"மனித மனம் பேராசைகளால் நிறைந்தது அதுவே பலவற்றை சமைக்கவும்* காரணமானது. " [ சமைக்க = உருவாக்க ]
ஸ்பேஸ் டூரிசம் எனும் கவன ஈர்ப்பு 2004 லில் இருந்து பெரிதாக பேசப்பட்ட ஒன்று. கடந்த பத்தாண்டுகளாக வணிக நோக்கோடு பல தனியார் நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டன.
ஸ்பேஸ் ஷிப் 2 [ வெர்ஜின் காலெக்டிக் / Virgin Galactic ] எனும் திட்டம். இதில் ஆறு பயணிகள் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செலுத்த தக்கதாக இருக்கும் என விளம்பரப் படுத்தப் பட்டது. ஆனால் சர் ரிச்சர்ட் ப்ரான்சன் ( Sir Richard Branson )தலைமையிலான அந்த திட்டம் இன்னம் முடிவற்ற நிலையில் இருப்பதாக சொல்லப் படுகிறது.
XCOR Aerospace எனும் நிறுவனமும் ராக்கெட் இஞ்சின் பொருத்தப்பட்ட லினக்ஸ் ஸ்பேஸ் கிராப்ட் (Lynx spacecraft ) எனும் விமானத்தை போலான ஊர்த்தியில் ஜனங்களை கூட்டி செல்வதாக திட்டம் தாயாரித்தது, அதோடு இல்லாமல் டிக்கெட் களை கூட விற்றதாம்.
தற்போது வேர்ல்ட் வியூ என்டர்ப்ரைசஸ் [ World View Enterprises ] எனும் நிறுவனமும் ஹீலியம் காஸ் பலூன்களை பயன் படுத்தி வானில் புவி ஈர்ப்பு எல்லையில் நிலைநிறுத்த தக்கபடியான ஒரு வாகனத்தை உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதிலும் நான்கு பயணிகள் மற்றும் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செல்லலாம். இதற்கு தலைக்கு சுமார் 75000 டாலர்கள் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்தின் படி பூமியின் மேலாக கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர்களில் இந்த வாகனம் சுழலுமாம்.
இந்த கேப்சூல் சுமார் 4 டன் எடைகொண்டது. டாய்லெட் உட்பட பார் மற்றும் சகல வசதியுடன் கூடியதாகவும் நவீன தொடர்பு கருவிகளுடன் இருக்கும். விண்வெளி சுற்றுலா பயண நேரம் சுமார் 5 அல்லது ஆறு மணிகள். இதில் பயணிக்க பிரத்தியோக பயிற்சி தேவை இல்லையாம்.
பூமியின் மேலாக சுமார் 2 மணி நேரங்கள் சுற்றிவிட்டு பாராசூட் (பாராவிங்) இறங்குவது போல வாகனத்தோடு சேர்த்து இறக்கி விடுவார்கள்.
சாதாரணமாக போயிங் 747 பூமிக்கு மேலாக 10 முதல் 13 கிலோமீட்டர்களில் பறக்கவல்லது என்பதை கவனத்தில் கொள்க. அது பறக்கும் வான் காற்று வெளி தான் ”ட்ரோபோஸ்பியர்”
சோதனை முன்னோட்டமாக ஜூலை 2014 ல் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் ”ட்ரோபோஸ்பியர்” வான் எல்லை பகுதியில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு (iPhone, GoPro camera, GPS tracker and flight computer) சோதிக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து வானில் 28 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இந்த பலூனில் வாயுவின் அழுத்ததை தேவையான அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கும் படியான கருவி அமைக்கப்பட்டு இருந்தது.
வாயு மண்டலத்தின் பல கட்டங்களும் அதில் இயங்கும் வாகனங்களும் படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
இதெல்லாம் அடுத்த இரண்டாண்டுகளில் ( 2016 ல்) சாத்தியப்பட்டு விடும் என்கிறார்கள்.
What’s certain is that when passengers finally fly, they’ll be transported by balloons that are big – very big. At sea level, 1m3 of helium can lift 1kg. By the time you’ve added the weight of the balloon itself to the weight of a 4,000kg capsule, you’re already talking about a weight of 6,000kg. To lift that would require at least 6,000m3 of helium, and probably more. The balloon would need to be 22m in diameter. Bloon’s Annelie Schoenmaker says its capsule will be lighter, at around 2,000kg, though this would still require an enormous balloon.
the president of the Commercial Spaceflight Federation, Astronaut Michael Lopez-Alegria, is confident. “It won’t be long before tourists are heading into space,” he says
முதல்ல நாம ஹெலிகாப்டர்லயாவது பறப்போமுங்க....
ReplyDeleteஆகா
ReplyDeleteஒரு டிக்கெட் எவ்வளவோ?
பெரும்பாலான அறிவியல் சாதனைகளைப் போல இவையும் நடக்க வாய்ப்புண்டு. புகைப்படங்கள் அருமை.
ReplyDelete