவென்று இருந்ததது ஆனால் அது இப்போது அங்கு இருக்காது என்று உள்மனது சொல்லியது. எப்படியோ தட்டு தடுமாறி டக் கென்று லைட்டை போட்டு பார்தேன்.... எதுவும் இல்லை.
பின்புதான் என்ன நடந்திருக்கும் என புரிந்தது. அதாவது என் கால்மாட்டில் இருந்த துப்பட்டியின் ஓரம் காலில் பட்டுக்கொண்டும், தலைக்கு மேலே நிறுத்தி ஓடி கொண்டிருக்கும் (பெடஸ்டல்) மின்விசிறியின் உஸ் என் ஓசையும், தரையில் கிடக்கும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் மெத்தையும் பாம்பை உருவகித்து என்னை உசுப்பேற்றி இருக்கிறது என் மூளை.
சரி அது கனவுஅல்ல...
இரவில் அலைபேசியை சார்ஜில் போட்டு விட்டு சார்ஜ் முடிஞ்சதும் சுவிட்சை
நிறுத்தனுமே என்று நினைத்து தூங்கிவிட்டேன்.
"டேய் எழுந்திருடா..." அம்மாவின் சப்தம் என்னை எழுப்பியது. எழுந்து பார்க்கிறேன்.
அம்மா நல்லா தூங்கிட்டு இருக்காங்க. அதற்கு ஒரு செகண்ட் முன்பு அந்த
குரல் ரீவைண்ட் ஆகியது எப்படி?. ஒருக்களித்து படுத்து இருந்ததால் ரத்த ஓட்டம் தடை பட்டு கை விண் விண் என்று வலி தெரித்தது. அந்த குரலுக்கு முன்னாடி கனவு ஓடிக்கிட்டு இருந்து இருக்கு ஆனா அதை நினைவுக்கு கொண்டு வரமுடியல..
போனை எடுத்துப் பார்த்தேன் 100% அப்போதுதான் சார்ஜ் ஏறி முடித்திருந்தது. அப்ப வெளிப்புர சப்தத்தை மூளை எழுதிய கனவுக் கதையில்
அம்மாவின் வாய்ஸை அப்லோட் செய்திருக்கிறது. வெளிப்புர சப்தங்களை
விழித்திருக்கும் "சப் காண்ஸியஸ் மனம்" அந்த சப்தத்தை நம் கனவுடன் கோர்த்து கதை திரிக்கிறது.
இதே போல் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டது
போல இன்னொருவருக்கு கனவில் ; தூரத்தில் கேட்ட துப்பாக்கி சப்தம் அருகில் கேட்கிறது. அவருக்கு ஒரு கைத்துப்பாக்கி கிடைக்க அவரும் எடுத்து சுடுகிறார் ஆனால் அந்த சப்தம் தூரத்தில் இருந்து கேட்பதுபோல இருந்திருக்கிறது.
பக்கத்து வீட்டில் கார் எடுக்கும் வெளி சப்தம் இவருக்கு துப்பாக்கி சுடும் சத்தத்தோடு கனவு ஓடிக்கொண்டு இருந்து இருக்கிறது.
சிலருக்கு தொலைக்காட்சியில் தொல்லை காட்சி பார்த்தபடியே தூங்கி விட்டால் வரும் கனவிலும் அந்த சீரியல் ஓடிகொண்டு இருக்கும். ஆனா அடுத்த எபிசோடுகள் ஓடுமான்னா பெரும்பாளும் இருக்காது. அவர் இதுவரை
பார்த்த எபிசோடுகளில் இருந்தே முன்னுக்கு பிறனான காட்சிகள் ஓடும்.
முகப்புத்தகத்தில்,,அதாங்க பேஸ்புக்கில் மேய்ந்தபடியே தூங்கி விடுபவர்களுக்கு வரும் கனவில் ஸ்டேடஸ் போடுர மாதிரியோ கமெண்ட் செய்யரமாதிரியோ அதிகமான லைக்குகள் கமெண்டுகள் அவருக்கு விழுவதுமாதிரியும் கனவுகள் ஓடும்.
பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சப்தம் கூட டுவிஸ்டாக கனவில் மிதப்பவருக்கு அருவி சப்தமாக இருக்கும்.
குடிதண்ணீர் வரலயே நாளக்கி என்ன செய்வது என்ற சிந்தனையில் தூங்கு
பவருக்கும் வரண்ட பாலைவனத்தில் தவிப்பது போல கனவு வரலாம்.
ரயில் செல்லும் சப்தம் கேட்கும் தொலைவில் இருப்பவர்களுக்கு
அந்த சப்தம் வேறு பல விநோத கனவுகளைத் தருகிறது.
எங்கோ தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மோட்டார் பைக்கின் சப்தம் கூட
கனவில் யானையின் பிளிரலாக கேட்கும்
வெளிப்புர சப்தங்களை உணரும் நம் மூளை ஒரு ஓவியனின், சிறந்த எழுத்தாளரின் திறமையோடு கதை சொல்லி செல்கிறது. பல எழுத்தாளர்கள் கனவில் முடிவு கிடைக்கிறது. ஓவியனுக்கு வரும் கனவில் அழகிய ஓவியங்களையும், பெரிய பாராங்கல் கனவில் கானும் சிற்பி அழகிய சிலையையும் வடிக்கிறான். பிச்சை காரனுக்கும் பலவிதமான உணவுகள் சாப்பிடுவது போல கனவு வருகிறது. கணித புரபசருக்கு பல்வித குறியீடுகளும் கணக்கீடுகளும் ஓடும்.
பெரும்பாலான கனவுகள் ஞாபகத்தில் இருப்பதில்லை. கனவு முடியும் போது
விழிப்பு வந்தால் கொஞ்சம் ஞாபகப்படுத்த முடிகிறது.
கனவுகளால் எந்த பிரியோஜனமும் இல்லை என்று சொல்ல முடியாது
கனவுகள் ஆராய்ந்தால் நம் பிரச்சனைகளுக்கு (ஆலோசனை) தீர்வும் கிடைக்கும்.
வெளிப்புற சப்தங்கள் கனவை தடை செய்வது என்பது அந்த சப்தமானது பெரிதாக இருந்தால் மட்டுமே. தூக்கம் கலைக்காத சப்தங்கள் கனவில் இருப்பவருக்கு விசுவல் எபெக்ட்டோடு செல்லும்.
ஏன் அவரின் குறட்டை சப்தம் கூட கனவில் பல டிவிஸ்ட்டுகளை கொடுக்கலாம் !! .
நீங்கள் சொல்வது சரி தான். தூங்கப் போகும் சமயம் என்ன பார்க்கிறோமோ.. அது கனவாக வந்து விடுகிறது. இது போல் நிறைய அனுபவங்கள் எனக்கும் உண்டு. நன்றி.
ReplyDeleteகனவுகள் நல்ல அலசல்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம 1
உண்மைதான்! சில சமயம் எனக்கும் இந்த மாதிரி நிகழ்ந்து இருக்கிறது! டியுசன் எடுக்கையில் தீர்க்க முடியாத ஒரு கணக்கை கனவில் தீர்த்து மறுநாள் வகுப்பிலும் தீர்த்தேன்! நல்ல பதிவு! நன்றி!
ReplyDelete:) சுவைபட சொல்லி இருக்கிறீர்கள்
ReplyDeleteகுறட்டை :D :D செம
ReplyDelete