மதுரை...பல பெருமைகளுக்கு உரித்தான இந்த மண் ஒவ்வொரு வகையிலும் தமிழனின் பெருமையை, உணர்வை ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்து கொண்டே இருக்கிறது.
மதுரைக்கே உரித்தான வட்டார பேச்சு மொழியும், நையாண்டியும், உணவுகளும், விழாக்களும் கொண்டாட்டங்களும் மற்ற பிரதேச காரர்களுக்கு ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, எப்போதும் புதிதாய் தோற்றம் தருகிறது, இந்த பழமையான நகரம்.
சமீபத்தில் ஒரு கல்வெட்டை நாயக்கர் அரண்மனையில் பார்க்க நேர்ந்தது. ( "நாயக்கர் மஹால் ” என மாற்றி அழைக்க வைத்தது யார்? ) ஆர்வத்துடன் அந்த கல்வெட்டு குறித்த வரலாற்றை தேட ஆரம்பித்தேன்.
ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்தன.
அந்த கல்வெட்டு ஒரு ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இவர் சென்னை மாஹானத்தின் ஆட்சியராக (1810-19) இருந்திருக்கிறார். தமிழ் ஆர்வம் காரணமாக இம்மொழியை கற்றுக்கொண்டார். அதோடுகூட திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையும் எழுதியுள்ளார். (புத்தகம் பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை)
1819 ம் வாக்கில் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதை போக்க சென்னை பகுதியில் இருபத்தி ஐந்திற்கு மேற்பட்ட கிணறுகளை வெட்ட ஏற்பாடு செய்தார். அதில் ஒரு இடம் இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் கிணறு அங்கு பதிக்கப்பட்ட கல்வெட்டே நாயக்கர் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு.
இந்த கல்வெட்டில் என்ன எழுதி இருக்கிறது ? (முழுமையாக தெரியவில்லை)
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
....... ....... .........
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து''
மேற்படி கல்வெட்டை ஒரு ஆய்வின் போது கண்டறிந்து வெளிப்படுத்தியவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் அவர்கள் என அறிகிறோம்.
மேலும் எல்லிஸ் துரையின் கல்லறை திண்டுகல்லில் உள்ளதாக தெரிகிறது அந்த கல்லறையின் மீது பொறிக்கப்பட்ட வாசகம்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ்செப்பியருள்
குறணூறு ளறப்பாலினுக்குத்
தங்கு பலநூறு தாரண கடலைப் பெய்
திங்கிலீசு தனிலிணங்க மொழிபெயர்த்தோன்''
அவரின் தமிழார்வத்தை பறைசாற்றுகிறது.
கொசுறு தகவல் :
எல்லிஸ் தமிழை மட்டுமல்ல வடமொழியும் பயின்றார். ( வடமொழி = இந்தி அல்லது சமஸ்கிருதமாக இருக்கலாம்?!)
தொடர்புடைய பதிவு : மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்
அரிய பல தகவல்கள்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றிங்க...எல்லிஸ் துரையின் கல்லறை புகைப்படம் கிடைத்தால் அனுப்பி வையுங்க பதிவில் சேர்த்துக்கலாம்.
ReplyDeleteஇவர்தான் சென்னை "எல்லிஸ் ரோடு" புகழ் எல்லிஸ் துரையோ??
ReplyDeleteஇவர் வேற எல்லிஸ். கல்கத்தாவில் முதல் கவுன்ஸில் அமைத்தவர் 1692ல் சென்னைக்கு வந்தவர். இவரோட பெயரால் இந்த எல்லிஸ் ரோடு அழைக்கப்படுதுன்னு சொல்றாங்க.
Deleteகிளைவ் ஹவுஸ் என்கிற செயின் ஜார்ஜ் கோட்டை 1609 லேயே பிரிடிஸ் காரங்களால மதராஸபட்டிணத்தில் கட்டப்பட்டது.
Deleteஅரிய தகவல்..நாயக்கர் மஹால் போயிருக்கேன்...அங்க எங்க போய் கல்வெட்டுகளை பார்க்கிறது...சுத்தி முத்தி இருக்கிற அம்மணிகளை பார்க்கவே நேரம் இல்ல...ஹிஹிஹி
ReplyDeleteஅதானே...!! :)
Deleteஎன்னை கவர்ந்த இடங்களில் நாயக்கர் மஹாலும் ஒன்று. அப்பேர் வரக்காரணத்தை அறிய தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஎல்லோரும் என்ன ரகசியம்? எங்க ரகசியம்? ன்னுட்டு கேட்கிறாங்க ராஜி.. நீங்களுமா?. அரண்மனை என்று அழைக்காமல் மாஹால் என்று ஏன் அழைக்கிறாங்க ? எனக்கு நானே கேட்டது அது.
Deleteதமிழார்வத்தை பறைசாற்றும் ஆருமையான பகிர்வுகள்...
ReplyDeleteரொம்ப நன்றிங்க ராஜேஸ்வரி மேடம்.
Deleteஅரிய தகவல் சார் என் முக நூல் பக்கத்திலும் பகிர்கிறேன்....
ReplyDeleteநன்றிங்க எழில் !
Delete