ஆரம்ப கால விஞ்ஞானிகள் அண்டத்திலுள்ளவைகள் எவ்விதம் நகர்கின்றன, அவைகள் புவியை கடந்து செல்லும் காலம் இப்படி அநேக விசயங்களை அளவிட்டனர்.
விண்ணியலுக்கு என்று ஒரு தனிப்பெரும் வரலாறு இந்தியாவிற்கு உண்டு. விண்ணியல் கணிப்புகளின் முன்னோடி இந்தியா. விண்ணியல் விஞ்ஞானிகள் யோகிகளாகவும் ஞானிகளாகவும் இங்கு பார்க்கப்பட்டனர்.
அதன் பின் வந்த விஞ்ஞான முன்னேற்றமும் பல படிகளை விண்ணியல் அடைந்தது எனலாம். முக்கியமாக பலவித கருவிகள் இன்றைக்கு இருக்கின்றன. அதே போல ஆய்வுகட்டுரைகளும் பெரும்பாலும் நிரூபிக்கப்படுகின்றன.
இப்பகுதியில் சில விண்ணியல் விஞ்ஞானிகள் பற்றி பார்ப்போம்.
Arthur Eddington (An English Astronomer)
ஆங்கில விண்ணியல் விஞ்ஞானி ஆர்த்தர் எடிங்டன் :
நட்சத்திரங்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன அல்லது அதனுள் இருப்பவை என்ன ? இப்படி பல ஆய்வுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன.
1920 சில கருத்துககளை உறுதிபடுத்தினார்.
அவற்றில் வெளிவிடப்படும் ரேடியேஷன் வெளிதள்ளும் விசையாகவும், அதனுடைய ஈர்ப்புவிசை உள்ளிழுப்பதும் நட்சத்திர தன்னிலை சமநிலைக்கு காரணம். நட்சத்திரத்தின் சக்தி வெளிப்பாடு அதனுள் நடக்கும் நியூக்ளியர் மாற்றங்கள் என்றார்.
Cecilia Payne Gaposchkin
சிசிலியா ஃபைனே மாணவியாக இருக்கும் போதே ஆர்த்தர் எடிங்டனின் பேச்சுக்கள் இத்துறையில் இவரை ஆர்வம் கொள்ள வைத்தது. இத்துறையில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியர். 1920 ல் நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆனது என்று கண்டுபிடித்தார்.
Fred Hoyle
கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக வானியல் விஞ்ஞானி ஃப்ரெட் ஹாயல். நட்சத்திரத்தின் உட்கருமையத்தில் வெளிப்படுத்தப்படும் மூலக்கூறுகள் (Elements) எவை எவை என்ற ஆய்வில் புகழ் பெற்றவர். அண்டம் எவ்விதம் உருவானது ? இதன் எதிர்காலம் என்னவாயிருக்கும் இப்படிப்பட்ட கட்டுரைகள், அப்புறம் Big Bang "பெருவெடிப்பு" பற்றிய சொல்லாக்கத்தை தந்தவர் (1950) என்ற சிறப்பு பெற்றவர்.
இவரைபற்றிய இன்னுமொரு குறிப்பு சிறந்த சயின்ஸ்பிக்ஸன் (Science fiction) எழுத்தாளர்.
Fred Whipple
ஃப்ரெட் விப்பில், சூரிய மண்டலத்தின் நுண்ணிய பொருட்களை ஆய்வு செய்தவர். ஹார்வர்டிலுள்ள ஸ்மித்சோனியன் அஸ்ரோபிஸிக்ஸ் ஆப்சர்வேட்டரி (ஆய்வரங்கம்)யின் டைரக்டர். வால் நட்சத்திரங்களின் மையம் பனிக்கட்டிகளாலும், பிரம்மாண்ட பாறைத்தூசுகளாலும் நிரம்பியது என 1949ல் விளக்கினார். எரிகற்களுக்கு வால் நட்சத்திரங்கள் ஒரு காரணம் என்றார். அதுமட்டுமல்ல இவர் ஆறு வால் நட்சத்திரங்களை கண்டுபிடித்தார்.
Subramanyan Chandrasekhar (Indian-American astrophysicist)
வெள்ளை குள்ளர்கள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்டும் நட்சத்திரங்களின் அழிவிற்கு அதனுள் உள்ள தனிமங்களின் அளவை பொருத்தது என கண்டறிந்தார் நோபல் பரிசு பெற்ற சுப்ரமண்யன் சந்திரசேகர்.
சந்திரா எக்ஸ்ரே அப்ஸர்வேட்டரி டெலஸ்கோப் இவரை சிறப்பிக்க வைக்கப்ப்பட்ட பெயர்.
Edwin Hubble
யுனிவர்ஸை பற்றி இதற்குமுன் நம்பப்பட்டு வந்த பல கருத்துக்களை மாற்றி காட்டியவர் எட்வின் ஹப்பில் 1920ல் வெளியிட்ட ஆய்வறிக்கைகள். கலிபோர்னியாவில் வில்சன் மலையில் அமைக்கப்பட்ட ஹூக்கர் வானிலை ஆய்வுக்கூடத்தில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். பூமி பால்வெளியில் அமைந்துள்ளது. இந்த அண்டம் முழுமையும் எண்ணற்ற கேலக்ஸிகளால் நிரம்பியது. கேலக்ஸிகள் உருவம் அமைப்புகளை கொண்டு அவற்றின் வகைகளை பிரித்தறிந்தார். இவரை சிறப்பிக்க விண்வெளி தொலைநோக்கிக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டது.
Eugene shoemaker
இயூஜின் ஷூமேக்கர், நிலவிற்கு சென்று வந்ததினால் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் அப்போலோ விண்வெளி வீரர்களுக்கு நிலவின் புவியல் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து விண்கற்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். ஷூமேக்கர் லெவி-9 என்ற வால்நட்சத்திரத்திரம் 1993 ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் அஸ்தி லூனார் ஸ்ப்ராஸ்பெக்டார் ஸ்பேஸ் கிராப்ட் மூலம் நிலவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
Vera Rubin
வெரா ரூபின் விண்வெளி பெண் ஆராய்ச்சியாளர் வாஷிங்டனில் கார்னிகி இன்ஸ்டிடியுட்டில் பணிபுரிந்தார் கேளக்ஸிகள் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
கேளக்ஸிகள் பொருண்மையை பொருத்து நட்சத்திரங்களின் சுற்றுவட்டமையம் இருக்கும் என்றும் நட்சத்திர நகர்வுகள் குறித்தும் இவரின் ஆய்வுகள் இருந்தது. 1983 ல் 90 சதவீத கேளக்ஸிகளை வரையறை செய்தார். டார்க் மேட்டர்களும் இவரின் ஆய்வில் குறிப்பிடத்தக்கது.
Riccardo Giacconi
Space telescope science institute (முக்கியமாக ஹப்பில் தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டிருதவை.) மற்றும் European southern observatory இரண்டிற்குமான இயக்குனராக இருந்தார் ரிக்கார்டோ கிக்கோனி. இயற்பியலுக்கான நோபல் பரிசு 2002 ல் இவருக்கு அளிக்கப்பட்டது. நட்சத்திரங்கள் வெளிவிடும் எக்ஸ்கதிர்கள் குறித்து ஆளவீடு செய்யும் கருவியை ஹப்பில் மற்றும் சந்திரா எக்ஸ்ரே விண்வெளி ஆய்வுகூடத்தில் நிர்மானித்தார்.
JAN OORT
ஜேன் ஆர்ட் நெதர்லாந்திலுள்ள வெய்டன் ஆய்வரங்கத்தில் பல ஆண்டுகள் இயக்குநராக பணியாற்றினார். இளவயதில் அதாவது 1927 லேயே பால்வெளி சுற்றுவதை நிரூபித்தார். ரேடியோ அலை குறித்த விண்வெளி ஆராய்சியில் முக்கிய பங்களித்தார். வால் நட்சத்திரங்களால் ஏற்பட்ட பெரும் மேகக்கூட்டம் சூரிய மண்டலத்தில் சுற்றிவருவதை அறிவித்தார். இம்மேககூட்டத்திற்கு ஆர்ட் க்ளவுட் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் அளப்பரிய சேவை செய்துள்ளார்கள்..
ReplyDeleteஞாபகத்தில் வைக்கத்தக்கதாய் பகிர்ந்தது நன்று
நன்றி ஆத்மா !. சுப்பிரமண்யன் சந்திரசேகர் விஞ்ஞானி சர்.சி.வி ராமனும் ரிலேட்டீவ்ஸ்
Deleteஇதுக்கெல்லாம்..ஞானம் வேண்டும் !
ReplyDeleteமிகவும் உபயோகமான பதிவு..நன்று..வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே!. விஞ்ஞானிகள் பிறக்கும் போதே அந்த ஞானத்துடன் (ஸ்பெசல் IQ) இருப்பார்களோ!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete\\வெள்ளை குள்ளர்கள் அல்லது நியூரான் நட்சத்திரங்கள்\\நியூரான் அல்ல இது, "நியூட்ரான்". நியூரான் என்பது மூளை செல்.
ReplyDeleteஎழுத்துப்பிழை ! ஒரு எழுத்து மாறினால சமாச்சாரமே மாறிவிடும். நுணுக்கமான கவனிப்பிற்கு மிக்க நன்றி ஜெயதேவ் சார்.
ReplyDelete