பூஞ்சைகள் (பூஞ்சானங்கள்) இந்த பூமியில் பில்லியன் (1ஒன்றுக்கு அடுத்து 9 பூஜ்ஜியங்கள்) ஆண்டுகளாக காலனி ஆதிக்கம் செய்து வருகின்றன.இதில் ஈஸ்ட் மற்றும் பாசிகள், காளான்களை உருவாக்கும் மேக்ரோ பூஞ்சைகளும் அடக்கம். இதன் பங்களிப்பு அழுகியவற்றை மக்கச்செய்வது. அதுமட்டுமல்ல மைசீலியா எனும் நுண்ணிய இழைகளில் இருந்து கசியும் என்சைம்களாலும், அமிலங்களாலும் பாறைகளில் உள்ள சத்துக்களானது; மிக நுண்ணிய சிதைவுற்று அதிலிருந்து சத்துக்கள் பிரிக்கப்பட்டு மண்ணில் கலக்கின்றன. நிலத்தின் உயிர்ச்சத்துக்கள் பூஞ்சைகளாலேயே உருவாக்கப்படுகின்றன.
காளான்கள் ஒட்டுண்ணிகள் அல்லது சாறுண்ணிகள் என்ற வகையின் கீழ் வகைபடுத்தப்படுகிறது.
அக்காலத்தில் ”அமெடு” (amadou) என்பது முதல் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பூஞ்சை காலான் இதைகொண்டு வெட்டுக்காயங்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். (ஹிப்போகிராட்ஸ் (hippocrates காலம் கி.மு 450) குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது ).
ஒரு காலானின் மைசீலியம் எனும் மிக நுண்ணிய வேர் இழைகளை எலக்ட்ரான் உருப்பெருக்கி மூலமாக காணும்போது அவை மனித மூளைசெல்களை ஒத்து இருப்பவை போல தோற்றம் தருகின்றன. (காண்க படம்)
மைசீலியம் சுற்றுப்புறத்தில் இருக்கும் சத்துக்களுக்கு தக்கவாறு தமது வளர்ச்சியை, மற்றும் குண நலன்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் வளர்கிறது. இந்த செய்கை ஆங்கிலத்தில் ”செல்லுலார் இண்டெலிஜெண்ட்” என குறிப்பிடப்படுகிறது.
மைகோரிஜல் (mycorrhizal) எனும் பூஞ்சை வகையானது தாவர வேர்களில் வளர்ந்து தங்களுக்கு தேவையான சக்கரைசத்தை பெற்று நிலத்தில் இருந்து நைட்ரஜன் மற்றும் நீர்சத்து உப்புக்களையும் வேர்களுக்கு அளிக்கின்றன.
Pioppino mushrooms (agrocybe agegerita)
சக்கரை நோய் மற்றும் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு பியோபினோ காலான்களில் மருந்து தயாரித்து கொடுக்கப்பட்டதில் பயனளித்திருக்கிறது.
ஈஸ்டுகள் (yeasts) ஒற்றை செல் (யுனிசெல்லுலார்) உடையவை. கண்ணுக்கு தெரியாத ஸ்போர்ஸ் (விதைகள்) மூலமாக சாதகமான ஈரப்பதமும் வெப்பமும் கிடைக்கும்போது பூஞ்சைகள் அல்லது பூஞ்சானங்கள் மைசீலியா எனும் மிக நுண்ணிய வேர் இழைகள் தரையில் ஊடுருவி படர்ந்து வளர்கின்றன.
ஈஸ்டுகள் இல்லை என்றால் தயிர்,ரொட்டி, வெண்னை,கேக்குகள் பியர்,வைன் ஏன் தோசை,இட்லி கூட இல்லை தான்.
மைசீலியா(mycelia) மற்றும் ஸ்போர்கள் (spores) மண் மற்றும் பாறைகளில் இருந்து உயிர் சத்துக்கள் வெளிவரவும் உயிர்ச்சூழல் நிலவவும் முக்கிய காரணிகள். (மைசீலியத்தில் இருந்து கசியும் என்சைம்கள் மற்றும் அமிலங்கள் இதை செய்கிறது)
1929 அலெக்ஸாண்டர் பிளமிங் எதிர்பாராமல் கண்டுபிடித்த மருந்து பென்ஸிலின் பூஞ்சையில் இருந்துதான்.
காளான்களால் எப்படி உலகை காப்பாற்ற உதவ முடியும்?
அமெரிக்காவைச்சேர்ந்த(சேலம்) பால் ஸ்டமெட் (Paul Stamet) என்பவர் ஒரு பூஞ்சை ஆராய்சியாளர் (mycologist ) காலான் மற்றும் பூஞ்சைகள் குறித்த ஆராய்சி மேற்கொண்டு மைசீலியம் ரன்னிங் (mycelium Running) எனும் புத்தகத்தை 2005 ல் வெளியிட்டு உள்ளார். இந்த புத்தகம் உலகை காப்பாற்றுவதில் காலான்களின் பங்கு என்ன என்பதை பற்றி விரிவான தகவல்களை தருகிறது. (இன்னொரு புத்தகம் mushroom cultivator)
வாஸிங்டனில் பண்ணை (20 ஏக்கர்) அமைத்து கடல் கடந்து காளான்கள் வியாபாரம் செய்து வருகிறார் அது மட்டுமல்ல மைக்ரோ டெக்னாலஜிஸ்டுகளை கொண்டு காளான்கள் பற்றி விரிவான பல ஆராய்சிகளும் செய்து வருகிறார்.
அதில் முக்கியமான ஒன்று அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட நிலங்களைக்கூட காளான் மற்றும் பூஞ்சைகளால் கதிர்வீச்சின் தாக்கத்தை முற்றிலும் குறைக்க முடியும்; நீக்க முடியும் என்கிறார். ஜப்பானில் இது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது.
மனிதர்களுக்கு தீங்கு இல்லாத பூச்சி கொல்லியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்,ஸ்டமெட். சில வகை பூஞ்சானங்கள் ஸ்போர்கள் மூலமாக பூச்சிகளை அழிக்கிறது. (இது ஒருவகையான எதிர்ப்பு சக்தி) அப்படிப்பட்ட பூஞ்சானம் ஒன்று மெடரிஜியம் அனிசோபைல் (metarhizium anisopliae). இந்த பூஞ்சானங்களை அரிசியில் வளரவிட்டு ஆய்வு செய்தார். இது எறும்புகள் மற்றும் கரையான்களை கொல்கிறது.
பெட்ரோலியம் உண்ணும் காளான்கள்:
"வைட் ராட்” எனும் வெண் பூஞ்சை காளான்கள் (Pleurotus chrysoporium) பெட்ரோலியக் கழிவுகளில் உள்ள சிக்கலான ஹைட்ரோ கார்பன்களை நியூட்ரியஸ் கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றுகிறது. இந்த வகை காளான்களை கொண்டு எண்ணெய் நில மாசுக்களை குறைத்து பின் நீக்கமுடியும்.
கழிவு நீர் காளான்கள்:
மைசிலியல் கழிவுநீர் (mycelial wasterwater) சோதனையில் ஸ்ட்ரோபரியா (stropharia) எனும் காளான் வகை பரிசோதிக்கப்பட்டதில் இதை வளர்ப்பதால் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும் பாக்டீரியல் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.
மைகோரெஸ்டோரேஸன் வளர்ப்பு கூடத்தில் வளர்க்கப்படும் ”சிங்க தாடி” காளான்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு (உண்மையில் இது நோய் அல்ல !) மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் (antioxidants) தாயாரிக்க காளான்கள் பயன்படுகின்றன சில உதாரணங்கள்
மருந்து - காளான் வகை
கேனோமைசின் (ganomycin) - ரெய்ஷி
காம்பஸ்ரிடின் (campestrin) - மெடோ
கால்வாஷின் (calvacin) - ஜெயண்ட்
பறவை காய்சல் (H5N1 - bird flu), பன்றி காய்சல்களுக்கு(H1N1 - swine flu) காளான்களில் இருந்து மருந்து தயாரிக்கலாம்.
83 வயதான ஸ்டமெடின் தாய், மார்பு புற்று நோயால் தாக்கப்பட்டார்( stage IV) வழக்கமான மருந்துகளுடன் துருக்கி டெயில் காலானில் செய்யப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதில் குணமடைந்தார் என்பது வியப்பான விசயம். இந்த மருந்து வணிக பயன்பாட்டிற்கு வந்தால் அனேகம் பேர் பயன் அடைவார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட புக்குஷிமாவில் ரோடியோ ஆக்டிவ் ஐசோடோபுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மைகோரிஜல் பூஞ்சையை வளர்த்துதல் பயனளிக்கும் என்கிறார்கள். (nuclear forest recovery Zone ) நியூக்ளியர் காடு மீட்பு எனும் இந்த திட்டம் கடந்த ஆண்டுமுதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
எதிர்கால காளான் /பூஞ்சை வளர்ப்பு மற்றும் ஆய்வுகள் விரிவடையும் துறைகள்:
Environmental cleanup பெட்ரோ கெமிகலால் பாதிக்கப்பட்ட ரேடியேஷன் பாதிப்பு அடைந்த நிலம் மற்றும் நீர்
Waste water filtration சாயம் மற்றும் மருத்துவ கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் மாசை நீக்குதல்.
Pesticides உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் பாதிப்படைந்த நில மாசு நீக்கம்.
Medicines மருத்துவ ஆராய்சி நோய் எதிர்ப்பு மருந்துகள், சிமோதெரப்பி, வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.
Forestry காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் காளான்கள் மூலமாக நில மேம்பாடு பின் துரித மரவளர்பு
Agriculture கெமிக்கல் மருந்துகளை ஒழித்து மைகோர்ஜியல் பூஞ்சைகள் மூலமாக நிலமேம்பாடு மற்றும் புஞ்சை காளான் இயற்கை உரம்.
Biofuel காளான்களை கொண்டு பயோ எரிபொருள்
விண்வெளி பயணத்தில், விண்வெளி ஆய்வு கூட சோதனை, ரேடியேஷனை தாங்கும் பூஞ்சைகள், மண் வளப்படுத்த இப்படி பயன் படுத்தப்பட இருக்கிறது.
காளான் (mushroom)ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் புது வார்த்தைகள்:
mycorestoration, mycofiltration,mycoremediation, mycoforestry, mycopesticides
இரு வருடங்களுக்கு முன் இருந்த காளான் விலை இன்று மூன்று மடங்கு ஏறி விட்டது... சர்க்கரை குறைபாடு உள்ளவர்களும்....!!
ReplyDeleteவிரிவான விளக்கங்களுக்கு நன்றி...
இன்றைக்கு எல்லாமே விலை உயர்ந்து விட்டது ...ஆசியாவில் சக்கரை நோய் அதிகரித்து வருகிறது உணவு முறையும் ஒரு காரணம். நன்றிங்க !
Deleteஅருமையான தகவல்கள் ... மிக்க நன்றி கலாகுமரன்...
ReplyDeleteமைக்ரோ பயாலஜி படிக்கிறவர்கள், காளான் வளர்ப்பில் ஈடு படுபவர்கள், காளான் பற்றிய ஆய்வை இங்கேயும் செய்யனும் என்பதே என் விருப்பமும்.
Deletegreat post thanks for sharing
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அருள்.
Delete