Northern Hawk owl ராசாளி ஆந்தைகள்
ராசாளி ஆந்தை இனம் மத்திய ஆசிய-ஐரோப்பிய பகுதிகள் மற்றும் வட அமெரிக்கப்பகுதியில் வசிப்பவை. நீளமான வால் கொண்டது.
இவை உயரமான பட்டு போன மரங்களில் கருப்பு மரங்கொத்தி பறவைகள் ஏற்படுத்திய பொந்துகளை தமது கூட்டிற்கு தேர்ந்தெடுக்கின்றன.
கடும் பனி பொழிவு இருப்பினும் இவற்றின் இரையை தேடுவதற்கு நாள் முழுதும் பயணிக்கின்றன.
இவ்வகை ஆந்தைகள் பகலும், இரவிலும் வேட்டையாடுகின்றன.
இவற்றின் முக்கிய உணவு வோல்ஸ் (Voles) என அழைக்கப்படும் நீர் கரையோரங்களில் வாழும் ஒருவகை மூஞ்சூரு எலிகள், சிறு முயல்கள் இவையும் கிடைக்கவில்லை என்றால் தவளைகள், பல்லிகளை பிடிக்கின்றன.
பூமியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர்கள் உயரத்திலேயே பாய்ந்தோடும் இரையை அடையாளம் கண்டு சப்தமில்லாமல் லாவகமாக பிடிப்பதில் வல்லவை இந்த ராஜாலி ஆந்தைகள். ( சைலன்ஸ் ஹண்டர்ஸ் !! )
பின்லாந்தில் இவை ஹிரிப்போலோ ( Hiiripollo ) அதாவது எலி-ஆந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
குஞ்சு பொறிக்கும் பருவம் மார்ச் மாதம். பெண் பறவை 4 முதல் 13 முட்டைகள் வரை இடும். 25 முதல் 30 நாட்கள் அடைகாக்கிறது.
குஞ்சு பொறித்த 2 இரண்டு வாரங்கள் தாய் பறவை மற்றும் குஞ்சுகளுக்கு இரை தேடி கொண்டுவர வேண்டிய பொருப்பு ஆண் பறவைக்கு உண்டு.
குஞ்சுகள் 6 முதல் 8 வாரங்கள் பெற்றோரின் மேற்பார்வையில் பாதுகாப்பாக வசிக்கிறது. அதன் பிறகு வளர்ந்த குஞ்சுகள் சுதந்திரமாக பிரிந்து சென்று விடுகின்றன.
சாதாரணமாக இந்த ஆந்தைகள் 270 முதல் 340 கிராம் எடை கொண்டவை. தலை முதல் வால் வரை 36 - 38 செ.மீ நீளம் உடையவை. விரித்த நிலையில் இறக்கையின் நீலம் 74 - 81 செ.மீ.
வட பின்லாந்து காரரான ஜாரி பெல்ட்மாகி ( Jari peltmaki ) ஒரு சிறந்த வைல்ட் லைப் போட்டோகிராபர் மட்டுமல்ல இவ்வகை ஆந்தைகளை 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருபவர். அவர் எடுத்த புகைப்படங்களே இவைகள்.
ஆந்தைகள் குறித்த செய்திகள் அறிந்தேன். அதன் வாழ்க்கை மனித வாழ்வுடன் எப்படி சம்பந்தப்படுகிறது என்பது குறித்தும் எழுதினால் படிக்கும் ஆர்வம் அதிகமாகும் எல்லாமே சுய நலம்தான்...
ReplyDeleteஆமை புகுந்த வீடும்... என்றும் ஆந்தை அமர்ந்த வீடும் உருப்படாது என்பது போன்ற சொல் வழக்குகள் உண்டு. எல்லாமே தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைகளே !
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாதேவி !
Deleteநல்ல செய்தி இந்த ராஜாலி ஆந்தைகளை எங்க ஏரியாவுலயும் அடிக்கடி காணக்கிடைக்கிறது...
ReplyDeleteஇலங்கையின் தகவமைப்பிலும் இப்பறவை உள்ளது என்ற தகவலுக்கு நன்றி ஆத்மா.
Deleteபடங்கள் அழகாயிருக்கின்றன. இவை இருந்தால் எலித் தொல்லை மட்டுப் படும். இவற்றை கெட்ட சகுனம் என்று நினைப்பது துரதிர்ஷ்டமே..........
ReplyDeleteநன்றி!!!
ReplyDelete