விண்வெளி வீரர்கள் தற்போது விண்வெளியில் மிதக்கும்
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் ( சுருக்கமாக ISS
international space station ) அதிக நேரங்களை செலவிட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா,கனடா, ஜப்பான் மற்றும் 11 ஐரோப்பிய நாடுகள், பிரேஸிலுடன் சேர்த்து 16 நாடுகள் ISS திட்டத்தில் பங்கெடுத்து உள்ளன. விண்வெளியில் 1998 ல் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் பல பகுதிகள் இணைக்கப் பட்டு வருகிறது. இதற்கென 50 திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு இணைப்பதற்காக 140க்கு மேற்பட்ட ஸ்பேஸ் வாக் நடத்தப்பட்டு உள்ளது.
அடுத்து பல கட்டங்களில் எதிர்கால விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக அடுத்த பத்தாண்டுகளில், விண்வெளி வீரர்களை முதலில் நிலவுக்கும் அதன் பின் செவ்வாயிற்கும் அனுப்பும் திட்டம் அமெரிக்காவும் சைனாவும் வைத்திருக்கிறது.
செவ்வாயில் மூன்று வாரங்கள் இருப்பதற்கு போக வர 18 மாதங்கள் விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் என்று சொல்லலாம்.
இன்னும் சில பத்தாண்டுகளில் (Decades) நிலவுக்கு ஓய்வெடுக்க சென்று வருவது என்பது விண்வெளி வீரர் அல்லாதோருக்கு சாதரணமாகி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
- ஓரியான் (orion)
அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் ஒரு புது ஸ்பேஸ்கிராப்ட் (விண்வெளி ஓடம்) ஓரியான். வரும் 2014 ல் இது ஏர்ஸ்-1 ராக்கெட் மூலம் எடுத்து செல்லப்பட்டு I S S ல் வீரர்களை இறக்கிவிடும்.
அங்கிருந்து அப்படியே நிலவிற்கு பயணப்படலாம். மேலும் ஒரே நேரத்தில் ஆறு பேர்கள் நிலவிற்கு சென்று வரக்கூடிய மேம்படுத்தப்படும் திட்டம் உள்ளதாம். குறைந்தது ஆறு மாதங்கள் நிலவில் அவர்கள் ஓய்வெடுத்து ..! ஓரியான் மூலமாக பூமிக்கு திரும்பிவிடலாம். ( ஜாலி டிரிப் !! )
- லூனார் ரோவர் (Lunar Rover)
நிலவில் விண்வெளி வீரர்களுக்காக பிரத்தியோகமான ஒரு வாகனம் லூனார் ரோவர். இதில் அவர்கள் கார் பவனி வருவது போன்று நிலவில் சுற்றி வரலாம். இந்த ப்ரோட்டோ வகை ரோவர் பூமியில் ஏற்கனவே பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டது. இரண்டு பேர் இதில் தாரளமாக செல்லலாம். இதன் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர்கள் தான். இதில் உள்ள எரி பொருள் 240 கிலோமீட்டர்களுக்கு தாங்கும் என்பது கூடுதல் தகவல்.
- செவ்வாயில் மனிதர்கள்
மனிதன் காலடி வைக்கும் முதல் கோள் செவ்வாயாகத்தான் இருக்கும். இதற்கு புவியை சுற்றி வரும் ஸ்பேஸ்கிராப்டிற்கு ஓரியான் மூலமாக தங்க வைக்கப்பட்டு பின் அங்கிருந்து செவ்வாயிற்கு அழைத்து செல்லப்படுவர். கால அளவு ஒன்பது மாதங்கள். இதெல்லாம் நடப்பதற்கு 2030 இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
- மார்ஸ் - 500
நீண்ட காலம் செவ்வாயில் இருந்தால் மனிதனுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும், அப்புறம் உணவு பழக்க வழக்கங்கள், இன்னபிற பிரச்சனைகள் குறித்து ஆராய பரிசோதனையில் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஐசுலேசன் சேம்பர் தான் செவ்வாய் -500. 2009 லேயே மாஸ்கோவில் பரிசோதிக்கப்பட்டது. இதில்ஆறு பேர் கொண்ட ஒரு குழு 105 நாட்கள் இருந்திருக்கிறார்கள்.
- ஸ்பேஸ் ஹோட்டல்
விண்வெளியில் பூமியை சுற்றும் வகையில் அமைக்கப்படும் ஒரு ஸ்பேஸ் ஹோட்டல் ( வித்தியாசமா இருக்கு இல்ல...இட்லியும் கெட்டி சட்னியும் ஸ்பெசல் மெனுவா...? ) விண்வெளி வீரரா இல்லாதவங்களும் இந்த ஹோட்டல தங்கி ஓய்வெடுக்கலாம். இது பூமியை ஒரு நாளுக்கு 16 முறை சுற்றும். தனியார் ஆர்கனைசேசன் ஒன்று GENESIS-1 என்ற ரஷ்ய ராக்கெட்டில் ஏற்கனவே ப்ரோட்டோ டைப் ஹோட்டலை அனுப்பி பரிசோதித்து விட்டது.
- கொசுறு தகவல்
முதல் விண்வெளி பயணி (first traveller ) ( அதாவது விண்வெளி வீரர் அல்லாதவர் ) டெனிஸ் டிட்டோ. இவர் அமெரிக்க தொழில் அதிபர். 20 மில்லியன் US டாலர் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 2001 ல் ஒருவாரம் பயணம் முடித்து திரும்பினார். இவருக்கு முன் சென்ற விண்வெளி வீரர்கள் 414 பேர். (சென்ற விண்கலம் சோயுஸ் TM 32) இவர் தங்கி இருந்த 7 நாள் 22 மணிநேரத்தில் I S S - 128 முறை பூமியை சுற்றி காட்டியது.
தொடர்புடைய பதிவு :
அறிவுக்கு விருந்து :-)
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பின் வருகை தரும் நண்பரே ! மிக்க நன்றி.
Delete\\இன்னும் சில பத்தாண்டுகளில் (Decades) நிலவுக்கு ஓய்வெடுக்க சென்று வருவது என்பது விண்வெளி வீரர் அல்லாதோருக்கு சாதரணமாகி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\\ ஓய்வு, உல்லாசம் இதெல்லாம் விண்வெளிப் பயணத்துக்குப் பொருந்துமா என்றே தெரியவில்லை. ISS யில் தங்கியிருக்கும் போது எடையற்ற சூழ்நிலை, உணவு தண்ணீர் அருந்துவது, நடப்பது தூங்குவது போன்ற அன்றாட செயல்களுக்கே மன்றாட வேண்டும். சந்திரன், செவ்வாய் இதற்க்கெல்லாம் போயிட்டு வந்து சேர்வதற்குள் ஒவ்வொரு நிமிடமும் உசிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும், எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம், எந்த கியாரண்டீயும் இல்லை.
ReplyDelete\\இவர் தங்கி இருந்த I S S ஒரு நாளுக்கு 128 முறை பூமியை சுற்றி காட்டியது.\\ ISS ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வரும், ஒரு நாளைக்கு 16 முறைதான் மொத்தம் வரும், 128 எப்படி வந்தது? ஒரு வேலை எட்டு நாள் தங்கியிருந்திருப்பாரோ? 8 X 16= 128.
ஹாலி டேவில் ஊர் சுற்றி பார்பது போல் சென்று வரலாம் என்பதையே அப்படி குறிப்பிட்டுருந்தேன் அட்வென்சர்களுக்கெல்லாம் எதுவும் சாதாரணம். சோதனைகளையே சாதனையா மாற்றும் வலிமை உடையவர்கள் இல்லையா ?
Deleteஆமா அது மொத்த கணக்கு தான் டேட்டா ஹெட்டிங் தப்பா போட்டிருந்ததனால் வந்த குழப்பம். உங்க கணக்கு சரிதான் சார்.
மிகவும் அருமையான அரிய தகவல்கள்! பகிர்ந்தமைகு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteடெனிஸ் டிட்டோ போன வழியில் இனி எல்லாரும் டிட்டோ போட்டு கிளம்பிருவாங்களே..!
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
ReplyDeleteவருக!
http://blogintamil.blogspot.in/