புத்தக வெளியீட்டில் நடந்தது என்ன ? இந்த மாதிரி தலைப்பு வைப்பது மூத்த பதிவர்களிடம் கற்றுக் கொண்டது தான்.
இந்த தலைப்பிற்கு வருகிறேன். நிகழ்ச்சி எப்படி எப்படி நடைபெறவேண்டும் என்று முடிவான பின் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி எப்படியும் சிறப்பாக நடக்கும் என்பதில் நம்பிக்கை இருந்தது.
இனிய மாலை வேளை கடந்த ஞாயிறு பிப்ரவரி 3ஆம் நாள் கோவை ராம் நகரில் உள்ள மங்களா இண்டர்நேசனல் a/c அரங்கில் வெளி நபர்களின் தொந்தரவு ஏதுமின்றி சிறப்பாக நடந்து முடிந்தது.
அகிலா அவர்களின் சின்னச் சின்ன சிதறல்கள் புத்தகத்தை திரு .கண்ணன் கனகராஜ் அவர்கள் வெளியிட ஈர நெஞ்சம் மகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கோவை மு.சரளாதேவி அவர்களின் மௌனத்தின் இரைச்சல் புத்தகத்தை கோவை திரு ஞானி வெளியிட ஆனந்தம் இதழின் ஆசிரியர் திரு .ஆனந்த் அவர்கள்.
திரு .ஜீவானந்தம் அவர்களின் கோவை நேரம் புத்தகத்தை திரு .ஓஸோ. ராஜேந்திரன் அவர்கள் வெளியிட சூழல் ஆர்வலர் திரு . யோக நாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
கோவையில் இருந்து வெளிவரும் இதழ் “ஆனந்தம்” இதன் ஆசிரியர் திரு. ஆனந்த் அவர்கள் ”மெளனத்தின் இரைச்சல்” புத்தகம் கோவை திரு.ஞானி அவர்களிடம் பெற்றுக்கொண்டு ஆற்றிய உரை.
கோவை பதிப்பாளர்களின் முதல் புத்தகங்கள் கால்பதித்ததற்கு என் வாழ்த்துக்கள்.
தமிழ் நாட்டை பொருத்தளவு கோவையில் இருந்து நிறைய புத்தகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த உருவாக்கம் நிறைய நபர்களுக்கு சென்று சேர்வதே இல்லை. முதல் பதிப்பே ஒரு வித்தியாசமான முறையில் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.
இவ்வுலகத்தில் யாராக இருந்தாலும் சித்தர்களாக இருந்தாலும், புத்தனாக இருந்தாலும், அவர்கள் தேடுவது மெளனம் மட்டுமே. தேடும் மெளனம் வெளியே இல்லை உள்ளேதான் இருக்கிறது என்பதை கண்டுதெரிவித்தார்கள். அப்படி ஒரு தேடல் தான் கோவை மு.சரளாவின் “மெளனத்தில் தோன்றிய கவிதை மிகச்சிறப்பாக புத்தக வடிவில் வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் (மெளனத்தின் சிதறல்கள் )
பெண்கள் என்றால் “சக்தி” என்று நாம் அனைவரும் சொல்வோம். இடைப்பட்ட காலத்தில் நடந்த பல வித போராட்டங்களால் அந்த ச க் தி என்ற வார்த்தையில் இருந்த புள்ளி மறைந்து ச க தி என்றாகி விட்டது. இந்த மாதிரி பெருங் கவிஞர்கள் உங்கள் கால் பதிப்புகளை புத்தகங்களாகவும், சமூக ஆர்வளர்களாகவும், வெளியே வர,வெளியே வர... நீங்கள் வைக்கும் ஒவ்வொரு துளியும் அந்த சகதியை சக்தியாக மாற்றும் அந்த சக்தி அனைவருக்கும் மிகப்பெரிய முன்னேற்றத்தை உருவாக்கும் என்பதில் ஒரு துளி ஐயமும் இல்லை.
இந்த வாய்ப்பிற்கும் நன்றி உங்கள் முயற்சியும் தொடரட்டும் அதற்கான பயிற்சியும் தொடரட்டும். விழாவை சிறப்புற நடத்தி என்னை அழைத்த மறைமுகமான நேரிடையான நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி.
நமது பாதிப்பை வாசிப்பாக மாற்றினாலும் இன்னும் பல கவிஞர்கள் நம் ஊரிலும் விதைபோன்று முளைப்பார்கள். இது போன்ற விதையை நமது கவிஞர்கள் மூலமாக விதைத்துவிட்டார்கள்.
விதை விதைத்தவன் உறங்களாம் விதை உறங்காது அதுபோல் நீங்கள் இன்று விதைத்த விதை உறங்காது அது மிகப்பெரும் மரமாக மாறும்.
இந்த மூன்று புத்தகங்கள் மூன்று ஆப்பிள் பழங்களை போல் உள்ளன. ஒவ்வொரு ஆப்பிளிலும் சில விதைகள் உள்ளன ஆனால் ஒவ்வொரு விதையிலும் எவ்வளவு ஆப்பில் மரங்கள் உள்ளன என்பதை ஒருவரும் அறிய முடியாது. நீங்கள் விதைத்தது மட்டுமின்றி அறுவடை செய்து அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றியுள்ளீர்கள்.
ஆனந்தம் என்றென்றும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
திரு ஞானி அவர்களின் கனீரென்ற பேச்சுகளை கேட்டிருந்தாலும் நேரில் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் அவரிடம் கைகுலுக்கும் போது ஏற்பட்ட ஸ்பரிசம் என் தந்தையின் நினைவலைகள் என் கண்முன் வந்து சென்றது ஏன் ? தெரியவில்லை.
திரு. கோவை ஞானி அவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்
அதிகார வர்க்கமாகட்டும் அரசியலாகட்டும் நாம் சமூகத்தில் சந்திக்கும் பலவும் நம்மனதில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இந்த தாக்குதலை உற்று நோக்கும் ஒரு கவிஞன் தன் மன அழுத்தங்களை மெளனத்தின் இரச்சலாக கேட்கிறான் இங்கு கவிதாயினி கோவை மு.சரளா அவற்றை தன் சில கவிதைகளில் கருப் பொருளாக கொண்டு நுட்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இம்மாதிரி சொற்களின் நுட்பங்களை அறிந்திருப்பது அவசியம். அத்தகைய தமிழின் வளர்ச்சிக்கு சரளாவின் எழுத்தின் போக்கு அமைந்திருக்கிறது.
எந்த ஒரு கவிதையும் தாம் வாழக்கூடிய சமூகத்தின் மீது அக்கரை கொண்டதாக இருக்க வேண்டும். சாதிக் கொடுமைகள் மலிந்துருக்ககூடிய சமூகம் நம் சமூகம். பெண்ணை இழிவு படுத்தக்கூடிய சமூகம். ஆணாதிக்க திமிர் மலிந்து வரக்கூடிய சமூகம். இது எந்த ஒரு கவிஞனையும் ஈர்த்து விடமுடியாது. இவற்றை எதிர்த்தே தன் கருத்துக்களை எழுதுவான்.
சரளாவின் பல கவிதைகள் இவற்றை செவ்வனே சொல்கிறது.
தம்மையே காக்க முடியாத கடவுள் என்று சரளா தன் ஒரு கவிதையில் ( அது சாய்ந்த கோபுரங்கள் ) சாடுகிறார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையின் கூறு தமிழை பற்றி பாடும் போது தெரிகிறது. தமிழை தாய் தெய்வம் என்று பல இலக்கியங்களில் போற்றப்படுகிறது. பெருமை பெற்ற இந்த மொழி இன்றைக்கு நம்மவர்களால், அரசால, கல்வி நிலையங்களால, நிர்வாகங்களாக கவனிக்கப்படுவது இல்லை. இப்படி பல சிறப்புகளை பெற்ற மொழியை
மாபெரும் தமிழர்களான நாமே கை விடுகிறோமே என்ற வருத்தம் அவரின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளில் வெளிப்படுகிறது.
இந்த கவிதைகளை படிக்கும் போது யார் நெஞ்சமும் குமுறும்.
அழகிய நடையில் இந்த காலத்திற்கு ஒத்த முறையில் மிக தெளிவான அழகிய நடையில் தேவையான பொருள் சுவையோடு, எந்த குறையையும் காண முடியாத வகையில் சிறப்பாக இருக்கிறது.
இவரோடு கூட புத்தகங்களை வெளியிட்டிருக்கும் நண்பர்களுக்கும் என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
(எப்படி இவர் இவ்வளவு விசயங்களை கிரகித்து மடைதிறந்த வெள்ளமென பொங்கிப்பாயும் சொற் பிரயோகங்களை கையாள்கிறார் என்பது பெரும் வியப்பே ! இவரது பேச்சை கேட்க முடியாதவர்களுக்காக இங்கே சில வற்றை மட்டுமே ஆவணப்படுத்தியுள்ளேன். பதிவர்கள் என்றாலே ஆவணப்படுத்துபவர்கள் தானே.)
சிலர் சிறந்த பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள்..சிறந்த வலைப்பதிவர்களாகவும் இருக்கிறார் என்னை பொருத்தளவு நான் ஒரு சாதாரண பதிவர் மட்டுமே. என்னை இந்த விழாவின் சிறப்பு பேச்சாளராக போட்டு விட்டார்கள். என்ன செய்வது பேசித்தானே ஆக வேண்டும்.
எனது பேச்சிலிருந்து...
பேருந்து, ரயில் பயணங்களின் போது மூன்றாவது ஆள் திருவாளர் பொது ஜனம் நாம பேசுவதற்கு இடையில் புகுந்து கொள்வார்.
ஒரு நாள் வலைத்தளம் பற்றி பேசிக்கிட்டு இருந்த போது பொது ஜனம் உள்ள புகுந்தார்.
“அண்ணே அதுல எத்தனை மாடி இருக்கு ? “
அது பில்டிங் இல்ல பிளாக்குன்னு சொன்னதும் “ அதான் எனக்கு தெரியுமே “ ன்னார்.
அடுத்து முகப் புத்தகம்..கீச்சு பத்தி பேச்சு வந்தது.
”இது எந்த கடையில கிடைக்குது “ ன்னு கேட்டார்.
Face book, twitter ன்னு சொன்னது என்ன சொல்லியிருப்பார்...
“அதான் எனக்கு தெரியுமே “
இப்படித்தான் பல பேர் தமக்கு தெரியாது என்பதை ஒத்துக்கொள்வதே இல்லை.
நாம எழுதும் வலைப்பதிவுகளை புத்தகமாக கொண்டுவர முடியுமா?
இந்த கேள்விக்கு சாட்சியாய் நம் நண்பர்கள் அகிலா, சரளா, ஜீவா முத்தான மூன்று புத்தகங்களை முனைப்போடு நம்முன்னே கொண்டுவந்துள்ளனர்.
இந்த சமூகத்தில் பெண்களின் பல முகங்களையும், பரிமாணங்களையும் நம் முன் படம் பிடித்து காட்டுகிறது “ சின்ன சின்ன சிதறல்கள்”
இந்த சமூகம் பெண்ணான தம்மீது திணிக்கும் பல வித எண்ணத் தாக்குதல்களை “ சொல் “ எனும் சாட்டையால் சுழற்றியடிக்கிறது “ மெளனத்தின் இரைச்சல்”
இந்த சமூகம் மறந்து போன பல இடங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் ஞாபகப் படுத்தி நம்மோடு உரையாடுகிறது “ கோவை நேரம்”
பத்திரிக்கை, தொலைக்காட்சி இவற்றிற்கு அடுத்து இணைய தளங்கள் வழுவான ஊடகமாக இருக்கிறது.
கட்டற்ற கலைகளஞ்சியமாக திகழ்கிறது.
கோவை வலைப்பதிவு நண்பர்கள் அமைப்பு இளைய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க ஆர்வமாக இருக்கிறது. இதற்காக தமிழார்வம் மிக்கவர்களை வலைத்தளம் துவங்கவும், அவர்களின் படைப்புகளை “ கோவை வலைப்பதிவர் பிரசுரத்தின்” மூலமாக புத்தகமாக வெளிக்கொண்டுவர ஆதரவு அளிக்கும்.
விவசாயி பயிர் வளர்க்கிறான், எழுத்தாளன் எண்ணங்களை விதைக்கிறான் வளர்க்கிறான்... என்று சொல்லி முடிதேன்.
(ஏதோ புட் பாய்சன் போல உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாட்களாக வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை. அதனாலேயே இந்த பதிவை சற்று தாமதமாக எழுதியிருக்கிறேன். இன்னும் சில சந்தோச தருணங்களை பின்னர் பகிர்கிறேன்)

இருவருக்கும் இடையில் பவ்யமாக பின்னால் நிற்பவர் நண்பர் ஜீவானந்தம்.

கோவை ஞானியும், தினமலர் குமார் அவர்களும்
கோவை கவிஞர் அவை நாயகன், சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு யோக நாதன்,கோவை ஞானி, தினமலர் குமார் அவர்கள்...

இது தான் ஆரம்பமே... மேலும் தொடரட்டும்...
ReplyDeleteசகதியை சக்தியாக - இது போல் பல இடங்களில் ஒவ்வொரு வார்த்தைகளையும் பிழைகள் இன்றி கவனித்து இருக்கலாம்...
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்...
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. புத்தக வெளியீட்டின் செயல் பாடு இன்னும் தொடர்கிறது. இம்மாதத்தில் மற்றுமொரு பாராட்டுவிழா புத்தக எழுத்தாளர்களுக்காக கோவை இலக்கிய நண்பர்களால் நடத்த பட இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் விரைவில் தெரிவிக்கப்படும்.
Deleteநேரமின்மை காரணமாக முழுமையாக விழா குறித்து எழுத இயலவில்லை ஆகவே புகைபடங்களை மட்டுமே எண்கள் தலத்தில் பதிவு செய்தோம் ஆனால் நிகழ்ச்சி பற்றிய ஆழ்ந்த உரைகளை அருமையாக அச்சு பிறழாமல் கொடுத்த உங்களுக்கு என் முதல் நன்றி புத்தகம் வெளியிட்ட எங்களை விட அதிக ஆர்வமுடன் அதை வெளிபடுத்த நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எங்களை மெய் சிலிர்க்க வைத்தது மேலும் உங்களோடு இணைந்து செயலாற்றிய நண்பர் பாஸ்கரன (உலக சினிமா ) மற்றும் தோழி எழில் ஆகியோருக்கும் நன்றியை கூறிகொண்டே இருக்கிறது மனம் ஓயாமல் இந்த விதைகள் பெரும் காடாக நிச்சயம் மாறும் என்பதில் ஐயம் இல்லை ...........விழாவில் உங்கள் உரை சிறப்பாக இருந்தது சிந்திக்க வைத்தது நன்றி கலாகுமரன்
ReplyDeleteஅணில் போல எம்மாலான சிறு உதவியே செய்து வருகிறேம். நண்பர்களுக்காக இது கூட செய்யாவிட்டால்...தனபாலன் அவர்கள் சொன்னது போல் இது நல்ல ஆரம்பமே.
Delete