இந்த கேள்விக்கான பதிலை பிறகு பார்ப்போம். நம் மூளையின் செயல்பாட்டை அல்லது இயக்கத்தை பற்றி கொஞ்சம் சிந்திப்போமா ?
நம்மூளை எதிர்காலத்தைப்பற்றி அடுத்த செகண்டில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும். நாம் அயர்ந்து தூங்கும் நேரம் தவிர.
சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம் இப்பப்பாரு அவரு கூப்பிடுவாரு, சொல்லி முடிக்கும் முன் அதேபோல் போன் மணி அடிக்கும். அவர் சொன்னவரே லைனில் இருப்பார். இதற்கு அவர் சிந்தனை ஓட்டமெல்லாம் எதிராளி என்ன செய்வார் என்பது அவர் அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது அவ்வளவே.
சிறுவயதில் நீங்கள் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை நினைத்துப்பாருங்கள் எவ்வளவு தரம் விழுந்து பின் பெடல்களை, உடலை, ஹாண்டில்பாரை எப்படி பேலன்ஸ் செய்வது என்று பல தடவை பயிற்சி எடுத்துக்கொண்டீர்கள். பின்பே சைக்கிள் ஓட்டினீர்கள்.
இப்போது வளர்ந்தபின் நீங்கள் பலவற்றை யோசித்துக்கொண்டே சைக்கிளில் சென்றாலும் ஆட்டோமேடிக்காக உங்கள் உடலை சமநிலை வேலைகளை மூளை உடல் உறுப்புகளுக்கு கனகச்சிதமாக கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
எதிர்பாராது காற்று வீசினாலோ ? டயர் பஞ்சர் ஆகினாலோ தடுமாறி நாம் சமநிலையை (balance ) ஏற்படுத்த சிரமப்படுவோம்.
முதன்முறை தீடீர் தீயில் மாட்டிக்கொள்பவனுக்கு எப்படி தப்பிக்க வேண்டும் என்ற உடனடி எதிர்கால யுத்தி அவனுக்கு இல்லாமையால் தடுமாறுவான். ஆனால் ஒரு தியணைப்பு வீரருக்கு உள்ள அனுபவம் அந்த ஆபத்திலிருந்து அவரை மீட்பார்.
இதுபோல பல விஷயங்களிலும் நமக்கு முன் அனுபவம் இல்லை எனில் மூளையால் உடனடி தீர்மானத்தை எடுக்க முடிவதில்லை.
எல்லாம் படித்தவருக்கும் அனுபவசாலிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான்.
குழந்தைகள் புது அனுபவங்களை டோரெமான், டாம் அன் ஜெரி, சோட்டாபீம், நிஞ்சா ஹட்டோரி,பென்டென்,பவர் ரேஞ்சர்ஸ், இப்படி பல கார்டூன்களில் இருந்து கற்றுக்கொள்ள விழைகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.
என்ன.. முதல் கேள்வியை நீங்க மறக்கலியே ?
நம்மை நாமே கிச்சுக்கிச்சு (tickle) மூட்டிக்கொள்ளும்போது அந்த செயலை நம்மூளை ஏற்கனவே நடைபெறும் என்று யோசித்து முன்னேற்பாட்டை செய்துவிட்டது. எந்தவித எதிர்பார்பும் கிடையாது. விளைவு பூஜ்ஜியம்.
மற்றவர்கள் இதைசெய்யும் எப்போது? எங்கு? எப்படி? செய்வார்கள் என்பதை நம்மூளை முடிவுசெய்ய முடிவதில்லை. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். (ஹி..ஹி..தான் )
இறுதியாக, சில வார்த்தைகள் ; புத்துணர்வோடு நம் உடல் மற்றும் மன உணர்வுகளை வைத்துக்கொள்வது நம்மை இளமையாகவும், வாழ்க்கையை இனிமையாக எதிர்கொள்ளும் அனுபவத்தையும் நமக்கு அளிக்கும்; சரியா ?
கீழே உள்ள ஆங்கில வாக்கியங்களை படிக்க முயற்சிசெய்யுங்கள் (பலருக்கு இது தெரிந்திருக்கலாம் ! )
நம்மூளை எப்படி தவற்றை திருத்தி சரியாக படிக்க முயற்சி செய்கிறது ?
சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நா பழக்கம் !
மேலுல்ல ஆங்கில வாக்கியத்தை படிக்க முடிந்தாலும்; இல்லை என்றாலும் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.
//மற்றவர்கள் இதைசெய்யும் எப்போது? எங்கு? எப்படி? செய்வார்கள் என்பதை நம்மூளை முடிவுசெய்ய முடிவதில்லை. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம்//
ReplyDeleteஇது சரியான விளக்கம் இல்லை என்று தோன்றுகிறது! சில நபர்களுக்கு இடுப்பில் கை வைத்தால் கூசும், எத்தனை முறை கை வைத்தாலும் கூச்ச பட்டு கொண்டுதான் இருப்பார், நாம் சொல்லி விட்டு செய்தாலும் அவருக்கு கூச்சம் இருக்கும்.
வேறு சில காரணங்கள் இருக்குறது ஆராய்ந்து எழுதவும். காத்திருக்கிறோம்.
நண்பர் முபாரக், அதற்கு மேல் உள்ள பாராவை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.
Delete//நம்மை நாமே கிச்சுக்கிச்சு (tickle) மூட்டிக்கொள்ளும்போது அந்த செயலை நம்மூளை ஏற்கனவே நடைபெறும் என்று யோசித்து முன்னேற்பாட்டை செய்துவிட்டது. எந்தவித எதிர்பார்பும் கிடையாது. விளைவு பூஜ்ஜியம்.//
நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்ட முடிவதில்ல என்பதே இங்கு கேள்வி.
கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கு ஏன் அப்படி ? என்ற உங்களின் கேள்விக்கு பதிலை நானும் முயற்சிக்கிறேன். இருப்பினும் இது குறித்து உங்களுக்கு தெரிந்தாலும் தெரிவியுங்கள் நண்பரே.
நண்பர் முபாரக்,
Deleteஏன் சில நபர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகமிருக்கிறது என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.
அவர்களுக்கு உணர்ச்சி நரம்பு முடிச்சுகள் (முனைகள்) அதிகமிருக்கலாம் இன்னொன்று மனரீதியாக அவர்களை பிறர் தொட அனுமதிக்காதது, என்று சொல்கிறார்கள்.
இயல்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உணர் நரம்பு முடிச்சுகள் அதிகம் எனவே அவர்கள் கட்டுப்படுத்தமுடியாத நகைச்சுவைக்கு உணர்வுக்கு ஆட்படுகிறார்கள்.
பிளஸ் மைனஸ் தானே வாழ்வை சுவையாக்குகிறது.
இன்னொன்று பெண்கள் மனரீதியாகவும் உணர்வு பூர்வமானவர்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நம் மன சோர்வான நிலையில் (தொடுதலின் போது) கூச்சம் குறைவாகவே உணரப்படுகிறது.
தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
வித்தியாசமான தகவல்கள் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி தோழி!
Deleteஎன்னால படிக்க முடியல....ஒண்ணு ரெண்டு மட்டும் தெரியுது
ReplyDeleteஇதற்கு எவ்வித புலமையும் வேண்டியதில்லை. ஆனால் இதை படிக்க கூடியவர்கள் எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் அறிந்திருக்கவேண்டும் அவ்வளவே. இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பவர்களுக்கு 1,3,4,5,7 என்ற எண்கள் ஆங்கில எழுத்தில் முறையே I,E,A,S,T என்று மாற்றி தருகிறது நம்மூளைக்கு சற்று உணர்த்திவிட்டால் கட கடவென படிக்க இயலும். உதாரணமாக F1GUR4C71V31Y Sp34k1ng ? என்பது figur actively Speaking ? அவ்வளவு தான் நண்பரே !
DeleteTHIS MESSAGE SERVES TO PROVE HOW OUR MIND CAN DO AMAZING THINGS. IN THE BEGINNING IT WAS HARD BUT NOW, ON THIS LINE YOUR MIND IS READING IT AUTOMATICALLY WITHOUT EVEN THINKING ABOUT IT. BE PROUD! ONLY CERTAIN PEOPLE CAN READ THIS. PLEASE FORWARD IF YOU CAN READ THIS.
ReplyDeleteGood article. please keep going. we are following.
ஆர்வத்துடன் கருத்திட்ட பீட்டர் ஜான் அவர்களுக்கு எனது நன்றி. நீங்கள் எழுதி இருப்பதில் சில தவறுகள் மட்டுமே உள்ளன. நன்றி.
Deleteஆங்கில வார்த்தைகள் என்று சொன்னீர்கள்......அவற்றை இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் :)....
ReplyDeleteஒன்று அல்லதி இரண்டுதான் புரிந்தது
பதிவு கலக்கல்
பீட்டர் ஜான் முயற்சி செய்திருக்கிறார் பாருங்கள் ஆத்மா. முதலில் படிப்பதற்கு கடினமாகத்தோன்றும் இரண்டொரு முயற்சியில் பழகிவிடும். நன்றி!
Deleteஅருமையான அலசல்! நல்ல பதிவுகளை தொடர்ந்து தரும் உங்களுக்கு நன்றி! சில ஆங்கில வார்த்தைகளைத்தான் படிக்க முடிந்தது! நன்றி!
ReplyDeleteவெகு சுலபமே இரண்டு மூன்று முயற்சியில் புலப்படும். பின்னூட்டத்தில் ஒரு விளக்கும் கொடுத்து இருக்கிறேன் பார்க்கவும். நன்றி நண்பரே!
Deleteஒரே முயற்சியில் படித்து முடித்து விட்டேன்.. பிரைஸ் எதாவது உண்டா ?? ;-)
ReplyDeleteதன்னைத் தானே தூக்குவது போன்று எதோ சொல்லப் போகிறீர்கள் என்று என் மூளை சொல்லியது.. ஆனால் சிறப்பான விளக்கம் கொடுத்து என் மூளையை ஆச்சர்யப் படுத்திவிட்டீர்கள்..!
ஆ..கோவை ஆவி ! நன்றி நண்பரே !!
Delete//நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ? //
ReplyDeleteதலைப்பு ரொம்பவே சிந்திக்க வைத்தது
அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா
இதை நண்பர் அனுப்பியிருந்தார், ஆரம்பத்தில் இரண்டு வார்த்தைகள் தடுமாறி சுதாரித்த பின்னர் மீதி கட கடவென படிக்க முடிகிறது. மற்றவர்கள் கிச்சு கிச்சு மூட்டினால் அது ஒரு அந்நிய object என்பதால் நாம் நெளிகிறோம் என நினைத்தேன், விளக்கத்திர்க்கு நன்றி.
ReplyDeleteநல்ல எழுது நடை
ReplyDeleteமிக்க நன்றி.
Tamil Seiythigal
தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை நண்பருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteFIGURATIVELY SPEAKING - நல்லாவே படிக்க முடிந்தது.
ReplyDeleteநல்ல விளக்கம்
வாழ்த்துக்கள்