சத்தியமங்களத்தின் ஒரு கிராமம் T.N. பாளையத்தில் உதித்த ஒரு இளம் புயல் தொல்காப்பியன். தமிழரின் தொன்மையான கலை சிலம்பம் அவனுக்கு கைவந்த கலையாயிருக்கிறது இச்சிறு வயதில்.
புரட்சிததலைவர் (எம்.ஜி.ஆர்) சிலம்பம் சுழற்றி அடித்து எதிரிகளை துவம்சம் செய்த திரைப்படங்களை இன்றும் மறக்க இயலாது. சிலம்பக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார்.
இன்று சிலம்பத்தில் பலவித சாகசங்கள் புரிகிறான் சிறுவன் தொல்காப்பியன். தனிதிறமை -சிலம்பம், நெருப்பு பந்து, நட்சத்திர நெருப்புக்கோளம், நெருப்பு சங்கிலி, நீர் தராசு, பொய்கால் குதிரை சிலம்பம்,ஸ்கேட்டிங்கில் சிலம்பம், சுருள்வீச்சு, சுழல் நெருப்பு இப்படி பல சாகசங்கள்.
தொல்காப்பியனை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, சமீபத்தில் கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் (வர்ணஜாலம் ஓவியப்போட்டி நிகழ்ச்சி) கூடியிருந்த அத்துணைபேர் உள்ளங்களிலும் புகுந்து கொண்டான் சிறுவன் தொல்காப்பியன்.
விர்...விர். எனும் சப்தத்துடன் தனக்கே உரித்தான தனி அழகுடன் சிலம்பம் சுழற்றுகிறான் எட்டு வயது சிறுவன் தொல்காப்பியன். இதிலென்ன சிறப்பு ? என்று கேட்கும் பார்வையாளர்களை அடுத்தடுத்த சாகசங்கள் அவர்களின் திறந்த வாயை மூட மறக்கிறார்கள்.
முதலில் சிலம்பம் சுழற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. வில் வித்தைக்கு எப்படி பல நுணுக்கங்களும் கவனமும் அவசியமோ அப்படி இதற்கும் பல அவதானிப்புகள் தேவைப்படுகிறது.
சிலம்பம் சுழற்றிய படியே தரையில் கரணம் போடுகிறான். சிலம்பத்தின் இரு முனைகளிலும் தீப்பந்ததை கட்டிக்கொண்டு சுற்றி சுழல்கிறான்.
தனித்திறமை என்று சொல்லக்கூடிய சிலம்பச் சுழற்றல்,
இரண்டு கைகளிலும் இரு சிலம்பங்கள் சுழற்றுதல்,
இரு சிலம்பங்களிலும் தீப் பந்தங்களை கட்டிக்கொண்டு சுழற்றுதல்.
நட்சத்திர வடிவில் கட்டிய கம்புகளின் முனைகளில் தீப்பந்தங்களை கட்டி சுழற்றுதல்,
இரண்டு நீண்ட சங்கிலியின் முழுக்க தீ சுவாலை பற்றி எரிய அதை சுழன்று சுழற்றுதல், அதோடு ஒரு கையை தரையில் ஊன்றி அதை சுழற்றுதல்,
தலைகீழாக கரணமடித்த படியே சுழற்றுதல்
நெஞ்சில் இருகக்கட்டிய பெல்டின் முனையில் கட்டப்பட்ட இரும்பு உருண்டையை உடல் வளைத்து சுழற்றுகிறான். அதே போல் அந்த முனையில் நெருப்பு பந்தை கட்டி சுழற்றுகிறான். அதோடு கரணம் அடிக்கிறான்.
ஒரு சங்கிலியின் இரு முனைகளில் தராசு போல இரு தட்டுகள் பிணைத்திருக்க அதில் இரு டம்ளர்களில் தண்ணீர் நிரைத்து ஒரு சொட்டு கீழே விழாமல் சுழற்றுதல்,
அதேபோல் முட்டைகளை வைத்து சுழற்றி காட்டுகிறான்.
எல்லாவற்றிற்கும் மேலே பொய்கால் குதிரை ஆட்டம் போல கால்களில் கட்டையை கட்டிகொண்டு மேலே சொன்னவைகள் அத்துணையும் செய்து காட்டுகிறான் அனாயசமாக.
இன்னும் புது அட்வென்ஞ்சர் என்று சொல்ல கூடிய வகையில்
தமிழ் கலையோடு மேல் நாட்டு கலையையும் இணைத்து ஸ்கேட்டிங்கில் பம்பரமாக சுழன்று மேலே சொன்ன அத்துணை சாகசங்களையும் செய்கிறான் என்பது எளிதில் யாரும் செய்யாத சாகசங்களே !
பெரியவர்களே சுழற்ற பயப்படும் நீண்ட தகடுகள் இணைந்த சுருள் வீச்சு வியப்பான ஒன்று.
சிறுவனின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் அவனது தந்தை திரு.வைரவேல். ஊர் திருவிழாவில் சிலம்ப விளையாட்டை பார்த்த சிறுவன் தானும் அதுபோல் செய்து காட்டுவேன் என சொன்னான்.
பயிற்சியாளர் திரு. S.K. பொன்னுசாமி அவர்களிடம் சேர்த்து விட்டார். அவரிடம்
மூன்று வயதில் இருந்து தமிழர்களின் வீர விளையாட்டை கற்று அசத்தி வருகிறான் தொல்காப்பியன். தமிழகத்தின் பல பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி,கல்லூரிகளின் அழைப்பின் பேரில் சாகசங்களை நிகழ்த்திவருகிறான்.
சிலம்பம் மட்டுமல்ல கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் இவைகளை தனித்தனி ஆசிரியர்களிடம் கற்றுவருகிறான். கராத்தேவில் சில கட்டங்களை முடித்தால் ப்ளாக் பெல்ட் பெற்றுவிடுவான்.
”நீச்சல் மட்டும் கோவைக்கோ அல்லது ஈரோட்டிற்கோ சென்றுதான் கற்றுக் கொள்ள முடிகிறது சத்தியமங்களத்தில் அந்த வசதி இல்லை” என்கிறார் திரு. வைரவேல்.
தொல்காப்பியனின் குடும்பத்தில் யாருக்கும் இந்த கலை தெரியாது. ”இளங்கன்று பயமறியாது” என்பது போல பெரியவர்கள் செய்யத்தயங்கும் பல சாகசங்களை இச் சிறுவயதில் செய்கிறான்
எல்லா குழந்தைகளைப் போல் சுட்டிதனம் செய்கிறான், தொலைக்காட்சியில் கார்டூன் அதிகம் பார்க்கிறான், நண்பர்களுடன் விளையாட்டு, படிப்பிலும் ஆர்வமுடையவனாய் இருக்கிறான் என்பது அவன் தாய் லட்சுமி ப்ரியா தரும் ஸ்டேட்மெண்ட்.
இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் என்பதை பெற்றோர்கள் கண்டுகொள்ள வேண்டும் அதுமட்டுமல்ல அக்குழந்தையின் தனி திறமையை வெளிக்கொண்டுவரும் முழு பொறுப்பு மிக்கவர்கள் பெற்றோர்களே !.
பொதுப்பிரிவில் மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளான். அடுத்து மாநில அளவில் செல்ல தயாராகி வருகிறான்.
மாநில பள்ளி அளவிலான விளையாட்டுகளில் தகுதிபெற ஆறாம் வகுப்பில் இருந்தே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
இவனது நான்காவது வயதில் செய்த சாதனையை இப்போது செய்ய இயலாது அதாவது ஸ்கேட்டிங் கால்களில் கட்டிகொண்டு காரின் அடியில் புகுந்து வெளிவந்தது மறக்க முடியாதது என நினைவு கூறுகிறார் வைரவேல். இதை அப்போது முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செய்து காட்டினான்.
பஞ்சாப் குஜராத் மாநிலங்களில் ஆர்வமாக இந்த சிலம்ப விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசு இதுபோன்ற தனிதிறன் குழந்தைகளுக்கு உதவி அளித்தால் இன்னும் பிரகாசமாக ஜொலித்து இம்மண்ணிற்கு பெயரும் புகழும் பெற்றுத்தருவார்கள்.
சிலம்பத்தில் உலக அளவிலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம் கோவைத் தமிழன் தொல்காப்பியனை.
சிலம்பம் சில வரலாற்று தகவல்கள் :
சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு, பண்பாட்டு சின்னம், தொன்மையான தற்காப்பு கலை.
திருக்குறள்,கலிங்கத்துப்பரணி,பெரிய புராணம் இவற்றில் சிலம்ப விளையாட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. தவிரவும் ஓலைச்சுவடிகள் பல உண்டு.
சிலம்பம் ”சிலம்பல்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது சிலம்பல் என்றால் ”ஒலித்தல்” என்று பொருள்.
"பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூல் கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இதில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற பல பிரிவுகளையும் வகைகளையும் கொண்டது.
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளதாக அறிகிறோம்.
இதில் வளரி என்ற ஆயுதம் ஒரு முனையில் பிறைவடிவிலான கூரான கருவி இது போர் ஆயுதமாக தமிழ் அரசர்களும் பயன் படுத்தினர். தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி 300 அடி தொலைவில் இருக்கும் விலங்கையோ மனிதனையோ வீழ்த்தமுடியும். தமிழக அரசர்கள் பெரும்பாலானவர்களுக்கு சிலம்பம் தெரிந்திருந்தது. சின்னமருது - வளரி, ஊமைத்துரை - சுருள் பட்டா, கட்டபொம்மன் - நெடுங்கம்பு வீசுவதில் வல்லவர்கள்.
பல்லவ இளவரசர் (புத்திவர்மன்) போதிதர்மன் மூலமாக குங்பூவும் அதிலிருந்து கராத்தே’ வும் பிறந்தது. கராத்தேவில் ’கடா ’எனும் பிரிவு சிலம்பத்தில் (கதம்ப வரிசை) இருந்து எடுக்கப்பட்டது.
சிறுவனுக்கு என் வாழ்த்துகள்.. அந்த திறமைகளை ஊக்குவிக்கும் அவர் தந்தைக்கும், அதை இணையத்தின் வாயிலாக உலகுக்கு அறிவித்த உங்களுக்கும் என் சல்யூட்..!
ReplyDeleteஇப்பதிவு வெளிவந்த சமயத்தில் தொல்காப்பியன் மதுரையில் சாகச நிகழ்ச்சி நடத்த தயாராகி கொண்டிருக்கிறான். உங்கள் வாழ்த்துக்களை சேர்ப்பிக்கிறேன்.
Deleteசிறுவனின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் அவனது தந்தை திரு.வைரவேல்.
ReplyDeleteவைரமான பகிர்வுகள்.. வாழ்த்துகள்..
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம் !
Deleteசாதனச் சிறுவனை பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தொல்காப்பியனுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நம்மாலான முயற்சியாக பதிவை வெளியிட்டிருக்கிறேன். இதன் மூலமாக தொல்காப்பியனுக்கு உதவியும் ஆதரவும் கிடைத்தால் மகிழ்ச்சி!
Deleteமேலும் பல சாதனைகள் புரிய சிறுவன் தொல்காப்பியனுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்த இந்தக் காலத்தில் அவனுடைய திறனறிந்து ஊக்குவித்த அவனது தந்தைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமதுரையில் தனியார் அமைப்பு சிறுவனின் படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்திருப்பதாக அறிகிறேன்.
Deleteசிறுவனை வாழத்தி ,கல்விஇலும்சிறக்க ஆசி கள்!!!
ReplyDeleteகல்வியும் சிலம்பமும் இரு கண்களாக பாவிக்கிறான் சிறுவன். நன்றி பழனிசாமி சார்.
Deleteநமது அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒன்று, சிலம்பம் கற்றுக் கொண்டால் மனம், உடல் ஸ்டெடியாக இருக்கும்.
ReplyDeleteஉண்மைதான் ! இளமையிலேயே கற்றுகொண்டால் நல்லது தான்.
Deleteஅட...போட வைக்கிறது சிறுவனின் கலை....பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteநன்றி நண்பரே. உங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் எழில் !!
ReplyDelete