அமெரிக்க யுனிவர்சிட்டியை [Georgetown University Medical Centre ]சேர்ந்த விஞ்ஞானிகள் வெளவால்களிடம் ஒரு ஆராய்சியை செய்து பார்த்தனர். இதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்த வகை மீசைக்கார வெளவால்கள் ( ! ) [moustached bats ]
வெளவால்கள் இரவில் வேட்டையாடும் உயிரினம்.
வெளவால்கள் பறக்கும் போது மீவொலி எழுப்பிய படியே பறக்கும் அதன் எதிரொலியை வைத்து எதிரில் இருப்பவைகளை அடையாளம் கண்டுகொண்டு அதன் மீது மோதாமல் பறக்கும். அது மட்டும் அல்ல எதிரில் உள்ளது தன் இரையா என்பதை அறிந்து கொள்ளும்.
வெளவால்களின் மூளைச் செயல்பாட்டை பற்றிய ஆய்வில் சில தகவல்களை தெரிந்து கொண்டார்கள். அதாவது மனிதனை போலவே வெளவால்கள் வலது இடது இரண்டு பக்க மூளையையும் ஒலி சமிஞ்சைகளை ஏற்படுத்த புரிந்து கொள்ள உபயோகிக்கிறது.
இதில் அதிசயம் ஒன்னும் இல்லியே டெபனிட்லி மூளைதானே இந்த செயலை செய்ய முடியும் என்கிறீர்களா ? மேலே வாசிக்க;
சப்தத்தை புரிந்து கொள்ள மனித மூளையின் செயல் பாடு.
---------------------------------------------------------------------------------------------
வேகமான சப்தங்களை வலது மூளையை விட இடது மூளையே சட்டென புரிந்து கொள்ளும். அதே சமயத்தில் குரலை வைத்து இன்னாரென புரிந்து கொள்ளும் வேலையை வலது மூளை செய்கிறது. அதாவது ஹஸ்கி வாய்ஸை இன்னாருடையது என தெளிவு படுத்தும் வேலை வலதிற்கு.
மனிதன் மனிதனோடு ஒத்த குரங்குகளில் மேற்சொன்ன செயல்பாடு நிரூபிக்கப் பட்டு இருக்கு.
வெளவால்களில் இந்த ஒலி தொடர்பு வேலைகளை இடது மூளை பார்த்துக் கொள்கிறது. அதாவது ஒலியின் ப்ரீக்குவன்ஸி எப்படி இருந்தாலும் அதை இடது மூளைதான் முன்னின்று செய்கிறது.
எதிரொலியை (எக்கோவை Echolocation ) கிரகிக்க வலது மூளையை பயன் படுத்துகிறது.
ஒலி எழுப்புவதும் ஒலியை உள்வாங்குதல் இந்த இரண்டையுமே வெளவால்கள் ஒரே சமையத்தில் செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
மனிதர்களில் ஆண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் பெண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் எப்படி வித்தியாசம் இருக்கோ அதே மாதிரித்தான் வெளவால்களும்.
மனிதர்களில் மொழியை உபயோகிப்பதில் பெண்கள் இரண்டு பக்க மூளைகளையும் பயன் படுத்துகிறார்கள். ஆண்கள் இதற்கு இடது பக்க மூளையை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
சரி வெளவால்களிடம் இந்த ஒலி ஆய்வினால் என்ன பயன் என்றால், மனிதர்களிடம் பேச்சு குறைபாட்டை சரி செய்வதற்கு மற்றும் பேச்சு திறன் அற்றவர்கள் பேச நினைப்பதை கம்யூட்டர் உதவியோடு எளிதில் பேசுவது எதிர்காலத்தில் இன்னும் எளிதாக்கப்படலாம்.
Labels : மனித மூளை, வெளவால், brains, bats
இரண்டு பக்கம் பயன்படுத்துவதே அவர்கள் சக்தி...!
ReplyDeleteசிறப்பான தகவல்கள்! நன்றி!
ReplyDeleteஅறியாத தகவல்கள். இயற்கையை ஆதாரமாக வைத்துதான் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்த கண்டுபிடிப்பும் வெற்றிபெற்றால் பலருக்கும் பயன்படும். தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDelete