வெப்ப வாயு பாலம் எங்கே உள்ளது?
வெப்ப வாயு பாலம் (bridge of hot gas) இது ஏபெல் 399, ஏபெல் 401 [ Abell 399 (lower
centre) and Abell 401 (top left)] என்ற இரு கேலக்ஸி தொகுப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் நீளம் ஏறக்குறைய 10 மில்லியன் ஒளி ஆண்டுகள். பூமியில் இருந்து ஒரு பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ப்ளாங் விண்வெளி வானிலை ஆய்வுக்கூடம் (Planck space observatory ) மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது.
காஸ்மிக் பிசாசு
பூமியில் இருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், பால்வெளியின் வட திசையில் (Cepheus )செபையஸ் தொகுப்பில் தோன்றும் ஒளி வெள்ளம் காஸ்மிக் பிசாசு [ cosmic ghost ]என அழைக்கப்படுகிறது.
நிலவிலிருந்து விண்வெளி ஓடத்திற்கு செல்லும் கதிர்
இது ஒது அதிசய நிகழ்வு புகைப்படமாக கருதப்படுகிறது. 2001 அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட போது முழு பெளர்ணமி தினத்தில் சூரியனின் கதிர்கள் நிலவின் மேல் விழ நிலாவின் நிழலானது நேரடியாக விண்கலத்தை குறிவைப்பது போல தோற்றம் அளித்தது.
புதன் கோளில் தண்ணீரா ?
புதன் கோளில் தண்ணீர் இருப்பதற்காண ஆதாரம் ”நாசா”வால் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் மெசேஞ்சர் ஸ்பேஸ்கிராப்டால் எடுக்கப்பட்டது. புதனின் வட கோளார்த்ததில் தண்ணீர் ஐஸ் கட்டி வடிவில் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. வால்நட்சத்திரத்தின் ஐஸ் கட்டிகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புதன் மீது மோதியதால் பாறைகளுக்கிடையில் வேதியியல் மாற்றத்தினால் உறைபனி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும். படத்தில் மஞ்சள் வண்ணத்தில் இருப்பவை உறைபனி எச்சங்கள்.
நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டரால் (Neutron Spectrometer ) இதை உறுதி செய்ய முடிகிறது என்கிறார் விஞ்ஞானி டேவிட் லாரன்ஸ்.
செவ்வாய்க்கு செல்ல 1000 பேருக்கு ஒன்வே டிக்கட் !
நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜெரார்ட் ஹாப்ட்
[Gerard ‘t Hooft ] மற்றும் இவரது குழுவினர் [Dutch entrepreneur
Bas Lansdorp ] திட்ட வரைவு தயாரித்து உள்ளனர். இத் திட்டத்தின் படி வரும் 2023 ல் முதலில் நான்கு பேர் செவ்வாயில் தரையிரங்க போகிறார்கள். செவ்வாயிற்கு செல்ல 1000 பேர் ஒன்வே டிக்கெட் டச்சு மார்ஸ் ஆர்கணைசேசன் மூலமாக முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீங்க தயாரா ?
இது பால்வெளிக்கு வெகுஅருகாமையில் இருக்கும் பெரிய கேலக்ஸி ஆன்ரோமிடா கேலக்ஸி இதில் 600 நட்சத்திர தொகுப்பு (star cluster) கண்டறியப்பட்டுள்ளதாகவும் இன்னும் 1900 வெயிடிங் லிஸ்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஒரு தொகுப்பிலேயே எக்கச்ச்ச்சக்க நட்சத்திரங்கள் இருக்கு)
2010 முதல் ஹப்பில் தொலை நோக்கி மூலமாக 3 பில்லியன் இமேஜ்கள் சேகரிச்சு இருக்காங்க. இவற்றை ஆராய்ச்சி செய்ய www.andromedaproject.org என்ற தளத்தில் இது குறித்து ஆர்வமுடைய சேவை மனப்பான்மையுள்ளவர்களை தேடுகிறார்கள்.
தொடர்புடைய பதிவுகள்
பிரபஞ்சம் அறிவோம் : கேலக்ஸிகள் பற்றிய சில தகவல்கள்
பிரபஞ்சம் அறிவோம் : நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்
செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்
அறிய தகவல்
ReplyDeleteஅருமையான கோர்வை
புகை படம் தெளிவு
வாழ்த்துக்கள் நண்பா
நன்றி! நன்றி!! நன்றி!!! :)
Deleteஅருமையான அறிந்திராத தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபிர்லா கோளரங்கம் போய் வந்த அனுபவம் கிடைத்தது..
ReplyDelete
ReplyDelete\\இது ஒது அதிசய நிகழ்வு புகைப்படமாக கருதப்படுகிறது. 2001 அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட போது முழு பெளர்ணமி தினத்தில் சூரியனின் கதிர்கள் நிலவின் மேல் விழ நிலாவின் நிழலானது நேரடியாக சாட்டிலைட்டை குறிவைப்பது போல தோற்றம் அளித்தது.\\ இது photo shop பில் செய்ததாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நிழவின் நிழல் பவுர்ணமியன்று பூமியின் பக்கம் வராது, அப்படியே வந்தாலும் நிழல் கர்ப்பாகத்தான் இருக்கும், நீல வண்ணத்தில் இருக்காது. அட்லாண்டிஸ் ஓடத்தில் மனிதர்கள்தான் செல்வார்கள், சேட்டிலைட் அல்ல. சீரியஸ் அறிவியல் பதிவுகளில் இது போன்ற தகவல்களைத் தரும் பொது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
\\செவ்வாயிற்கு செல்ல 1000 பேர் ஒன்வே டிக்கெட் டச்சு மார்ஸ் ஆர்கணைசேசன் மூலமாக முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\\ ஒன்வே டிக்கெட் என்றால் திரும்ப வர மாட்டார்களா?!!
வாங்க ஜெயதேவ் சார், இதில கிராப்பிக்ஸ் இல்லை என்று தான் சொல்கிறார்கள். ப்யூர் போட்டோ கோ -இன்சிடென்ஸாமா அப்புரம் , அந்தி மாலை நேரத்தில் சூரியகதிர்கள் நிலவின் மேல் பட்டு நிழல் விழுந்திருக்கிறது
Deleteராக்கெட்டின் புகை வாயுவின் லீலையினால் இப்படி டார்ச்சு அடிச்சமாதிரி தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
ஒன்வே டிக்கட்டுன்னும் தெரிஞ்சும் ஆயிரம் பேர் புக் செஞ்சிருக்காங்கலே !
ஸட்டில் என்பதற்கு சாட்டிலைட்டுன்னு போட்டிடேன் விண்கலம்னு இப்ப மாத்திட்டேன் ஓ.கே வா.