குழந்தைகள் பெரியவங்க போல நடந்துகொள்வதை பார்க்கிறோம். வீட்டிலுல்ல பாட்டிகள் குழந்தையின் நடவடிக்கையை பார்த்து இவன் தாத்தா மாதிரியே நடந்துகிறான் ! என்றோ...அப்பன் புத்தி தப்பாம பிறந்திருக்கு ! இப்படி பட்ட பேச்சுகளை கேட்டிருக்கலாம்.
இம்மாதிரி பழக்கங்களை நாம் பரம்பரை பழக்கம் என்றோ பரம்பரை நினைவு என்றோ சொல்லலாம்.
அப்படியானால் நம்மூதாதையிடமிருந்து நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் சில பழக்கங்கள் தொத்திக்கொள்கிறது.
பசி, பாலுணர்வு, தற்காப்பு இவை முக்கியமான முதன்மையான உள் உணர்வுகள் எனலாம். அதைலும் பல வரையறைகள் உண்டு. உதாரணமா தற்காப்பு என்பதில் சண்டையிடும் குணம், தான் தனது,பாதுகாப்பு.. இப்படி பல பிரிவு இருக்கு.
அந்த மனோபாவம் ஏற்படக்காரணம் உள்ளுணர்வு. உள் உணர்வு மரபணுக்கள் (ஜீன்கள்) மூலமாக பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது.
”உள்ளுணர்வு உணர்ச்சி செயல்களிலிருந்தும் உணர்ச்சிகளில் இருந்தும் தனித்து பிரிக்க முடியாதது “ என்று சொல்கிறார்கள்.
சில விசயங்கள் நமக்கு போதிக்கபட வில்லை என்றாலும் இந்த உள்ளுணர்வின் பேச்சை சில சமயங்களில் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
உடல் உறுப்பு சம்பந்தமான உள் உணர்வுகள் நம்மைவிடவும் விலங்குகளிடம் அதிகம். நம்மிடம் பல சமயங்களிலும் பகுத்தறிவு என்பது அந்த உள் உணர்வை தடுத்துவிடும். விலங்குகளில் அப்படி இல்லை.
முட்டையில் இருந்து கோழி குஞ்சு வெளிவந்ததும் நடக்க கற்றுக் கொள்கிறது,ஓடுகிறது, குப்பையை கிளருகிறது.
குளவி கூட்டை கட்டிக்கொள்வது எப்படி? அப்படி கூட்டை கட்டிய குளவி முட்டையோடு (கூட்டுபுழு) சேர்த்து மயக்கமடைய செய்த புழுவையும் வைத்து மூடிவிடுகிறது. முட்டையில் இருந்து வளரும் குஞ்சிற்கான ஆகாரம் புழு தயாராக இருக்கிறது. அது பறக்கும் நிலையை அடையும் வரை அந்த புழுதான் உணவு.
சில காட்டு முயல்கள் அறுங்கோண வடிவில் குழிகளை தோண்டி வசிக்கிறது.
தூக்கணாங்குருவியும், ஊர் குருவியும் ஒன்றுபோல் கூட்டை கட்டுவதில்லை.
தேனீ சீரான அறுங்கோண வடிவ அறைகளை கொண்ட கூட்டை அமைக்கிறது.
மனிதன் மிருகமாக நடந்து கொள்கிறான் என்றால்..அவனுள் இருக்கும் உணர்ச்சி மட்டுமே வேலை செய்கிறது. (மூதாதையர் விலங்குபோல் வாழ்ந்த காட்டுவாசிதானே !) அப்போது பகுத்தறிவு வேலை செய்வதில்லை.
விலங்குகளுக்கு மனிதனை போன்ற பகுத்தறிவு இல்லை அது தன் மூதாதையரை போன்றே நடந்து கொள்கின்றன (பார்க்கப்போனால் அது மனிதனைவிடவும் மனிதாபிமானம் மிக்கது) எல்லாமே ஜீன் செய்யும் வேலை!
நாயின் உறங்கும் நடவடிக்கையை கவனித்திருபீர்கள். ஒரு சுற்று சுற்றிவிட்டே படுக்கிறது. இது காட்டில் இருந்த காலத்தில் அதன் மூதாதையிடமிருந்து பெற்ற பாதுகாப்பு பழக்கம். (அப்ப கம்பத்தை கண்டா ? ன்னு கேட்காதீங்க)
நம் உள்ளுணர்வை சில சமயங்களில் நாய் உணர்ந்து கொள்கிறது அதன் படி நடப்பதையும் கவனித்திருக்கலாம். (அதனால் தானோ வீட்டம்மாவை விடவும் /விட்டுகாரரைவிடவும் அவர்களோட பெட் அவங்களுக்கு பிடிச்சிருக்கா ? )
இந்த காணொளியில் கொட்டையை உடைக்க கற்றுக்கொண்ட குரங்கு (brown capuchin) ( பரிணாம வளர்ச்சிக்கொரு ஆதாரம்)
உள்ளுணர்வு பற்றி இன்னும்...தொடர்கிறேன்...
தொடர்புடைய பதிவு :
உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு
/// நம் உள்ளுணர்வை சில சமயங்களில் நாய் உணர்ந்து கொள்கிறது ///
ReplyDeleteஉண்மை... உணர்ந்துள்ளேன்...
மேலும் தொடர வாழ்த்துக்கள்...
நன்றிங்க தனபாலன்!
DeleteMutrilum unmai...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteகுமரன் சார்,
ReplyDeleteபரிணாம வளர்ச்சிகள் "எல்லாமே விட்ட குறை தொட்ட குறை தான் "
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
நன்றி சக்தி !
Deleteநம்மூதாதையிடமிருந்து நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மிடம் சில பழக்கங்கள் தொத்திக்கொள்கிறது.//
ReplyDeleteஉண்மைதான் கலாசாரமும் மொழியும்கூட இப்படி வந்தது தானே
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பூவிழி !
Deleteநம் உள்ளுணர்வை சில சமயங்களில் நாய் உணர்ந்து கொள்கிறது அதன் படி நடப்பதையும் கவனித்திருக்கலாம்.
ReplyDeleteபூகம்பம் ,சுனாமி , கிரஹணங்கள் , மழை போன்ற இயற்கை மாற்றங்கள் , சீற்றங்களை பறவைகளும் விலங்குகளும் உணர்ந்து தற்காத்துக்கொள்கின்றன ..
அந்த ஆற்றல் மனிதனுக்கு மிகக்குறைவு ...
மிக மிக சரி. இந்த விசயத்தில் மனிதன் பின் தங்கியவன் தான்.
Delete