ஆர்டிக் பெருங்கடல் பகுதி பனிபாறைகளால் சூழப்பட்டது. பருவ காலங்களுக்கு தகுந்த படி அதிகமாவதோ அல்லது குறைவதோ நிகழும். ஆயின் கடந்த காலங்களின் அதாவது 35 வருடங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அவற்றின் பரப்பளவானது 14 சதவீதம் குறைந்து விட்டதாக ஒரு (டேட்டா ) குறிப்பேடு தெரிவிக்கிறது.
ஆர்டிக் பகுதியில் தொடர்ந்த கண்காணிப்புகளும், ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. மேலா பார்வையில் இவை மீன்வள ஆய்வாகவே தெரியப்படுத்தப் படுகின்றன.
சொல்லப்போனால் கடற்படுகையின் வளங்களை பற்றின ஆய்வாகவே அவை கருதப்படுகின்றன.
இந்த வருடம் கனடா புதிதாக இரண்டு பெரிய ஆய்வு கப்பல்களை (Vessels) ஆர்டிக் கடற்படுகைகளை ஆய்வு செய்வதற்காக அமர்த்தி இருக்கிறது. இம்மாதிரியான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவுமே உற்று நோக்கப் படுகின்றன. மேற்படி ஆர்டிக் கடற்படுகை பிரதேசங்களில் மறைந்து இருக்கக்கூடிய பெருமளவு எண்ணெய் வளங்களும், வாயுக்களையும் கைக்கொள்வது எப்படி என்பதான பிரதேச போட்டி இது என்று சொல்லலாம்.
2007 ல் ரஷ்யர்கள் குட்டி நீர்மூழ்கிகளை எடுத்துக்கொண்டு ஆர்டிக் பகுதிக்கு போய் வடகோளம் எமது.. என்பதாக அவர்கள் நாட்டு கொடியியை அங்கு நட்டு வைத்ததார்கள்.
அப்போதிருந்தே ஆர்டிக் கடற்படுகை பிரதேசத்தில் “லொமோனோஸோவ் ரிட்ஜ்”(Lomonosov Ridge) என்ற பகுதி முக்கியமான அவதானிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. (படத்தில் இப்பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ) இப்பகுதி முழுக்க தம் சொந்தப்பகுதி என சொந்தம் கொண்டாடியது ரஷ்யா. ஆனால் அப்படி கருதமுடியாது என்று கீரின்லாந்தை தன் ஆளுமையில் வைத்திருக்கும் டென்மார்க் குரல் எழுப்பியது. இத்தோடு கனடாவும் சேர்ந்து கொண்டது. தத்தம் நாட்டு புவியியல் பரப்பளவின் எல்லைகளின் படி ஒரே நாடு அப்பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. அது பற்றிய பஞ்சாயத்து ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.
அடுத்த பத்தாண்டுகளில் இப்பகுதி பிஸியான பகுதியாக மாறிப்போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தாலும் அதன் பின்னனியில் ஆக்கிரமிப்புகளினால் ஏற்படப்போகும் நிலவியல் மாற்றங்களும் சுற்று சூழல் பாதிப்புகளும் தாம் எமக்கு பூதாகரமாக தெரிகின்றன.
( நன்றி டேவிட் சுக்மேன் கட்டுரை தகவல்கள்... )
இயற்கையின் அதிசயம் ஆர்டிக்!
ReplyDeleteஅங்கேயும் ஆக்கிரமிப்பா
ReplyDeleteஅனைத்து நாடுகளுக்கும் பொதுவான பகுதி என்று படித்ததாக நியாபகம் இருக்கிறது
அந்நிலை இன்று மாறிவிட்டதா
நன்றி சகோதரியாரே
தம 1
பஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தால் சரி...!
ReplyDeleteகடலிலும் ஆக்கிரமிப்புக்கு ஆவல்...என்ன சொல்வது
ReplyDelete